மாங்காய் இனிப்பு பச்சடி

image

வழங்கியவர் : Meenal

தேதி : திங்கள், 11/01/2010 - 06:01

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • பழுத்த மாங்காய் - 1 (தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்)
  • அச்சு வெல்லம் - 1 அல்லது 2 (பொடித்து வைத்துக்கொள்ளவும்)
  • தாளிக்க:
  • எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்
  • கடுகு - சிறிது
  • உளுந்து - சிறிது
  • வரமிளகாய் - 1 அல்லது 2
  • கறிவேப்பிலை - சிறிது

 

  • முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • மாங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் பொடித்த வெல்லதை சேர்க்கவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

Note:

மாங்காய் அரைப் பழமாக இருந்தாலே போதுமானது. வெல்லத்தை மாங்காயின் இனிப்பிற்கேற்ப கூடுதலாகவோ குறைச்சலாகவோ சேர்த்துக்கொள்ளவும். இந்த பச்சடி தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.