பேக்ட் ஸ்வீட் பொட்டேடோ

தேதி: January 5, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சக்கரவள்ளி கிழங்கு - இரண்டு (மீடியமாக)
சீனி - கால் கப்
முட்டை - ஒன்று
பட்டர் - 50 கிராம்
உப்பு - 2 சிட்டிகை
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி


 

கிழங்கை வேக வைத்து தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பட்டரும், முட்டையும் குளிர்ந்த நிலையில் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கிழங்கை போட்டு குறைந்த வேகத்தில் இரண்டு நிமிடங்கள் பீட்டரால் அடிக்கவும்.
கிழங்கு கட்டியில்லாமல் மசிந்ததும், உப்பு, சீனி மற்றும் முட்டை சேர்த்து ஒன்று சேர அடிக்கவும்.
பிறகு பட்டர், வெனிலா எசன்ஸ் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக அடிக்கவும்.
நன்கு மென்மையான கலவையானதும், பேக் செய்ய ஆயத்தமாக அவனை 180 டிகிரி செல்சியசில் முற்சூடு செய்யவும்.
ஒரு 24 செ.மீ அளவில் உள்ள பேக்கிங் ட்ரேயை எடுத்துக் கொண்டு பட்டரை நன்கு பரவலாக தடவிக் கொள்ளவும்.
அதில் கலவையை பரவலாக வைத்து முற்சூடு செய்த அவனில் 25 நிமிடம் வைத்து பேக் செய்யவும். பேக் ஆனதும் மேலே பொன்னிறமாக இருக்கும். இல்லையென்றால் இன்னும் ஐந்து நிமிடம் வைத்துக் கொள்ளலாம்.
பேக் ஆனதும் வெளியில் எடுத்து அப்படியே ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து துண்டுகள் போட்டு பரிமாறவும். இந்த சுவையான குறிப்பினை <b> திருமதி. அப்சரா </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்

இதே அளவிலான ட்ரே இல்லையென்றால் சிறிய ட்ரேயிலேயே செய்யலாம். கலவையை சரி பாதியாக பிரித்து இரண்டு தடவை பேக் செய்யலாம். தடிமனாக இருந்தால் நன்றாக இருக்காது. விரும்பினால் முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இவ்வளவு சீக்கிரம் இந்த குறிப்பு வரும் என்று எதிர் பார்க்க வில்லை.
அட்மின் அவர்களுக்கு எனது நன்றி.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சர்க்கரை வள்ளி கிழங்கு கேக் ரொம்ப அருமை அப்சாரா

அப்சாரா ரொம்ப நல்ல இருக்கு, அதுவும் ஸ்வீட் பொட்டேட்டோ எனக்கு ரொம்ப பிடிக்கும்.

மைதா தேவையில்லையா, மைக்ரோவே கன்வென்ஷன் இல்லாததில் இதை வைக்கலாமா?

Jaleelakamal

ஜலீலா மேடம் எப்படி இருக்கீங்க...?
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றி....
நான் மைதா சேர்த்து பார்க்கவில்லை.இதனுடைய டேஸ்ட் ரொம்ப நன்றாக சாஃப்ட்டாக இருக்கும்.
குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.
வெறும் இந்த கிழங்கை சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்.
ஆனால் என் குழந்தைகள் விரும்ப வில்லை.
இது போல் செய்தேன் உடனேயே ட்ரே காலியாகி விட்டது.
அப்புறம் இதை மைக்ரோவேவ் கன்வெக்ஷன் மோடில் தான் செய்தேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்ச‌ரா,
உங்க பேக்ட் ஸ்வீட் பொட்டெட்டோ பார்க்க‌வே ரொம்ப‌ அழ‌கா இருக்கு. எங்க வீட்டிலும் டிட்டோவா அதே கதைதான். என‌க்கு ஸ்வீட் பொட்டெட்டோ என்றால் ரொம்ப‌ பிடிக்கும். சும்மா மைக்ரோவேவ் அவனில் வைத்து பேக் ப‌ண்ணி அப்ப‌டியே சாப்பிடுவேன். பொரியல் செய்தால் அவருக்கும் பிடிக்கும். ஆனால் என் ப‌ச‌ங்க‌ அப்ப‌டியே ஆப்போசிட், தொட‌வே மாட்டார்க‌ள் இந்த‌‌ வெஜிட‌‌பிளை!

இப்ப‌ உங்க‌ குறிப்பை பார்த்த‌தும், கூடவே உங்க‌ வ‌ரிக‌ளை ப‌டித்த‌தும் க‌ட்டாய‌ம் செய்துப்பார்க்க‌ முடிவு செய்துவிட்டேன். வீட்டிலும் ஒரு கிழ‌ங்கு இருக்கு. விரைவில் செய்துபார்த்துட்டு சொல்கிறேன்.

ஒரே ஒரு சந்தேகம் அப்சரா, மாவு ஊற்றிய பாத்திரத்தில் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும். அதாவது திக்னெஸ், 1 இன்ச், அல்லது 1 1/2 இன்ச் அந்த மாதிரி கேட்கிறேன். ஏனென்றால், நீங்க ரொம்பவும் மொத்தமாக செய்தால் டேஸ்ட் மாறுபடும் என்று சொன்னிங்களே, அதனால்தான் கேட்கிறேன். என்னிடம் இருக்கும் டோஸ்டர் அவனில் வைத்து செய்யலாமென்று இருக்கிறேன். முடியும் போது என் கேள்விக்கு பதில் தாருங்கள்! நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நலமா இருக்கீங்களா?
சூப்பர் குறிப்பு அப்சரா.பார்க்கவே நல்லாயிருக்கு..!

என் குழந்தைகளுக்கு சும்மாவே இந்த கிழங்கு பிடிக்கும்.அதனால் வீட்டில் எப்போதுமிருக்கும்..இன்றே முயற்சி செய்துவிட்டு சொல்கிறேன்....
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

this is very tasty.my son like it very much.iam jayanthi my sons name only eric.naan newin this web.unngalapatty thrunchukallma.

சுஸ்ரீ எப்படி இருக்கீங்க..?பிள்ளைகள் நலமா...?
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றிங்க..?
இந்த அளவில் கொடுத்திருக்கும் பேக்கிங் பாத்திரத்தில் கலவை ஒரு இன்ச் அளவுதான் இருக்கும்.அதுவே சரியாக இருக்கும்.வேறு சிறு பாத்திரத்தில் நீங்கள் வைத்தாலும். ஒரு இன்ச் அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.ஏன்னா இது கேக் மாதிரி நிக்காம கொஞ்சம் சாஃப்ட்டாக இருக்கும்.நல்லா மேலே எல்லா இடமும் சிவக்க இருந்தால் தான் நல்ல ஒரு டேஸ்ட் கிடைக்கும்.அதான் மொத்தமாக வேண்டாம் என்கிறேன்.செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
சரியா....
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹலோ ஜெயந்தி நலமாக இருக்கின்றீர்களா..?தங்கள் மகன் எரிக் நலமா...
ஆங்காங்கே இரண்டு நாட்களாக உங்கள் எரிக் என்ற பெயர் பார்த்ததும் யாரோ பேச்சுலர் போல என நினைத்துக் கொண்டேன்.சாரிங்க...தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றிங்க.
என் பெயர் அப்சரா...ங்க.எனக்கு மூன்று குழந்தைகள் இருக்காங்க.நான் இப்போது துபாயில் வசிக்கிறேன்.(ஒன்பது வருடங்களாக..)ஹவுஸ் வொய்ஃப்தான்.
நீங்க கீழே கொடுக்க பட்டிருக்கும் எழுத்துதவி மூலம் தமிழில் டைப் செய்ய பழகலாமே...
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இளவரசி நலமாக இருக்கின்றீர்களா...தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றிங்க...
பரவாயில்லை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றால் பிரச்சனை இல்லை.ஏனென்றால் அவர்களுக்கு பிடித்த உணவு தானே நாமும் சாப்பிட வேண்டியுள்ளது.செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா எனக்கு மைகுரோவேவ் இல்லை...

ஆனால் டோஸ்ட்டர் இருக்கு.... அதில் செய்யலாமா? எந்த அளவு அதாவது ( பீசா, பிரட் )இப்படி எந்த அளவில் வைத்து செய்யனும்...

சொல்லுங்கப்பா... நானும் செய்து பாக்குரேன்....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

முயற்சித்தேன்.அதிகம் ஸ்வீட்ன்னு குழந்தைகள் சாப்பிடலை.30 நிமிடங்கள் வைத்தேன்.அடியில் டார்க் ஆகி,மேலே கலர் மாறாமல் இருந்தது.கருகிவிடக்கூடாதென்று எடுத்துவிட்டேன்.ஆனால் உள்ளே பதம் கிரிஸ்பியாக இல்லை...அப்படித்தான் இருக்குமா?இல்லை இன்னும் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டுமா என சொல்லுங்கள்..போட்டோ அனுப்பலாமென நினைத்தேன்.எதிர்பார்த்த texture கிடைக்கவில்லை அதான் அனுப்பவில்லை.
உங்கள் போட்டோவில் உள்ளதுபோல் அழகாக வரவில்லை.
நான் குக்கிங் ரேஞ்ச் அவனில் செய்தேன்.350F வைத்தேன்.
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

pஹை அப்சர.ரம்ப thunks..உஙகல pattyintruduce panniyathula rummapa thunks.tamil write panna try panntren newingrathula dificultta irruku.next time surera impruve pannikirran.thunks.innum passalam.o.k.takecare.

ஹாய் இளவரசி,பிரபா..எப்படி இருக்கீங்க..?தாமத பதிலுக்கு இருவரும் என்னை மன்னிக்கவும்.வேலை பலுவால் இன்றுதான் அருசுவைக்கு வர முடிந்தது.
பிரபா...இதை நான் மைக்ரோவேவ் கன்வெக்ஷன் மோடில் தான் செய்து பார்த்தேன்.எனவே டோஸ்ட்டரில் செய்யலாமா...சரியாக வருமா...என்று எனக்கு தெரியவில்லை.மன்னிக்கவும்.
தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இளவரசி எப்படி மேலே சிவக்காமல் அடியில் சிவந்தது என்று எனக்கு தெரியவில்லை.மேலே மட்டும் தான் சிவக்கும்.உள்ளே சாஃப்ட்டாகதான் இருக்கும்.(என்னால் உங்களுக்கு நேரம் வீணாகி இருக்கும். என்னை திட்டலையே!!!!!!!!)
இனிப்பு அதிகம் தெரிந்தால் குறைத்துக் கொள்ளுங்கள்.என் வீட்டில் அனைவருக்கும் இது ஏற்றார் போல் இருந்தது.பரவாயில்லை முயற்ச்சித்து(நொந்ததற்க்கு....) பார்த்து சொன்னதற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.