கீரை குழம்பு (ஈசி முறை)

வழங்கியவர் : Subha Jayaprakash
தேதி : திங்கள், 11/01/2010 - 12:35
ஆயத்த நேரம் : 15 min
சமைக்கும் நேரம் : 30 min
பரிமாறும் அளவு : 2 நபர்களுக்கு
- துவரம் பருப்பு -- 1 கைப்பிடி அளவு (வேகவைத்தது)
- கீரை -- 2 கைப்பிடி (சுத்தம் செய்தது)
- சாம்பார் தூள் -- 2 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் -- 10 என்னம் (வட்டமாக நறுக்கியது)
- தக்காளி -- 1 என்னம்
- பச்சை மிளகாய் -- 2 என்னம்
- கறிவேப்பிலை -- 1 இனுக்கு
- புளி -- 1/4 கோலி அளவு
- தாளிக்க:
- கடுகு , உளுந்து -- 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை -- 1 இனுக்கு
- சிவப்பு மிளகாய் -- 2 என்னம்
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கீரை,வெங்காயம், தக்காளி, புளி, கறிவேப்பிலை,சாம்பார் தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
- பின் ஆறவைத்து கடைந்தாலும் சரி இல்லை எனில் மிக்ஸியில் 2 நொடி அடித்து (திப்பி திப்பியாக) வைக்கவும்.
- வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து தாளித்து மிளகாய், கறிவேப்பிலையை போட்டு அரைத்த கீரை விழுதை ஊற்றி வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும்.
- பின் தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பறிமாறவும்.
- சுவையான கீரைகுழம்பு ரெடி.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
9 நிமிடங்கள் 56 sec முன்பு
52 நிமிடங்கள் 30 sec முன்பு
52 நிமிடங்கள் 36 sec முன்பு
ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 51 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 1 min முன்பு
2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு