தோழிகள் யாராவது தெரிந்தால்

தோழிகள் யாராவது பிரியாணிக்கி வைக்கும் கத்தரிக்காய் தொக்கு தெரிந்தால் அல்லது அதன் லிங்க் தெரிந்தால் சொல்லுங்கள் pls

தோழிகள் யாராவது பிரியாணிக்கி வைக்கும் கத்தரிக்காய் தொக்கு தெரிந்தால் அல்லது அதன் லிங்க் தெரிந்தால் சொல்லுங்கள் pls
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

கத்தரிக்காய் தொக்கு - http://www.arusuvai.com/tamil/node/12024

வெள்ளை கத்திரிக்காய் தொக்கு - http://www.arusuvai.com/tamil/node/7969

தோழிகளுக்கு........இன்னைக்கு இடியாப்பம் செய்யலானு இருக்கேன்....இனிப்பா சாப்பிட தேங்காய் பால் ok...ஆனா காரத்துக்கு ஏதாது குருமா இல்ல வேற என்ன நல்லா இருக்கும்னு சொல்லுங்க.....அப்படியே link இருந்தாலும் அனுப்பவும் pls...

கெளசல்யா நான் இதுவே உங்களுடன் முதல் முறையாக பேசுகிறேன்பா. வெஜ் குருமா நல்லா இருக்கும்பா. லின்க் தேடிகிட்டு தான் இருக்கேன். கிடைத்ததும் சொல்கிறேன்பா.

ஹாய் யாழினி......நன்றி.......ஆனா நம்ம ஏற்கனவே பேசிருக்கோம்.......உங்க name நல்லா இருக்குனு நான் சொன்னதா நியாபகம்

கௌசல்யா நான் இடியாப்பத்திற்கு எப்போதுமே மோர்க்குளம்புதான் வைப்பேன். நன்றாக இருக்கும். அதுவும் என் கணவருக்கு இந்த காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்.

அஞ்சு நீங்கள் சொல்லும் காம்பினேஷன் வித்தியாசமா இருக்கே பவியோட ரவா தோசை ரசம் போல. ட்ரை பண்ணிட வேண்டியது தான்

கெளஸி அப்படியா சாரிப்பா மறந்துட்டேன். கெளஸி நீங்க குருமா பக்கத்தில் போய் பாருங்களேன் அதில் உள்ள காய்கறி குருமா நிறைய இடியாப்பத்துடன் பொருந்தும்பா.

ஹாய் தோழி.....
மோர் குழம்பு சாப்பாடுக்கு நல்லா இருக்கும்....ஆனா இடியாப்பம் இப்ப தான் முதல் தடவையா செய்ய போறேன்....அதுனால வேற ஏதாது சொல்லுங்களே.....என்னவர் சாப்பிட்டு நல்லா இருக்குனு பாரட்டறமாறி.....

கண்டிப்பா பாக்கறேன்...

எங்க பெரியப்பா கல்யாண சமையல் contract எடுத்து செய்பவர். என் கல்யாணத்தில் மாலை டிபன் கூட இந்த காமினேஷன் தான். இஞ்சி பூண்டு தேங்காய் எல்லாம் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்