கண்களை சுற்றி கருவளையம்.

ஹைய்,கண்களை சுற்றி கருவளையம் உள்ளது. அதனை போக்க என்ன செய்வது. தயவு செய்து எனக்கு உதவுங்கள்.

ஹாய் அமராவதி!
கருவளையத்திற்கு உருளைகிழங்கு சாறும், வெள்ளரிச்சாறும் தடவி ஊறவைத்து கழுவலாம்.
இரவு அதிக நேரம் கண்விழித்தாலோ அதிக கவலை,டென்ஷன் இதெல்லாம் இருந்தால் கருவளையம் தோன்றும். இதனையெல்லாம் தவிர்க்கவும். நிறைய தண்ணீர், காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ளவும்!

ஹாய் தோழிகளே என் தோழிக்கு கண்களை சுற்றி கருவளையம் அதிக்மாக் இருக்கிறதாம் என்னனமோ உப்யோகித்து பார்த்தார்களாம் போக மாட்டுதாம் அதுக்கு என்ன போட்டால் சுத்தாமாக் அதை நீக்க முடியும் சொல்லுங்கள்

சாய் கீதாலட்சுமி எல்லாமே சொல்லி இருக்கிறாங்க ஃபர்வீன். எதை ட்ரை பண்ணினாலும் மேலே சொல்லி இருப்பது எல்லாம் கட்டாயம் என்பது என் கருத்து.

‍- இமா க்றிஸ்

ஹாய் ஃபர்வீன்
வெள்ளரிச்சாறுடன் கொஞ்சம் பன்னீரும் கலந்து தடவி அரைமணிநேரம் கழித்து கழுவிடச்சொல்லுங்க.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் மறைய வாய்ப்புள்ளது.

நன்றி இமா எல்லாமே எடுத்துகொள்ள சொல்கிறேன் இமா நலமா
நன்றி கீதா கண்டிப்பா செய்ய சொல்கிறேன் அவங்க ஆம்வேல க்ருவளையத்துக்கு ஒரு கீரீம் ஆர்டிஸ்டிரி இருக்காம் அதை போட்டால் நல்லா போகுதுன்னு தோழி ஒருவர் சொல்றாங்க இது எந்த அள்வுக்கு உண்மை சொல்லுங்கள்

ஹாய்!
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் பொடியைக் குழைத்து, வெதுவெதுப்பாக சுடவைத்து தினமும் குளிப்பதற்கு முன் கருவளையம் உள்ள இடத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்துக் குளித்தால் ஒரு சில வாரங்களில் முகம் ‘பளிச்’ ஆகி விடும்.

கீது! எப்படி இருக்கீங்க??? கருவளயத்துக்கு உங்க மஞ்சள் டிப்ஸ் செய்ய போகிறேன்.. இது மொத்த முகத்துக்கும் செய்யலாமா...சமையலுக்கு இருக்கும் மஞ்சள் பொடி போடலாமா??? இல்லை பூசு மஞ்சள் பொடி தான் வேணுமா...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹலோ கீதா நீங்க சொன்ன இந்த மஞ்சள் டிரீட்மெண்ட் கருவளையத்துக்கு மட்டும் தான் உபயோகிக்க வேண்டுமா?வேறு கருமைகளுக்கும் உபயோகிக்கலாமா?என்னுடைய முழங்காலுக்கு பின்புறம் கருமையாக உள்ளது அதற்கு இந்த மஞ்சள் டிரீட்மெண்ட் உபயோகிக்கலாமா?

ஹாய் இலா இப்பிடியிருக்கீங்க? ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்களை பார்க்கிறேன்.
இந்த டிப்ஸ் கருவளையத்துக்கு மட்டும்தான்.
உங்களுக்கு ரொம்ப ஆசையாய் இருந்தா முகம் பூரா போட்டுக்கலாம்.
நாம சமையலுக்கு உபயோகபடுத்தற மஞ்சள் பொடியே போதும்!

தக்காளி சாறும், எலுமிச்சைசாறும் கலந்து தடவினால்கூட கருவளையம் மறையும்.
நேந்திரம்பழத்தினை கூழாக்கியும் தடவலாம்.
காஃபி அதிகம் குடிப்பதாலும் கருவளையம் வரும். கீரை நிறைய சேர்த்துக்கனும்.
விட்டமின் - இ ஆயிலும் தேய்க்கலாம்.

ஹாய் மல்லி
இது கருவளையத்துக்கு மட்டும்தாம்ப்பா. முட்டி கருப்புக்கு பொதுவாவே எலுமிச்சை பழத்தினை சாறு பிழிஞ்சிட்டு அந்த மூடியை வெச்சு தேய்க்கலாம்.

ஆனா, முழங்காலுக்கு பின்புறம் கருப்புக்கு, (இது கருந்தேமலுக்கு)
மருதாணி ஒரு கைப்பிடியளவு எடுத்திட்டு, சிறிதளவு துணி சோப்புத்துண்டு சேர்த்து நைசா அரைச்சிட்டு, குளிக்கிறதுக்கு முன்னாடி அதனை தேய்ச்சு ஊறவெச்சு குளிச்சுப்பாருங்க. தோல் நிறம் மாறும்.

மேலும் சில பதிவுகள்