savalai pillai endral enna

ஹாய்
என்னகு thedernu ஒரு சந்தேகம்.எங்க பாட்டி கிட்ட பேசிட்டு இருகுர்ப இனிக்கு சவலை பிள்ளை அப்படின்னு சொன்னங்க.
தயவு செஞ்சு அப்படின என்னனு யாராவது சொல்லுங்களேன்.என்னக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு.

ஹாய் ப்ரீத்தி!
சவலைப்பிள்ளைன்னா, முதல் குழந்தை பிறந்து , அதிக இடைவெளியில்லாமல் சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொண்டால்
முதல் குழந்தை ஏக்கத்தில் சரியாக சாப்பிடாமல், டல்லடித்து மிகவும் இளைத்துவிடும்.
முதல் குழந்தைக்கு கிடைத்த அனைத்து செல்லங்களும், அன்பும் அடுத்த குழந்தைக்கு கிடைக்கும்போது விபரம் தெரியாத முதல் குழந்தை மிகவும் ஏங்கிப்போய்விடும்.
தன் தம்பியையோ/தங்கையையோ ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வராத குழந்தைக்கு, தன் தாயின்,தந்தை உறவினர்களின் அன்பு அடுத்த குழந்தைக்கு கிடைக்கும்போது அதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் இளைத்துவிடும்.
இதைத்தான் சவலைப்பிள்ளைன்னு சொல்வாங்க!

மேலும் சில பதிவுகள்