ஹெல்தி மீன் குழம்பு

தேதி: January 11, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

 

மீன்(சுறா, தூனாமீன் தவிர்த்து) - அரைக் கிலோ
சின்னவெங்காயம் -20 முதல் 25
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - 3/4 மேசைக்கரண்டி (காரத்திற்கேற்ப)
மல்லி தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - 2 சிட்டிகை (2 பின்ச்)
புளி - நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு


 

மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கி மிளகு சேர்த்து வெடித்ததும் சின்ன வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
3 நிமிடம் நன்றாக வதக்கி நறுக்கின தக்காளி, புளி சேர்த்து மேலும் 3 அல்லது 4 நிமிடங்கள் வரை வதக்கவும்.
இப்போது தீயின் அளவைக் குறைத்து பொடி வகைகளை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.
இரண்டு சிட்டிகை வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
அரைத்த மசாலாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு புளி காரம் சரிபார்த்து மீதமுள்ள கறிவேப்பிலை, மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இடையிடையே மீன் பாத்திரத்தை சுழற்றி வைக்கவும். இப்படி செய்வதால் மீன் சட்டியில் ஒட்டிக் கொள்வதை தவிர்க்கலாம்.
நன்றாக கொதித்து மீன் வெந்ததும் தீயை குறைத்து மேலும் 5 நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடவும். பொடித்து வைத்த வெந்தயப் பொடி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான எண்ணெய் குறைவான ஆரோக்கியமான மீன் குழம்பு தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கும் பொருத்தமாக இருக்கும். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. கவிசிவா </b> அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.

மிகக்குறைவான எண்ணெய் பயன்படுத்துவதாலும், அதிகமான சின்ன வெங்காயம் சேர்ப்பதாலும் இக்குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. டயட் செய்பவர்கள் மீனை இம்முறையில் சமைத்து சுவையாக சாப்பிடலாம். இறுதியாக ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இறக்கினால் சுவை அதிகரிக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் கவி!அருமையான ஒரு மீன் குழம்பு. பார்க்க நன்றாக இருக்கின்றது.செய்வதும் சுலபம்போல் இருக்கி ன்றது. நீங்கள் சொன்ன மீன் வகை இங்கு எடுப்பது கஷ்டம். என்றாலும் வேறொரு மீன் வகையில் செய்து பார்க்கின்றேன். நல்ல ரேசப்பி தந்தமைக்கு நன்றி.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கவி சிவா கலக்கலான மீன் குழம்பு ரொம்ப நல்ல இருக்கு, டயட் செய்பவர்களுக்கு ஏற்ற ரெசிபி

Jaleelakamal

கவி சிவா கலக்கலான மீன் குழம்பு ரொம்ப நல்ல இருக்கு, டயட் செய்பவர்களுக்கு ஏற்ற ரெசிபி

Jaleelakamal

கவி சிவா கலக்கலான மீன் குழம்பு ரொம்ப நல்ல இருக்கு, டயட் செய்பவர்களுக்கு ஏற்ற ரெசிபி

Jaleelakamal

ஹையா இந்த குறிப்பு வெளியாகிடுச்சா?!. அட்மினுக்கும் அறுசுவை குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

யோகராணி பின்னூட்டம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி! ராணி இந்த குழம்பை சுறா, தூனா தவிர்த்த எல்லாவகை மீன்களிலும் செய்யலாம். கண்டிப்பா செய்து பாருங்க.

ஜலீலாக்கா உங்கள் பின்னூட்டம் எனக்கு மேலும் மேலும் குறிப்புகள் கொடுக்க ஊக்கமளிக்கிறது. நன்றி. உண்மைதான் டயட் செய்பவர்களுக்கு ஏற்ற குழம்புதான்.

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹய்யா மீன் குழம்பு குறிப்பா???? செய்து குடுக்க ஆளிருக்கே (என் அம்மா'வத்தேன் சொன்னேன்) உடனே செய்து சாப்ட்டுட்டு சொல்லிபுட்றேன். பார்க்கவே ஆசையா இருக்கே..... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா..... செய்து சாப்ட்டேன். இதோ இப்போ தான். இன்னைக்கு இரவு உங்க மீன் குழம்பு தான். :) எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுது. இனி அடிக்கடி செய்வோம். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மீன்குழம்பு செய்து சாப்பிட்டே ஆச்சா? எல்லோருக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. ம்ம்ம்... அடிக்கடி செய்து சாப்பிடுங்க. நன்றி வனிதா. சுவையாக செய்த அம்மாவுக்கு ஸ்பெஷல் நன்றி.
யாழினியும் சிவகுமரனும் எப்படி இருக்காங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

very very tasty fish curry...the smell itself attracts us allot...

Life is the way we look at it.

கவிசிவா,

சன்டே அன்று உங்களோட இந்த ஹெல்தி மீன் குழம்பு செய்தேன். செய்வதும் சுலபமாக இருந்தது, சுவையும் அபாரம்!! வெங்காயம் தக்காளியை வதக்கி அரைத்து சேர்ப்பதால், குழம்பு நீர்க்காமல் கெட்டியாக இருக்கவும் உதவியது. இந்த ஹெல்தி மீன் குழம்பு, டேஸ்டி குழம்பும் கூட! :‍) நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

எல்லொருக்கும் வணக்கம்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

சாரி மிசஸ்.வர்மா. இப்பதான் உங்கள் பின்னூட்டத்தை பார்க்கிறேன். இந்த ரெசிப்பி உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி மிசஸ் வர்மா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் சுஶ்ரீ எப்படி இருக்கீங்க? ஹெல்தி மீன் குழம்பு செய்தீங்களா. சுவை பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி சுஶ்ரீ!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!