OHP ஷீட்டை கொண்டு மாவிலை தோரணம் செய்வது எப்படி?

தேதி: January 15, 2010

3
Average: 2.5 (6 votes)

 

OHP ஷீட்
பச்சைநிற பேப்பரிக் பெயிண்ட்
கில்ட்டர்ஸ்
கம் (அ) பெவிக்கால்
நரம்பு
பெல் மணிகள் - 6
கிளாஸ் ஸ்ட்ரா - 6
ப்ரஷ்
பெரிய சம்கி
ஸ்ட்ராஃப்ளர்
கத்திரிக்கோல்
பென்சில்

 

மாவிலை தோரணம் செய்வதற்கு மேற்சொன்ன பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பழைய கனமான அட்டை ஒன்றில் மாமரத்தின் இலை போன்று வரைந்து அதனை தனியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அந்த அட்டையை OHP சீட்டின் மீது வைத்து பென்சிலால் வரைந்துக் கொள்ளவும்.
இதுப்போல் OHP சீட்டில் ஏழு இலைகள் வரைந்து தனித்தனி இலைகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கின இலைகளின் ஒரு பக்கத்தில் மட்டும் பச்சைநிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்து காயவிடவும்.
இதுப்போல் மற்ற ஆறு இலைகளிலும் பெயிண்ட் செய்து காயவிடவும்.
பிறகு ஒவ்வொரு இலையின் மேற்பகுதியை விட்டுவிட்டு அதன் ஓரங்களை சுற்றிலும் கோல்டுநிற கில்ட்டர்ஸை கொண்டு மெல்லிய கோடுகளாக வரைந்து கொள்ளவும்.
இலைகளின் நடுவில் ஒரு பெரிய சம்கியை பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும். சம்கிகள் காய்ந்ததும் படத்தில் உள்ளது போல் கிலிட்டர்ஸை கொண்டு டிசைன் செய்துக் கொள்ளவும்.
கில்ட்டர்ஸ் காய்ந்ததும் இலைகளை அரை இன்ச் அளவு பின்புறமாக மடக்கி இருமுனைகளிலும் ஸ்டாஃப்ளர் பின் போட்டுக்கொள்ளவும்.
பெல் மணியில் உள்ள துளையில் நரம்பை கோர்த்து நடுவில் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். அந்த நரம்பில் ஒரு க்ளாஸ் ஸ்ட்ராவை கோர்த்து வைத்துக் கொள்ளவும். இதேப் போல் மற்ற ஐந்து பெல்களில் கோர்த்து வைக்கவும்.
கதவுநிலையின் அளவிற்கு தகுந்தாற்போல் நரம்பை இரண்டாக எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு பெரிய மணியை கோர்த்து முடிச்சு போட்டு கொண்டு ஒரு இலையை கோர்க்கவும். அடுத்து ஒரு பச்சைநிற க்ளாஸ் ஸ்ட்ராவை இரண்டாக உடைத்து அதில் ஒரு துண்டை மட்டும் கோர்க்கவும். பிறகு முன்பு கோர்த்து வைத்திருக்கும் பெல் மணிகளை ஒன்றை எடுத்து க்ளாஸ் ஸ்ட்ரா கோர்த்திருக்கும் நரம்புடன் சேர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். அடுத்து உடைத்த மற்றொரு க்ளாஸ் ஸ்ட்ராவை எடுத்து கோர்க்கவும்.
இதுப்போல் நரம்பில் ஒவ்வொரு இலைகளையும் கோர்த்துக் கொண்டு கடைசியில் ஒரு பெரிய மணியை கோர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். நிலையில் மாட்டுவதற்கு ஏதேனும் திக்கான நூல்களில் ஐந்து செ.மீ அளவில் இரண்டு துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். அதை பெரிய மணி கோர்த்திருக்கும் துளையில் விட்டு வளையம் போல் செய்து முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். எளிமையாக செய்யக்கூடிய இந்த மாவிலை தோரணத்தை பூஜை அறை, வரவேற்பறையில் உள்ள கதவுநிலையில் மாட்டிவிடலாம்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த மாவிலை தோரணத்தை வடிவமைத்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அன்புடன் செண்பகா! நல்லதொரு மாவிலை தோரணம் செய்து காட்டியுள்ளீர்கள்.உண்மையில் இது ஒரு பயனுள்ள டிப்ஸ். மாவிலை பெற முடியாதவர்கள் கூட (என்னைப்போல்) இப்படி செய்து பயன்படுத்தி கொள்ளலாம். உங்களுக்கு சின்ன பாப்பாவுடன் இதெல்லாம் செய்ய எப்படித்தான் நேரம் கிடைக்குதோ. என்றாலும் முயற்சி செய்து எமக்காக தந்தமைக்கு நன்றிகள். அழகாக படத்துடன் செய்து காட்டி உள்ளீர்கள். நானும் ஒரு முறை முயற்சித்து பார்க்க போகின்றேன். நன்றி, பாராட்டுக்கள்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சூப்பர் பாப்பி. இங்கெல்லாம் மாவிலை எங்கே கிடைக்கிறது! உண்மையில் மிகவும் பயனுள்ள குறிப்பு. பலருக்கு உதவும். அழகாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta