ஈஸி நட்ஸ் கொழுக்கட்டை

image

வழங்கியவர் : Vanitha Vilvaar...

தேதி : ஞாயிறு, 17/01/2010 - 10:47

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

3
3 votes
Your rating: None
 

 

  • பச்சரிசி - 2 கப்
  • வெல்லம் - ருசிக்கு
  • முந்திரி - ஒரு கை
  • பாதாம் - ஒரு கை
  • நெய் - 2 தேக்கரண்டி

 

  • பச்சரிசியை ஊற வைத்து தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் உதிரி மாவாக்கவும்.
  • இதை இட்லி பாத்திரத்தில் துணிக்கட்டி பரப்பி ஆவி காட்டவும்.
  • பாதாம், முந்திரி நெய்யில் வறுத்து பொடித்து மாவில் கலந்து வைக்கவும்.
  • வெல்லத்தை தேவையான அளவு நீர் விட்டு சூடாக்கி கரைத்து வடிக்கட்டவும்.
  • இந்த கரைசலை மாவில் கலந்து பதமாக பிசைந்து, பிடி கொழுக்கட்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.