ஈஸி சாம்பார்

தேதி: January 2, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

துவரம் பருப்பு - 150 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 8
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 4 கொத்து
கொத்தமல்லி தழை - 3 கொத்து
உப்பு - அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிய கோலிகுண்டு அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை மேசைக்கரண்டி


 

வெங்காயத்தை பொடியாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கி கொள்ளவும், பூண்டை தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லித்தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து 1 1/2 கப் அளவுக்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பருப்பை நன்கு கழுவி விட்டு குக்கரில் போட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து பருப்பு முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
அதனுடன் பூண்டு, நறுக்கின வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேகவைத்து எடுத்த சாம்பார் கலவையை கரண்டியால் மசித்து விட்டு வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் கொத்தமல்லித் தழைகளை போட்டு வதக்கவும்.
பிறகு கரைத்த புளித்தண்ணீரை அதில் ஊற்றி ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
மசித்து வைத்திருக்கும் பருப்பு கலவையில் கொதித்த புளித்தண்ணீரை ஊற்றி அரை மேசைக்கரண்டி உப்பு சேர்க்கவும்.
பிறகு அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான ஈஸியான சாம்பார் தயார். இதில் காய்கறி சேர்க்க விரும்புபவர்கள் கொத்தமல்லித்தழை சேர்க்கும் பொழுது காய்கறிகளை போட்டு வதக்கவும். பிறகு புளித்தண்ணீரை சேர்த்து வேக விடவும். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. சாமூண்டிஸ்வரி </b> அவர்கள்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சாமூண்டீஸ்வரி எப்படி இருக்கீங்க...?
தங்கள் சாம்பார் பார்க்கும் போதே சாப்பிட தோணுது.நானும் அவசரித்திற்க்கு இப்படித்தான் இதே முறையில் செய்வேன்.
வெந்த கலவையுடன் புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்ட பின்னர் தாளிப்பேன்.
இப்போது நீங்கள் சொன்ன முறை நன்றாக உள்ளது.விரைவில் செய்து பார்த்து சொல்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

really nice.keep going.