ஆர்கண்டி டியூப்பில் மலர்கள் செய்வது எப்படி?

தேதி: December 31, 2009

No votes yet

 

மெல்லிய கம்பி - 3
ஆர்கண்டி டியூப் - ஒரு மீட்டர்
செயற்கை இலைகள்
பச்சை வண்ண ஃப்ளோரல் டேப் - ஒன்று
நூல்கண்டு - ஒன்று
கட்டர் - ஒன்று
செயற்கை மகரந்தம் (விருப்பப்பட்டால்) அல்லது மெல்லிய சின்ன ஸ்பாஞ்ச் துண்டு
- ஒன்று

 

ஆர்கண்டி டியூப்பில் மலர்கள் செய்வதற்கு வேண்டியப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆர்கண்டி டியூப்பை 4 இன்ச் அளவுக்கு சம அளவுள்ள துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கம்பியில், வெட்டிய ஆர்கண்டி துண்டு ஒன்றை கோர்க்கவும்.
பிறகு கம்பியின் நுனியை வளைத்து பெரிய கம்பியோடு சேர்த்து முறுக்கி 1/2 இன்ச் அளவுவிட்டு கட்டரால் வெட்டி கொள்ளவும்.
இதுப்போல் ஐந்து இதழ்கள் செய்து வைக்கவும். முறுக்கிய இதழை பின்புறமாக லேசாக வளைத்து வைக்கவும்.
பிறகு கம்பியை 3 இன்ச் அளவிற்கு வெட்டி எடுத்துக் கொண்டு அதன் நுனியை லேசாக வளைக்கவும். ஸ்பாஞ்ச் துண்டை அதன் மேல் வைத்து நூலினால் இறுக்க கட்டவும்.
செய்து வைத்திருக்கும் ஆர்கண்டி இதழ்களை ஒவ்வொன்றாக எடுத்து ஸ்பாஞ்ச் துண்டு கட்டிய கம்பியில் வைத்து பூத்தொடுப்பது போல் கட்டவும்.
ஐந்து இதழ்களை கட்டி முடித்தப்பின் கட்டிய பாகத்தையொட்டி பச்சை வண்ண ஃப்ளோரல் டேப்பை கம்பி முழுவதும் சுற்றிவிட்டு டேப்பை நறுக்கி விடவும்.
கம்பியில் செயற்கை இலையை பூவுடன் சேர்ந்து இருப்பது போல் கோர்த்து வைக்கவும். அழகான ஆர்கண்டி டியூப் மலர்கள் ரெடி.
பலநிறங்களில் கிடைக்கும் ஆர்கண்டி டியூப்பில் மலர்கள் செய்து ஃப்ளவர் வாஸில் விருப்பம் போல் வைத்து அழகுப்படுத்தலாம்.
அறுசுவையின் கூட்டாஞ்சோறு பகுதியில் 601 குறிப்புகள் வழங்கி, மன்றத்தில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும் கொடுத்து வரும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சமையலில் 28 வருடங்கள் அனுபவம் உடையவர். சைவம், அசைவம் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். இப்போது அறுசுவை நேயர்களுக்காக நீங்களும் செய்யலாம் பகுதிக்கு இந்த ஆர்கண்டி டியூப் மலர்கள் செய்முறையை வழங்கியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

செல்வி, பூக்கள் அழகாக இருக்கின்றன. செய்து பார்க்க விரும்புகிறேன், ஆர்கண்டி ட்யூப்புக்கு வேறு பெயர் இருக்கிறதா?
உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். :)

இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta