நெல்லிக்காய் ரைஸ் வித் சீனிக்கிழங்கு சிப்ஸ்

தேதி: December 29, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

நெல்லிக்காயில் விட்டமின் சி சத்து மிகுந்துள்ளது. நெல்லிக்காய் இதயநோய், குடற்புண், தொற்றுநோய், நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து. நன்கு முடி வளரவும் உதவும். தினமொரு நெல்லிக்காய் சாப்பிடுவோம்.

 

நெல்லிக்காய் – 5
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைபருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
<b> சிப்ஸ் செய்ய தேவையானவை: </b>
சீனிக்கிழங்கு – ஒன்று
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நெல்லிக்காயை விதையை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதை வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாறு எடுக்கவும்.
வடிகட்டி வைத்திருக்கும் சாறுடன் மஞ்சள் தூள், உப்பு கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு வறுத்து அதில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் துண்டுகளை போடவும்.
பின்னர் அதில் நெல்லிக்காய் சாறை ஊற்றி லேசாக நுரை வந்ததும் இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஆற வைத்து உதிர்த்த சாதத்தை போட்டு நெல்லிகாய் சாறை ஊற்றி கிளறவும். நெல்லிக்காய் சாதம் ரெடி.
சிப்ஸ் செய்யும் முறை: கிழங்கை மெல்லிய வட்ட வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதில் எண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசறி ஒரு மைக்ரோவேவ் தட்டில் போட்டு பரத்தி 3 நிமிடங்கள் மைக்ரோவேவ் ஹையில் வைக்கவும்.
பின் வெளியிலெடுத்து திருப்பி விட்டு மீண்டும் 3 நிமிடங்கள் மைக்ரோஹையில் வைத்து எடுக்கவும். சுவையான கிரிஸ்பி சீனிக்கிழங்கு சிப்ஸ் ரெடி
நெல்லிக்காய் சாதத்துடன் சீனிக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட மிகவும் பொருத்தமாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இளவரசி நலமாக இருக்கின்றீர்களா?ஆஹா..அசத்தலான குறிப்போடு வந்து இருக்கீங்க...உண்மையிலேயே இது வித்தியாசமான குறிப்புங்க..இதற்காகவே நெல்லிக்காய் வாங்கி செய்து பார்த்திட வேண்டியதுதான்.
அதோடு நல்ல ஷைட் டிஷ்ஷும் கொடுத்திருக்கீங்க.உடனே இதை சாப்பிட கொடுத்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.
சரி..சக்கரவள்ளி கிழங்கைதானே சீனீ கிழங்கு என்று கூறியிருக்கின்றீர்கள்?கொஞ்சம் சொல்ல முடியுமா..?
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அடடா
உடனே சாப்டனும் போல இருக்கு.இங்க அமெரிக்க ல நெல்லிக்காய் எங்க கிடைக்கும்னு கொஞ்சம் தெரிஞ்ச சொல்லுங்களேன் ப்ளீஸ்.
பின்.கு
எப்படி இப்படிலாம்/ரூம் போட்டு யோசிபீங்களோ ;-)

Anbe Sivam

Anbe Sivam

நல்ல குறிப்பு இளவரசி. அசத்திட்டீங்க. நமக்கு இப்போ நெல்லிக்காய் கண்ணில் காட்ட மாட்டாய்ங்க... :(( அதனால் செய்து மத்தவங்களையாது சாப்பிட வெச்சுடறேன். விட மாட்டோம்ல..... ;) இந்த வாரத்துக்குள்ள.... என் பின்னூட்டம் உங்களுக்கு நிச்சயம் வந்துடும். :) (கண்டிப்பா நல்லா இருக்கும்'னு பார்த்தாலே தெரியுது. சூப்பர் இளவரசி.) இன்னும் பல 100 குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

அப்சரா.... சக்கரை வள்ளி கிழங்கும் சீனி கிழங்கும் ஒன்றே தான். சந்தேகமே வேண்டாம். :) வாங்கி செய்யுங்க உடனே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

very nice and different.now i am on vacation with my family.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இளவரசி அக்கா நான் இன்று மதியம் இந்த சாதம் செய்தேன்.....

ரொம்ப நல்லா இருந்தாது.....

நெல்லிக்காய் சாதம் சூப்பர்....

நன்றி அக்கா.....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

அன்பு அப்சரா,தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி.
சர்க்கரைவள்ளிகிழங்கும் சீனிகிழங்கும் ஒன்றுதான் .
செய்து பாருங்கள்.

பிரீத்தீ,எனக்கு பிடித்தமான பெயர்....!!!தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....

உண்மையில் இந்த குறிப்பை அனுப்பும்போது நான் நினைத்தது,...இவ்வளவு சிம்பிளான எல்லாருக்கும் தெரிந்த குறிப்பை அனுப்புறோமே...இத அறுசுவையில போடமாட்டங்கன்னுதான்....
:-).மத்தபடி எல்லாரும் செய்யும் குறிப்புதான்..எல்லாரும் வதக்கி செய்வார்கள்..நான் ஜுஸ் எடுத்துசெய்தது மட்டும்தான் வித்தியாசம்...:)

வனி,நல்லா இருக்கீங்களா?குழந்தை நல்லா இருக்கா?
நேரம் கிடைக்கும்போது மெயில் அனுப்புங்கள்.உங்கள் வாழ்த்துக்கு நன்றி

ஆசியா நலமா?லீவை பிள்ளைகளுடன் அனுபவியுங்கள்.நானும் கடந்த வாரம் முழுதும் மஸ்கட் சுற்றி பார்த்துவிட்டு நேற்றுதான் வந்தேன்.
தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....

பிரபா எப்படி இருக்கீங்க...?ஹெல்த் எப்படியிருக்கு?
செய்து பார்த்து உங்களுக்கு பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்:)
தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....!!!

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நலமா இருக்கீங்களா?செய்து பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தது...எனக்கும் மகிழ்ச்சி...ஹெல்த் எப்படியிருக்கிறது?
தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வித்யாசமான, சத்தான, சுவையான, செய்து பார்க்க தூண்டும் குறிப்பு.
indira

indira

தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு என் நன்றியும் மகிழ்ச்சியும்.
உங்கள் ஆர்க்ட் பேஜ்(போட்டோவும்) பார்த்தேன்.
நீங்களும் என்னுடையதை பார்த்ததை அறிந்தேன்.மகிழ்ச்சி.

விருப்பமிருந்தால் ஆர்குடில் பேசி கொள்ளலாம்.

அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.