KFC சிக்கன் சமையல் குறிப்பு - படங்களுடன் - 14200 | அறுசுவை

KFC சிக்கன்

வழங்கியவர் : Jaleela Banu
தேதி : திங்கள், 21/12/2009 - 11:05
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3.732145
56 votes
Your rating: None

 • <b> ஊற வைக்க: </b>
 • எலும்புடன் ஒரு முழு கோழி (துண்டுகள் போட்டது) (அ) லெக் பீஸ் - ஒரு கிலோ
 • வெங்காயம் - ஒன்று (பெரியது)
 • தக்காளி- ஒன்று (பெரியது)
 • இஞ்சி - மூன்று அங்குல துண்டு
 • பூண்டு - ஆறு பல்
 • பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • <b> டிப் செய்து பொரிக்க: </b>
 • மைதா - ஒரு கப்
 • கார்ன் ப்ளார் - கால் கப்
 • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
 • உப்பு - அரை தேக்கரண்டி
 • எண்ணெய் + பட்டர் - பொரிக்க தேவையான அளவு

வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த விழுது மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் எடுத்து நன்கு தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும்.

டிப் செய்ய கொடுத்துள்ள பொருட்களை கலந்து அதில் தண்ணீர் வடித்து வைத்திருக்கும் சிக்கனை எல்லா இடத்திலும் படும்படி டிப் செய்யவும்.

வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது தீயை மிதமாக வைத்து மூடி போட்டு நன்கு பொரிய விட்டு பிறகு தீயை அதிகமாக வைத்து பொரித்து எடுக்கவும்.

மொறுமொறு சுவையான KFC சிக்கன் ரெடி. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இந்த குறிப்பினை அவர் நான்கு ஐந்து முறை செய்து பார்த்து அனைவருக்கும் பிடித்திருந்ததால் இதை நம்முடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது கடையில் கிடைப்பது போல் இல்லை என்றாலும் ஓரளவிற்கு சுவை கிடைக்கும், குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பருப்பு சாதத்திற்கு தொட்டுகொள்ள பொருத்தமாக இருக்கும். குபூஸுடனும் சாப்பிடலாம். மசாலா வகைகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்து கொள்ளலாம்.

இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..kfc

உஙல்லட kfcசிக்கெ ன்recepie parthan really iwill try..

ஜெலிலா KFC சிக்கென்

ஜெலிலா KFC சிக்கென் பார்க்க நன்றாக இருக்கின்றது.நானும் இதே முறைப்படிதான் செய்வேன். ஆனால் மசாலா போட்டு பிரட்டி எண்ணையில் பொரிப்பேன்.அவ்வளவுதான். இப்படி மசாலாவில் நீர் விட்டு மூன்று மணிநேரம் ஊறவிட்டு, பின் மைதா மாவில் பிரட்டி எல்லாம் செய்வத்தில்லை.உங்கள் முறை வித்தியாசமாக இருக்கின்றது.நிச்சயம் நல்லாய் இருக்குமென நினைக்கின்றேன். செய்து பார்த்துவிட்டு வருகின்றேன்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் ஜலீலா அக்கா,

ஹாய் ஜலீலா அக்கா, உங்கள் KFC சிக்கன் அருமை. KFC சிக்கன் எனக்கு பிடித்த உணவு ஆனால் எப்படி செய்வதென்று தெரியாமல் இருந்தேன். இன்று உங்கள் KFC சிக்கன் குறிப்பு எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது நிச்சயம் இதனை செய்து பார்ப்பேன்.

We cannot find ourselves if we are always looking for someone else.

சூப்பர்

ஜலீலாக்கா,கலக்கல் ரெசிபி......
சூப்பரா பார்க்கும்போதே சாப்பிட தோணுது..
அருமையான குறிப்பு
வாழ்த்துக்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஜலீலா சூப்பர்

பார்க்கவே சூப்பராக இருக்கு.ஹோம் மேட் kfc சிக்கன் செய்து பார்க்கணும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஜலீலா மேடம்....

ஜலீலா மேடம் நலமாக இருக்கின்றீர்களா?நல்ல குறிப்பினை அனுப்பியிருக்கின்றீர்கள்.பார்க்க நன்றாக உள்ளது.
நானும் இரண்டு,மூன்று முறை வீட்டில் செய்து இருக்கின்றேன்.அரைத்து தண்ணீர் ஊற்றி சிக்கன் துண்டுகளை மூழ்கவிடுவதன் காரணம் தெரிந்துக் கொள்ளலாமா..?
நான் முட்டை,வெள்ளை மிளகுத்தூள்,தக்காளி சாஸ்,உப்பு,எலுமிச்சை இவற்றை சிக்கனுடன் பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைத்து,பின் டிப் செய்து பொரிப்பேன்.டிப் மாவிலும் ப்ரட் கிரம்ஸ் கலப்பேன்.அதுவும் அந்த டேஸ்ட்டிற்க்கு வரும்.
இதற்கான காரணமும் தெரிந்தால் செய்து பார்ப்பேன்.
என் விளக்க முறையை இங்கு சொல்லி கேட்டதால்..தவறாக எண்ண வேண்டாம்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கே எஃப் சி

இந்த பிராஸ்டட் சிக்கனில் தக்காளி கூட சேர்ப்பார்களா?செய்து பார்த்து விடுவோம்.

arusuvai is a wonderful website

KFC

முதலில் கருத்து தெரிவித்தது யாருன்னு தெரியல , நன்றி/

யோகராணி இது மசாலாமட்டும் போட்டுபிரட்டி செய்தால் அது எப்பவும் பொரிக்கும் சிக்கன் பிரை போல் இருக்கும்.

டியர் அமராவதில் , கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. செய்து பாருங்கள்.

இளவரசி மிக்க நன்றி.

ஆசியா தவறாமல் கருத்து தெரிவித்து தோழிகளை மகிழ்விப்பதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை.

அப்சாரா, அருசுவையிலே நீங்கள் சொல்லும் மசாலாக்கல் போட்டு நிறைய சிக்கன் பிரை சொல்லி இருக்கேன் படத்துடனும் இருக்கு பாருஙக்ள்.
மசாலா சேர்த்தால் கிரிஸ்பி சிக்கன் பிரைக்கும், kfc சிக்கனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
பிடித்திருந்தால் செய்து பாருங்கள்.

ஸாதிகா அக்கா kfc சிக்கனை மொரு மொரு பகுதியை பிரித்தால் அதில் உள்ளே ஒரு மசாலாவும் இருக்காது.அப்படி தான் இதுவும் இருக்கும்.

இது உஙக்லுக்கு பிடிக்குதோ இல்லையோ உஙக்ள் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

Jaleelakamal