கிறிஸ்துமஸ் ரீத்

தேதி: December 23, 2009

4
Average: 4 (4 votes)

 

குக்கர் கேஸ்கட் - ஒன்று (பெரியது)
குக்கர் கேஸ்கட் - ஒன்று (சிறியது)
செயற்கை பூக்கள் - 5
செயற்கை இலைகள் - 4
பச்சை வண்ண ஃப்ளோரல் டேப் - ஒன்று
செல்லோ டேப் - ஒன்று
பல வண்ண சேடின் ரிப்பன் (விருப்பமான வண்ணங்களில்) - 2 மீட்டர்
பெல் - 2
பச்சை வண்ண தோரணம் - ஒன்று

 

கிறிஸ்துமஸ் ரீத் செய்வதற்கு மேற்சொன்ன தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
முதலில் பெரிய கேஸ்கட்டினுள் சிறிய கேஸ்கட்டினை பொருத்திக் கொள்ளவும். அதன் நான்கு பக்கமும் செல்லோ டேப்பினால் ஒட்டவும்.
பச்சை வண்ண தோரணத்தை கேஸ்கட்டின் மேல் வைத்து நூலினால் சுற்றி கட்டவும்.
பிறகு அதன் மேல் செயற்கை இலைகளை விருப்பப்பட்ட இடங்களில் வைத்து ஃப்ளோரல் டேப்பால் ஒட்டவும்.
அதேப்போல் செயற்கைப் பூக்களையும் ஒட்டி வைக்கவும்.
சேடின் ரிப்பன் கொண்டு ஒரு போவ் போல செய்து அதனை பூக்களின் அடியில் கட்டவும்.
பெல்லை வளையத்தின் அடியில் கட்டிவிடவும்.
கடைசியாக வளையத்தை மாட்டும் இடத்தில் பச்சைநிற சேடின் ரிப்பனை வளையம் போல் செய்து கட்டவும்.
சுலபமாக செய்துவிடக்கூடிய அழகிய கிறிஸ்துமஸ் ரீத் தயார்.
அறுசுவையின் கூட்டாஞ்சோறு பகுதியில் 601 குறிப்புகள் வழங்கி, மன்றத்தில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும் கொடுத்து வரும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சமையலில் 28 வருடங்கள் அனுபவம் உடையவர். சைவம், அசைவம் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். இப்போது அறுசுவை நேயர்களுக்காக நீங்களும் செய்யலாம் பகுதிக்கு இந்த கிறிஸ்துமஸ் ரீத் செய்முறையை வழங்கியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கலக்கிடிங்க. ரொம்ப அழகா சிம்பிளா எல்லாரும் எளிதில் செய்ய கூடியது. எப்படி இருக்கிங்க?
நான் கூட என்னவெல்லாமோ மெதட்டில் செய்திருக்கேன். வாங்க செல்வி அக்கா இனிமேல் வந்து நிறய்ய க்ராப்ட்ஸ் எல்லாம் எடுத்து விடுங்க. சமையலில் உங்க ருசியை நாங்க நல்ல சமைத்து ருசித்து கொண்டிருக்கோம், இதிலும் வந்து அசத்துங்க.
இந்த ஐடியா வரவில்லையே. இதற்க்கு தான் நம்ம அருசுவை மூத்த உறுப்பினர்கள் வந்து ஏதாவது சொல்லி குடுத்தால் என்னை மாதிரி கத்துகுட்டிக்கு யூஸ்ஸாக இருக்கும். என் பொன்னுக்கு ஸ்கூலில் ஏதாவது இந்த மாதிரி ப்ராஜக்ட்ஸ் செய்ய சொல்வாங்க. கண்டிப்ப நான் செய்துவிட்டு சொல்கிறேன்.நன்றி அக்கா.ஹேப்பி ஹாலிடேஸ்.

அன்பு செல்வி,

ரீத் அழகாக இருக்கிறது. வீட்டுக்கு அடையாளம் சொல்லிட்டீங்க, அப்படியே உள்ளே வரப் போறோம் எல்லோரும். விருந்து தயார்தானே? :)
படத்தில் இருப்பது யார் நீங்களா, உங்கள் பெண்ணா? :)
உங்கள் கைத்திறன் ஆல்பத்தில் பார்த்து இருக்கிறேன், எல்லாம் அழகாக இருக்கும். தொடரட்டும் உங்கள் கிராஃப்ட் பயணம்.

உங்களுக்கும் உங்கள்குடும்பத்தார்க்கும் இனிய நத்தார் கால வாழ்த்துக்கள். :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta