அழகிய செராமிக் பெயிண்டிங் செய்வது எப்படி?

தேதி: December 21, 2009

4
Average: 4 (4 votes)

 

பெயிண்ட் செய்வதற்கு செராமிக் டம்ளர் / கப் - 1
மெதய்லேட்டட் ஸ்பிரிட் (methylated spirit)
பேப்பர் சர்வியட்
செராமிக் பெயிண்ட் - பச்சை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு, ப்ரௌன் மற்றும் கோல்டு வர்ணங்கள்
பிரஷ் - எண் 1 அல்லது 2
டூத்பிக்
காட்டன் பட்ஸ்
கையுறை

 

கப்பில் ஸ்டிக்கர் (விலை) ஒட்டி இருந்தால் அதனை எடுத்துவிட்டு, அதில் ஒட்டியிருக்கும் க்ளுவையும் முற்றிலுமாக நீக்கிவிடவும். ஸ்பிரிட் தொட்டுத் துடைத்தால் சுலபமாக வரும். பிறகு கப்பை நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளவும். மேசையில் ஏதாவது பழைய பேப்பரை விரித்து வைக்கவும். ஏனெனில் பெயிண்ட் சிந்தினால் சுத்தம் செய்யும் வேலை இருக்காது. (நியூஸ்பேப்பர் பயன்படுத்தினால் அதில் உள்ள கறுப்பு மை கப்பில் சிலநேரங்களில் ஒட்டிக் கொள்ளும். காலண்டர் பேப்பரின் பின் பக்கம் அல்லது மை விடாத ஏதாவது ஃப்ளைன் பேப்பரை பயன்படுத்தவும்.)
கையுறையை மாட்டிக் கொண்டு பெயிண்ட் செய்ய இருக்கும் கப்பின் மேற்பரப்பை ஸ்பிரிட் கொண்டு துடைத்துக் கொள்ளவும். இது கப்பில் பெயிண்டை நன்றாக பிடித்துக் கொள்ள உதவும். துடைப்பதற்கு பஞ்சு (lint) விடாத பேப்பர் சர்வியட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் கப்பில் சிறிய துகள்கள் விடுபட்டு இருந்தாலும் பிற்பாடு பேக் பண்ணும் போது புகைய ஆரம்பித்து, புகை பெயிண்ட் நிறத்தை மாற்றி அழகைக் குறைத்து விடும்.
ப்ரஷ் முனையில் சிவப்புநிற பெயிண்டை தொட்டுக் கொண்டு முதலில் பூ இதழ்களின் வெளிக் கோடுகளை வரைந்துக் கொள்ளவும். உள்ளேயும் அதே சிவப்பு நிறத்தால் பெயிண்ட் செய்துக் கொள்ளவும்.
இதில் ஏற்படும் தவறுகளை காட்டன்பட் கொண்டு உடனே துடைத்து விட்டு வேறு சுத்தமான காட்டன் பட் ஒன்றில் சிறிது ஸ்பிரிட் தொட்டுக் கொண்டு சுத்தம் செய்து கொள்ளலாம். பெயிண்ட் காய ஆரம்பித்து இருந்தால் சுலபமாக டூத் பிக் முனையினால் சுரண்டி திருத்தம் செய்யலாம். கூடுமானவரை பெயிண்ட் செய்யும் பகுதியில் விரல்கள் படாமல் பார்த்துக் கொள்ளவும்.
பூக்களை சுற்றி தேவையான இடங்களில் இலைகளையும் இதுப்போல் வரைந்துக் கொள்ளவும்.
பூக்கள் வரைந்த பகுதிக்கு வலது பக்கத்தில் சற்று இடைவெளிவிட்டு டூத் பிக் முனையில் கறுப்பு பெயிண்டை தொட்டுக்கொண்டு பிடித்த வாசகங்களின் எழுத்துகளை எழுதிக் கொள்ளவும். (கோடாக இழுக்காமல் தொட்டுத் தொட்டு வைக்க வேண்டும்.)
ப்ரௌன் நிறப் பெயிண்டினால் கோன் போன்ற டிசைனை சிறிய இதழ்கள் போல் வரைந்து கொள்ளவும்.
டூத்பிக்கில் பச்சைநிறப் பெயிண்டை தொட்டு கொண்டு கிளைகளை வரைந்து கொள்ளவும்.
இப்போது கோன்கள் போல் வரைந்திருக்கும் பெயிண்டின் ஈரத்தன்மை காய்ந்து இருக்கும். டூத்பிக் கொண்டு அதன் உட்புறத்தில் உள்ள வளைவான கோடுகளைக் கவனமாகச் சுரண்டி எடுத்து விடவும்.
டூத்பிக் முனையில் சிவப்புப் பெயிண்டை தொட்டுக் கொண்டு அங்கங்கே காய்கள் போன்று வரைந்துக் கொள்ளவும். பூவின் நடுவில் மஞ்சள் நிறத்தால் மகரந்தம் போல் வைக்கவும்.
இதழ்களிலும், இலைகளிலும் கோல்டுநிற பெயிண்டை கொண்டு நரம்புகளை வரைந்து கொள்ளவும். கோன் உள்ளேயும் சில வரிகள் வரைந்து கொள்ளவும். பெரிய காய்களில் ஒரு சிறு புள்ளி மட்டும் வைத்து விடவும். எழுத்துகளின் ஓரங்களில் அங்கங்கே கோல்டு பெயிண்டை வைக்கவும்.
பெயிண்ட் செய்து முடிந்து குறைந்தது 48 மணி நேரம் இந்த கப்பை காயவிடவும். பிறகு பேக் செய்து எடுக்கவும்.(பெயிண்ட் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றவும்). எப்பொழுதும் பேக் செய்ய வேண்டிய செராமிக்கை வைத்த பின்புதான் அவனை ஆன் செய்ய வேண்டும். அவனை 165 டிகிரி செல்சியஸ் (325 பாகை F) அளவுக்கு செட் செய்து, அவன் சரியான வெப்பநிலையை அடைந்த நேரத்தில் இருந்து (இண்டிகேட்டர் லைட் அணைந்த நேரம்) 10 நிமிடம் கழித்து அணைத்து விடவும்.(பேக் செய்யும் நேரமும் பெயிண்ட் தயாரிப்புகளைப் பொறுத்து வேறுபடும். விபரம் அறிந்து கொள்ள பெயிண்ட் பாட்டில் லேபிளைப் படிக்கவும். பயன்படுத்தும் எல்லா கலர்களும் ஒரே பிராண்ட் ஆகஇருப்பது போல் பார்த்து வாங்கினால்தான் பேக்கிங் சீராக இருக்கும்.) பேக் செய்த பின்னால் அவனிலேயே குளிர விடவும்.
செராமிக் டம்ளரில் வரையக்கூடிய அழகிய பெயிண்டிங் தயார். அழகாக, உபயோகமுள்ள இது போன்ற பொருளை கிறிஸ்துமஸ்க்கு அன்பளிப்பாக வழங்கலாம். அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள் இந்த செராமிக் பெயிண்டிங்கை செய்து காட்டியுள்ளார். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பெயிண்டிங் சூப்பர்....
gift க்கு நன்றி...

நன்றி தேன். :)
அப்படியே அங்கே 'உங்கள்' கதையையும் சொல்லிவிட்டுப் போங்க.
உங்கள் குடும்பத்தார்க்கு நத்தார் கால வாழ்த்துக்கள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

excellent imma.நேரம் இருந்தால் செய்து பார்க்கலாம் தான்.என் மகளிடம் தேவையான பொருட்கள் உள்ளன.இந்த winter holidays -ல் செய்து பார்க்க சொல்லனும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்க பெயிண்ட்டிங் இமா மேம்!.
என் பெண்ணிடம் காண்பித்தால் செய்துபார்க்க ரொம்ப ஆவல் படுவாள். தேவையான பொருட்கள் கடையில் கிடைத்துவிட்டால் கட்டாயம் செய்து பார்த்து சொல்கிறேன். நன்றி!.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

Imma, very nice painting work!
vaany

நன்றி ஆசியா உமர். உங்கள் மகளுக்கு செராமிக் பெய்ன்டிங் புதிது இல்லை. அப்போ இதை விட நன்றாகப் பண்ணுவார்கள். :)

மேம் வேண்டாமே சுஸ்ரீ. :) நிச்சயம் அங்கு கிடைக்கும். நான் பயன்படுத்திய பெய்ன்ட் USA தயாரிப்புதான். பாராட்டுக்கு நன்றி.

நன்றி வாணி. :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta