சாக்லேட் கேக்

தேதி: April 5, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 200 கிராம்
வெண்ணெய் - 180 கிராம்
பொடித்த சர்க்கரை - 180 கிராம்
முட்டை - 4
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
கோகோ - ஒரு மேசைக்கரண்டி
பால் - தேவையான அளவு


 

வெண்ணெயையும் பொடித்த சர்க்கரையையும் நன்றாகக் குழைக்கவும்.
முட்டைகளை நன்றாக அடிக்கவும். மாவையும் பேக்கிங் பவுடரையும் இருமுறை சலித்துக் கொள்ளவும்.
வெண்ணெயையும் சர்க்கரையையும் குழைத்த கலவையில் அடித்த முட்டைகளை சிறிது சிறிதாக ஊற்றி, தொடர்ந்து அடிக்கவும்.
குழைத்த கலவையுடன் சலித்த மாவை சிறிது பாலுடன் சேர்த்து இலேசாக கலக்கவும்.
இதய வடிவமுள்ள இரு கேக் டின்னில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.
கேக் கிண்ணத்தில் கலவையை சமமாகப் போடவும்.
375 டிகிரி F சூட்டில் சுமார் 40 ல் இருந்து 45 நிமிடம் வரை பேக் செய்யவும்.
கேக்குகள் நன்றாக பேக் ஆனவுடன் ஆறவிடவும்.
வெண்ணெய் ஐசிங் கலவையில் 2 தேக்கரண்டி கோகோவை கலந்து குழைத்துக் கொள்ளவும்.
கேக்கின் மேல் பக்கத்திலும் பக்கங்களிலும் நன்றாக மழமழவென்று ஐசிங்கை தடவவும்.
பிடித்தமான அச்சினால் பூவேலை செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கரோலின்! தீபாவளிக்கு உங்கள் சொக்லேட் கேக்
செய்து சாப்பிடோம். குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்
நல்ல ரேசப்பி நன்றி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.