உருளை கேப்சிகம் குருமா

தேதி: January 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

உருளை - 2
கேப்சிகம் - 1/2 பாகம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை
முந்திரி - 10
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கவும். கேப்சிகம் நறுக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். முந்திரி ஊற வைத்து அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போக வதக்கவும். தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
வெட்டி வைத்த உருளை, கேப்சிகம் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம்மசாலா சேர்த்து பிரட்டவும்.
லேசாக வதக்கிய பின் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக மசாலா வாசம் போக கொதிக்க விடவும்.
இதில் உப்பு, அரைத்த முந்திரி விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.


இது தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவைக்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் வனி நலமா இருக்கீங்களா.பசங்க இருவரும் நலமா?உங்களோட இந்த குருமா நேற்று செய்திருந்தேன்.ரெம்ப டேஸ்டா இருந்தது.நன்றி வனி. take care. அன்புடன் அம்முலு.

மிக்க நன்றி அம்முலு. :) நாங்க நலம். நீங்க நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா

என் மகள் இன்று ஜலீலாவின் குபூஸ் ரொட்டியுடன் இந்த குருமா செய்தாளாம். மிகவும் நன்றாக இருந்ததாக சொன்னாள். (கொஞ்சம் காரம் அதிகமாக சேர்த்து விட்டதாக சொன்னாள்)

அவள் இன்னும் அறுசுவை உறுப்பினர் ஆகவில்லை, அதனால் நான் இங்கே பின்னூட்டம் கொடுத்திருக்கிறேன்.

நன்றி, வனிதா

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலஷ்மி... உங்க பதிவை இப்ப தான் பார்க்கிறேன். ரொம்ப சாரிங்க. உங்க மகளுக்கு என் நன்றியை சொல்லுங்க. அவங்க பின்னூட்டத்தை எனக்கு சொல்லி ரொம்ப சந்தோஷ படுத்திட்டீங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா