ரசமலாய்

தேதி: December 31, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (11 votes)

 

பால் - ஒன்றரை லிட்டர்
சீனி - 300 கிராம்
ஏலக்காய் - 4
குங்குமப் பூ - அரை கிராம்
வினிகர் - அரை மேசைக்கரண்டி


 

முதலில் ரசமலாய் செய்ய தேவையானவை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சவும். அதில் வினிகரை ஊற்றி பாலை திரிய விடவும்.
பால் திரிந்ததும் இறக்கி வைத்து ஒரு துணியில் போட்டு தண்ணீரை முழுவதுமாக வடித்து விடவும்.
10 நிமிடம் கழித்து தண்ணீர் வடிந்த பின்னர் தயாராக எடுத்துக் கொள்ளவும். ரசமலாய் செய்ய பனீர் தயார்.
பிறகு தயார் செய்த பனீரை சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி உருட்டி தட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றி காய்ச்சவும். அதில் ஏலக்காய் பொடி, குங்குமப் பூ, சீனி சேர்த்து கலக்கவும்.
பால் நன்கு சுண்டியதும் அதில் செய்து வைத்திருக்கும் பனீர் தட்டைகளை போட்டு மூடி விடவும். 5 நிமிடம் கழித்து திறந்து மெதுவாக கிளறி விடவும்.
சுவையான ரசமலாய் ரெடி. இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b>திரு. சண்முகம்</b> அவர்கள். நாகை சத்யம் கேட்டரிங் கல்லூரியில் பணியாற்றும் இவர், செட்டிநாடு, தந்தூரி, அரேபியன் உணவுகள் தயாரிப்பதில் திறன் வாய்ந்தவர். அரேபியன் உணவுகள் தயாரிப்பில் தனியாக டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்கள் ரசமலாய் சூப்பர்.நீங்கள் அரேபிய உணவு தயாரிப்பில் டிப்ளமோ என்பதால் மந்தி ரைஸ்,கப்ஸா ரைஸ் பற்றி தெரிந்து இருக்கும்.அதன் செய்முறையை விளக்குங்களேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

very easy receipe.. thanks a lot.

Friendly

இதே செய்முறைதான், ஆனால் வினிகருக்கு பதிலாக அரை மூடி எலுமிச்சை விட்டு பாலை திரியவிடுவேன். பின்பு பன்னீரை சிறிய குக்கரில் வைத்து 2 விசில் விட்டு, பின்பு ஏலக்காய், சீனி கலந்த பாலில் போட்டு விடுவேன்.

இதையே நெல்லிக்காய் மாதிரி உருட்டாமல், சிறிய வட்டமாக உருட்டி (குளோப் ஜாமுன் உருட்டற மாதிரி), வெறும் சர்க்கரை பாகில் கலந்தால் அதுதான் ரசகுல்லா.

அன்புடன்
பவித்ரா

RASAMALAI I LIKE SO MUCH

LIFE IS LONG LIVE IT UP