ரெடிமேட் களிமண் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்வது எப்படி?

தேதி: January 19, 2010

4
Average: 4 (5 votes)

கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொண்டிருக்கும் திருமதி. கவிசிவா அவர்கள், ரெடிமேட் களிமண்ணை கொண்டு வடிவமைக்கக்கூடிய அலங்காரப் பொருட்களை அறுசுவை நேயர்களுக்காக நீங்களும் செய்யலாம் பகுதிக்கு வழங்கியுள்ளார்.

 

ரெடிமேட் களிமண்
டெக்கரேஷன் செய்யப்போகும் பாட்டில்
ஃபேப்பரிக் பெயிண்ட்
ஃபேப்பரிக் க்ளூ
பிரஷ்
தேங்காய் எண்ணெய்
கிராஃப்ட் கத்தி

 

கொடுக்கப்பட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். ரெடிமேட் களிமண் இல்லையென்றால் சாக்பவுடரில் வெள்ளைப்பசை கலந்து சப்பாதிமாவு போல் பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
ரெடிமேட் களிமண்ணிலிருந்து சிறிதளவு எடுத்து உருட்டிக்கொண்டு கையால் லேசாக அழுத்தி சிறிய வட்டமாக்கி அதை க்ளூவின் உதவியால் பாட்டில் மூடியின் நடுவில் ஒட்டவும். உளுந்து அளவிற்கு பல உருண்டைகள் செய்து ஒட்டிய வட்டத்தின் மேல் பசை தடவி சிறிய உருண்டைகளை நெருக்கமாக ஒட்டவும். இது சூரியகாந்திப்பூவின் நடுப்பகுதி.
அடுத்து சூரியகாந்தியின் இதழ்கள் செய்வதற்கு பட்டாணி அளவில் களிமண்ணை எடுத்து அதை திலகம் வடிவில் செய்து விரலால் அழுத்தினால் இலை போன்ற வடிவம் கிடைக்கும். இதன் நடுவில் கிராஃப்ட் கத்தியால் நீளவாக்கில் லேசாக அழுத்தி எடுக்க வேண்டும்.
மேற்சொன்ன முறையில் தேவையான அளவு இதழ்கள் செய்து எடுத்து பசை தடவி, சூரியகாந்திப்பூவின் நடுப்பகுதி ஓரத்தை சுற்றி அழகாக ஒட்டவும். இதுப்போல் எல்லா இதழ்களையும் ஒட்டி முடித்ததும் நன்றாக காயவிடவும்.
பூவின் நடுப்பகுதியில் பிரவுன் நிறமும், இதழ்களுக்கு மஞ்சளுடன் லேசாக ஆரஞ்சு வண்ணம் கலந்து வண்ணம் தீட்டினால் அழகான சூரியகாந்தி பூ தயார். பாட்டில் மூடியில் செய்த சூரியகாந்தி பூ போலவே பாட்டிலின் நான்கு புறமும் ஒட்டினால் இன்னும் அழகாக இருக்கும். களிமண் எடுக்கும் முன் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டால் கைகளில் ஒட்டாது.
ஸ்ட்ராபெர்ரி செய்ய நெல்லிக்காய் அளவு களிமண் எடுத்து உருட்டி ஸ்ட்ராபெர்ரி வடிவம் செய்யவும். முதலில் உருண்டையாக உருட்டி பின் கீழ்பகுதியை மட்டும் லேசாக உருட்டி, இருபுறமும் லேசாக விரல்களால் அழுத்தினால் ஸ்ட்ராபெர்ரி வடிவம் கிடைக்கும். பாட்டிலில் ஒட்டவேண்டிய இடத்தில் பசைதடவி அதில் இந்த ஸ்ட்ராபெர்ரியை ஒட்டவும்.
சிறிய மிளகு அளவில் மூன்று உருண்டைகள் செய்து சூரியகாந்தி இதழ் செய்தது போல் செய்து ஸ்ட்ராபெர்ரியின் மேல்பகுதியில் பசை தடவி ஒட்டவும். ஸ்ட்ராபெர்ரியின் மேல்பகுதியில் பிரஷின் பின்பகுதியினால் லேசாக அழுத்தவும். மிகச்சிறிய அளவில் களிமண் எடுத்து அதை அரை சென்டிமீட்டர் அளவிற்கு நீளமாக மெலிதாக உருட்டி அதை பிரஷால் ஏற்படுத்திய குழியில் பசை கொண்டு காம்பு போல் ஒட்டவும். காம்பின் மேற்பகுதியை லேசாக வளைத்து விடவும். பால்பாயிண்ட்பென் ரீஃபில்லின் பின்புறத்தால் ஸ்ட்ராபெர்ரியின் மீது லேசாக அழுத்தி அழுத்தி எடுத்தால் ஸ்ட்ராபெரியின் மேற்பரப்பு அழகாக வந்துவிடும். பிறகு முழுவதும் காயும் வரை பாட்டிலை படுக்கை வாட்டிலேயேவைத்திருக்கவும். இல்லையென்றால் இது வழுக்கிக் கொண்டு கீழே வந்துவிடும். நன்றாக காய்ந்ததும் ஃபேப்பரிக் பெயிண்ட் கொண்டு வண்ணம் தீட்டவும்.
கிரேப்ஸ் செய்ய மிளகு அளவில் எடுத்து தேவையான அளவு உருண்டைகளாக உருட்டவும். பாட்டிலில் பசையை தடவி இந்த உருண்டைகளை ஒன்றோடொன்று ஒட்டி திராட்சைக் கொத்து போல் ஒட்டிக்கொள்ளவும். இலை செய்ய உளுந்து அளவில் மூன்று உருண்டைகள் எடுத்து சூரியகாந்தி இதழ் வடிவில்(இலைவடிவில்) செய்து கொண்டு மூன்று இதழ்களின் அடிப்பகுதி ஒட்டிக் கொள்ளுமாறு கையில் வைத்து அழுத்தினால் திராட்சையின் இலை கிடைத்து விடும். கத்தியால் அழுத்தி இலையின் நரம்பு பகுதிகளை உருவாக்கிக் கொள்ளவும். களிமண்ணை மெலிதாக நீளமாக உருட்டி கொடி போல் செய்து பசை கொண்டு ஒட்டி விட்டு காய்ந்ததும் வண்ணம் தீட்டவும்.
சிறிய கோலி அளவில் இரண்டு உருண்டைகள் செய்து பிரஷின் பின்புறத்தால் மேல் பகுதியில் சற்று ஆழமாகவும், கீழ்பகுதியில் சிறிதாகவும் அழுத்தி எடுத்தால் செர்ரிப்பழம் தயார். களிமண்ணை மெல்லியதாக நீளமாக உருட்டி செர்ரிப்பழத்தின் மேற்பகுதியில் உள்ள குழியில் பசை தடவி ஒட்டவும். இரண்டு செர்ரிப்பழங்களையும் அருகருகே இருக்குமாறு பாட்டிலில் பசை தடவி ஒட்டவும். காம்பு பகுதி இரண்டையும் ஒன்றோடொன்று சேர்த்து பாட்டிலோடு ஒட்டி விடவும். நன்றாக காய்ந்ததும் வண்ணம் தீட்டினால் அழகான செர்ரிப்பழம் தயார்.
பெரிய நெல்லிக்காய் அளவில் களிமண் எடுத்து உருட்டி வட்டமாக தட்டிக் கொள்ளவும். பாட்டிலில் பசை தடவி ஒட்டி காயவிடவும். காய்ந்ததும் கிவிப்பழத்தின் வெட்டிய பகுதி போல் வண்ணம் தீட்டவும். டூத் பிக் கொண்டு கறுப்பு நிற புள்ளிகள் வைத்தால் விதைப்பகுதி தயார்.
இதே போல் கண்ணாடி கப்புகளில் கொடி போல் இலைகளும், பூக்களும் செய்து பசையால் ஒட்டி வண்ணம் தீட்டி, அதன் உள்ளே மணிகள் நிரப்பி கேண்டில் ஸ்டாண்டாக பயன்படுத்தலாம்.
சிறிய டேபிள், கேண்டில் ஸ்டாண்ட் என்று அவரவர் கற்பனைக்கேற்ப பல வடிவங்களில் செய்யலாம். (களிமண்ணை சீடியை விட பெரிய சப்பாத்தி போல் திரட்டி பழைய சிடி மீது பசை தடவி ஒட்டவும். களிமண்ணை உருட்டி மூன்று கால்கள் செய்து சீடியின் கீழ்பகுதியில் மூன்று இடங்களில் சமமான இடைவெளிகளில் ஒட்டி காய்ந்ததும் வண்ணம் தீட்ட வேண்டும். இது மெகா டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கிடைத்த ஐடியா).

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நான் அனுப்பிய படங்களையும் குறிப்புகளையும் தெளிவான குறிப்பாக அழகாக கோர்த்து தெளிவாக வெளியிட்ட அட்மினுக்கும் அறுசுவை குடும்பத்திற்கும் நன்றி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப அழகாக இருக்கிறது....

ஆஹா.... அர்புதமா இருக்கு கவிசிவா!!!! சூப்பர்..... சொல்ல வார்த்தையே இல்லை. அத்தனை அழகு. கண்டிப்பா நான் செய்து பார்க்கணும். என் அம்மா'கு இது போல் விஷயம் எல்லாம் ரொம்ப இஷ்டம். தேவையான பொருட்கள் வாங்கணும்.... வாங்கினதும் ஒரு முறை செய்து பார்த்து நிச்சயம் உங்களுக்கு படம் அனுப்பறேன். நல்ல ஒரு குறிப்பு தந்ததுக்கு வாழ்த்துக்கள். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுபர்ப் கவி. மிக நேர்த்தியாக இருக்கிறது வேலை. ரெடிமேட் மாதிரியே. :)
பாராட்டுக்கள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நன்றி தேன். செய்வது மிக சுலபம்தான்.

நன்றி வனிதா! கண்டிப்பாக செய்து பார்த்து சொல்லுங்கள். அம்மாவுக்கும் இது போல் செய்ய பிடிக்குமா? இப்போதுதானே தெரிகிறது வனிதாவின் அழகிய கைவண்ண திறமை யாரிடம் இருந்து வந்தது என்று!

நன்றி இமாம்மா! க்ளே ரெடிமேட்தான் :-). நான் இங்கே பயன்படுத்தியிருப்பது ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்.

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா... முதல்ல ஒரு பூ மட்டும் செய்து ஒரு போட்டோ ப்ரேம் கார்னர்'ல ஒட்டியிருக்கேன். படமும் அனுப்பிட்டேன். முதல்ல செய்தது அதனால் நல்லா இல்லைன்னு சொல்லப்டாது ;) குழந்தை ரொம்ப ஃபீல் பண்ணும் (என்னை தான் சொன்னேன்). இப்பொ ஒரு அரச இலை வினாயகர் முயற்சி செய்துட்டு இருக்கேன்.... நல்லா வந்தா சொல்றேன். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த செய்முறையை பார்த்து வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் செய்த பூவின் படம்

வந்துடுச்சா???!!! மிக்க நன்றி அட்மின் படத்தை இணைத்தமைக்கு.:) கவிசிவா.... பார்த்துட்டு சொல்லுங்க. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா இருக்கு வனி. :)

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா செய்த வனிக்கும் அழகாக வெளியிட்ட அட்மினுக்கும் நன்றிகள் பல!!!

ரொம்ப அழகா இருக்கு வனி. அப்படியே ஃபோட்டோ ஃப்ரேமின் நான்கு மூலைகளிலும் அல்லது எதிரெதிர் மூலைகளில் மட்டும் இதே போல் பூக்கள் செய்து கலர் பண்ணிடுங்க ஃபோட்டோ ஃப்ரேமின் வேல்யூ இனும் கூடிடும் :-). வனியின் கைவண்ணம்னா சும்மாவா?!!!

உங்கள் ஆர்வத்தைக் கண்டு அடுத்த ப்ராஜெக்ட்டும் ரெடி. இன்னும் கலர் மட்டும் செய்து அனுப்ப வேஙடும். அதையும் செய்து பாருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இமா... நிஜமாவா??? ;) ரொம்ப நன்றி.

கவி... ரொம்ப நன்றி. உங்க அளவுக்கு எனக்கு இன்னும் பெர்ஃபெக்ஷன் வரல. அடுத்த வேலை முடிந்ததா??? சீக்கிரம் அனுப்புங்க. செய்துடுவோம் அதையும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன பா கவிசிவா பண்ணியத பாத்து நம்ம வனிதா மேடம் பண்ணி அனுபின குரிப்ப
என்னால பாக்கமுடியல பா 0pen ஆக மாட்டுது ஏன் யாராவது சொல்லுங்க

ப்லீஸ் ஏன் என்னால் அத பாக்க முடியல சொல்லுங்க

கவி ரொம்ப சூப்பர்.வனி அக்காவின் படம் எனக்கும் தெரியவில்லையே ஏன்?

ஹசீன்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta