ஜீரா பூரி

தேதி: December 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

மைதா - 1/2 கிலோ
சீனி - 2 1/2 கப்
முந்திரி - 20
ஏலக்காய் - 7
கேசரி பவுடர் - 1/4 தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 1/2 கப்


 

மைதாமாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் கேசரி பவுடரை கலந்துக் கொள்ளவும். ஒரு பெரிய தட்டில் சலித்த மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் கலர் கலந்து வைத்திருக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும். பிசையும் போது நன்கு அடித்து பிசைந்து மிருதுவாகும் வரை பிசைந்துக் கொள்ளவும். கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தொட்டுக் கொள்ளவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாதியாக தேய்க்கவும். அதை அப்படியே சுருட்டி கத்தியால் மூன்று பாகங்களாக நறுக்கவும்.
நறுக்கிய துண்டுகளை எடுத்து செங்குத்தாக வைத்து அழுத்தி சப்பாத்தி கட்டையில் வைத்து அதிகம் அழுத்தி தேய்க்காமல் வட்டமாக தேய்த்து சிறிய பூரிகளாக செய்து வைத்துக் கொள்ளவும்..
ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றினால் பாகு வாசனையாக இருக்கும். பாகுடன் பொடி செய்த ஏலக்காயை போட்டு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு இருப்புறமும் வேகவிட்டு சிவக்க விடாமல் எடுக்கவும்.
பிறகு பொரித்த எடுத்த பூரிகளை செய்து வைத்திருக்கும் ஜீராவில் 3 நிமிடம் போட்டு வைக்கவும்.
பூரியில் ஜீரா நன்கு ஊறியதும் 3 நிமிடம் கழித்து, பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து ஒவ்வொரு பூரியின் மேலேயும் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு மற்றும் குங்குமப்பூ தூவி பரிமாறவும். சுவையான ஜீரா பூரி தயார். இந்த குறிப்பை அறுவைநேயர்களுக்காக செய்து காட்டியவர் <b>திருமதி. தேவசேனா தியாகராஜன் </b>அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா என் பேரில் அத்தனை பேரை இதுவரை சந்திச்சதில்லை. இங்கே அறுசுவையில் என்னடான்னா, டிசென்(தேவசேனா), இப்ப இங்கே தேவசேனா தியாகராஜன்னு இன்னொருத்தருமா? இதுவரை டைரக்டர் ஸ்ரீதரின் மனைவி பேர் தேவசேனா, என் கூட 7 வது படிச்ச ஒரு தேவசேனா, காலேஜ் சீனியர் தேவசேனான்னு மொத்தமே 3 பேர்தான் அறுசுவை வரும்வரை எனக்குத் தெரிஞ்சு இந்தப் பேர் உள்ளவங்க. ரொம்ப அதிகம் பொதுவில் இல்லாத இந்தப் பேரிலேயே அறுசுவையில் 3 பேர் இருக்கோம்னா மத்த பொதுவான பேர்களில் நிச்சயம் ஆயிரக்கணக்கில் இருப்பாங்கன்னு தோணுது. தேவசேனா தியாகராஜன், உங்க சமையல் குறிப்பு ரொம்ப சிம்பிளா நல்லா இருக்கு.