பயத்தம் பருப்பு பாயாசம்

தேதி: January 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (20 votes)

 

பயத்தம் பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் துருவல் - அரை கப்
அரிசி மாவு - அரை மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2


 

வெல்லத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும்.
பயத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும். வெந்த பருப்பை நன்கு மசித்து விடவும். வெல்லம் கரைந்ததும் எடுத்து வேக வைத்த பருப்பில் வடிகட்டி ஊற்றவும்.
பருப்புடன் வெல்லத்தை சேர்த்ததும் நன்கு கிளறி விட்டு அடுப்பில் வைத்து கிளறவும்.
தேங்காய் துருவல், ஏலக்காய், அரிசி மாவு இவற்றை மிக்ஸியில் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
5 நிமிடம் கழித்து பருப்புடன் அரைத்த தேங்காய் விழுதை போட்டு ஒரு முறை கிளறி நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி வைத்து விடவும்.
ஒரு குழிக்கரண்டி அல்லது வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு வறுத்து பாயாசத்தில் ஊற்றி கிளறி பரிமாறவும்.
சுவையான பயத்தம் பருப்பு பாயாசம் ரெடி.
இந்த பாயாசம் செய்முறையை <b> திருமதி. மங்கம்மா </b> அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாசிபருப்பு பாயாசம் சுவையாக இருந்தது.thanks.

இன்று உங்களுடைய பாயாசம் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது. கூடுதலாக பால் மட்டும் சிறிதளவு சேர்த்தேன். வாழ்த்துக்கள்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்