மசூர் பருப்பு

வழங்கியவர் : santho
தேதி : திங்கள், 04/01/2010 - 02:25
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- மசூர் பருப்பு - 1கப்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1பெரியது
- இஞ்சி - 1துண்டு
- பூண்டு - 2பல்
- பச்சைமிளகாய் - 4
- சீரகம் - 1டேபிள் ஸ்பூன்
- மல்லி பொடி - 1டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - தாளிக்க
- கொத்தமல்லி இலை - சிறிது
- மசூர் பருப்பை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும், இது விரைவில் வெந்துவிடும், எனவே குக்கர் தேவையில்லை
- வெங்காயம், தக்காளி பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிவைக்கவும், இஞ்சி,பூண்டு துருவிக்கொள்ளவும்
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்
- வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தக்காளி நன்கு மசியும் வரை நன்றாக வதக்கவும்,பின் மல்லிபொடி சேர்க்கவும்
- இப்போது வேகவைத்த பருப்பை இதனுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவத்து இறக்கவும்,இதனுடன் கொத்தமல்லி இலை தூவவும்
Note:
சாம்பார் சாப்பிட்டு போர் அடிக்கும் போது இதை செய்யலாம், பருப்பு விரைவில் வெந்துவிடும் ஆதலால் சமைக்கும் நேரம் குறையும்,காரம் அதிகம் விரும்புபவர்கள் இன்னும் கொஞ்சம் பச்சைமிளகாய் அல்லது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
7 நிமிடங்கள் 13 sec முன்பு
9 நிமிடங்கள் 58 sec முன்பு
16 நிமிடங்கள் 30 sec முன்பு
50 நிமிடங்கள் 21 sec முன்பு
ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 48 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 58 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு