வெஜ் டோம் யாம் சூப்(veg tom yam soup)

தேதி: December 26, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

அசைவ பிரியர்கள் இறால், நண்டு, கணவாய் சேர்த்து சீஃபுட் டோம் யாம் சூப்பாக இதே முறையில் செய்யலாம்.

 

கேரட் - கால் கப் (மெலிதான சதுரங்களாக நறுக்கியது)
பேபி கார்ன் - ஒன்று (மெலிதாக நறுக்கவும்)
முட்டை கோஸ் - அரை கப் (சதுரங்களாக நறுக்கியது)
தக்காளி - ஒன்று
காலிஃப்ளவர் - கால் கப் (சிறு சிறு பூக்களாக நறுக்கியது)
கடுகு கீரை - 2 தண்டுகள்
மிளகாய் வற்றல் - 5
சின்னவெங்காயம் - 5 அல்லது 6
பூண்டு - 3 அல்லது 4 பல்
புளி - சுண்டைக்காய் அளவு
பாம் சுகர்(palm sugar) அல்லது பிரவுன் சீனி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
லெமன் கிராஸ் - ஒன்று
எலுமிச்சை இலைகள் - 3
மல்லிக்கீரையின் வேர்பகுதி - 3
இஞ்சி துண்டு - ஒரு இன்ச் அளவு
பச்சை மிளகாய் - ஒன்று
வெஜிடபிள் ஸ்டாக் கியூப் - 1/2
தேங்காய்ப்பால்(விருப்பப்பட்டால்) - கால் கப்
உப்பு - தேவையான அளவு


 

காய்கறிகள் மற்றும் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் கால் தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். ஆறியதும் அதனுடன் பாம் சுகர் அல்லது பிரவுன் சீனி, கால் தேக்கரண்டி உப்பு, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அரைத்த கலவையை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கி தனியே வைக்கவும்.
சூப் செய்யும் பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, வெஜ் ஸ்டாக் கியூப், லெமன் கிராஸ்(வெளிப்புறத்தில் உள்ள இரு இதழ்களை உரித்து விட்டு தடிமனான அடிப்பகுதியை வெட்டி கத்தியின் கைப்பிடியால் லேசாக இடித்துக் கொள்ளவும்), மெலிதாக நறுக்கின எலுமிச்சை இலைகள், பச்சை மிளகாய்(நறுக்க வேண்டாம்), மெலிதாக நறுக்கின இஞ்சி, மல்லிக்கீரையின் வேர்ப்பகுதி சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
மிளகாய் கலவையிலிருந்து முக்கால் தேக்கரண்டி சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.(மிளகாய் வற்றலின் காரத்தைப் பொறுத்து கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளவும்)
கேரட் மற்றும் பேபி கார்ன் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்.
அதனுடன் காலிஃப்ளவர் மற்றும் நான்காக நறுக்கின தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.
முட்டைகோஸ் மற்றும் கடுகு கீரை சேர்த்து ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கி விடவும். இந்த நேரத்தில் கால் கப் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கினால் சுவை கூடும்.
லெமன் கிராசை நீக்கிவிட்டு சூடாக பரிமாறவும். சூடான, சுவையான வெஜ் டோம் யாம் சூப் ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b>திருமதி. கவிசிவா </b>அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.

இங்கே இரண்டு பேருக்கான அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. அவரவர் விருப்பம் போல் காய்கறிகள் சேர்க்கலாம். வேகும் நேரத்தைப் பொறுத்து அவற்றை முதலிலேயோ அல்லது கடைசியோ சேர்ப்பது முக்கியம். காய் அதிகம் வெந்து விட்டால் சுவை குறையும். முக்கால் பாகம் வெந்தால் போதும். டயட் இருப்பவர்கள் இந்த சூப்போடு(தேங்காய்ப்பால் சேர்க்காமல்) ஒன்று அல்லது இரண்டு ஸ்லைஸ் ஹோல் மீல் ப்ரெட் சாப்பிட்டால் வயிறு நிறைவாக இருக்கும். கலோரியும் குறைவு. ஒரு பெரிய பவுலில் வேகவைத்த ரைஸ் நூடுல்ஸ் போட்டு அதன் மீது இந்த சூப்பை ஊற்றி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். நல்ல சிவப்பு நிற மிளகாய் வற்றல் பயன்படுத்தினால் சூப் நல்ல சிவந்த நிறத்தில் வரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக வெளியிட்ட அட்மினுக்கும் குழுவினருக்கும் நன்றிகள் பல!

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி சிவா!சூப் பார்க்க நன்றாக இருக்கின்றது.செய்வதும் சுலபமாக தெரிகின்றது. நேரமுள்ள நேரம் செய்து பார்க்கின்றேன்.நல்ல ரேசப்பி கொடுத்தமைக்கு நன்றி.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கவி, நாளை வெஜ் டோம் யாம் சூப்(veg tom yam soup) செய்யப் போகிறேன். கடுகுக்கீரை என்றால் என்ன? தயவு செய்து தெளிவுப்படுத்தவும்
Save the Energy for the future generation

Save the Energy for the future generation

இந்திரா நீங்க நாளையே செய்யப் போவதால் கவி வருவதற்கு முன்.. கடுகு கீரை என்றால் Mustard Greens என்று கடைகளில் விற்கும். அந்த கீரை கிடைக்கவில்லையென்றால் அவசரத்திற்கு கைவசம் இருக்கும் கீரையை பயன் படுத்துங்கள். (சரிதானே கவி)

நன்றி வானதி,
காய்கறி கடையில் முயர்சித்துப் பார்க்கிறேன்.இதுவரை நான் பார்த்ததே இல்லை. Save the Energy for the future generation

Save the Energy for the future generation

யோகராணி மிக்க நன்றி. கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள். கார சாரமாக சுவையாக இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சாரி இந்திரா அக்கா! 10 நாள் கழித்து இப்போதுதான் அறுசுவைக்கு வருகிறேன். கடுகு கீரை என்பது வின்னி சொன்ன mustard greens தான். கிடைக்காவிட்டால் பரவாயில்லை. சேர்க்கவில்லையென்றாலும் சுவையில் வித்தியாசம் இருக்காது. எலுமிச்சை இலையும் லெமன் கிராசும் சில்லி பேஸ்ட்டும்தான் ரொம்ப முக்கியம்.

எனக்காக பதிலளித்ததற்கு மிக்க நன்றி வின்னி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி,பெரிய பையன் இருக்கும் போது செய்யவேண்டும் என்று அவசரமாக இருந்தப் பொருள்களை வைத்து செய்தேன்.நன்றாக இருப்பதாக எல்லோரும் சொன்னார்கள்.நல்ல குறிப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. கடுகுக் கீரை வாங்கி இன்னும் ஒரு முறைச் செய்து விட்டு பின்னோட்டம் தருகிறேன்.Save the Energy for the future generation

Save the Energy for the future generation

SUPERB SIR
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com