மட்டன் கொத்துக்கறி கட்லெட்

தேதி: January 19, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (15 votes)

 

<b> கீமாவுட‌ன் சுருட்டி கொள்ள‌: </b>
கீமா - கால் கிலோ
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
க‌ர‌ம் ம‌சாலா பொடி - கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு - ருசிக்கு தேவையான அளவு
<b> வேக‌ வைக்க‌: </b>
உருளைக்கிழங்கு - நான்கு (நடுத்தரமான அளவு)
கேரட் - இரண்டு (சிறிய‌து)
வெங்காயம் - மூன்று (பெரியது) p
பச்சைமிளகாய் - இரண்டு
கொத்தமல்லி தழை - ஒரு க‌ட்டு
க‌ர‌ம் ம‌சாலா பொடி - கால் தேக்க‌ர‌ண்டி
பிரெட் கிரெம்ஸ் - க‌ட்லெட் பிர‌ட்டி கொள்ள‌ தேவைக்கு
முட்டை - இரண்டு


 

மட்டன் கொத்துக்கறியை(கீமா) நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து (சுருட்டி கொள்ளவும்)வேக வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை நன்கு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி கீரையை மண்ணில்லாமல் கழுவி பொடியாக நறுக்கவும்.
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். கடைசியாக மீதமுள்ள கரம் மசாலாவும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
கலந்து வைத்திருக்கும் கீமா கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும், முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து வைக்கவும்.
உருட்டிய உருண்டைகளை முட்டையில் முக்கி ப்ரெட் க்ரெம்ஸில் நன்கு எல்லா பக்கமும் படுவதுபோல் செய்து தனித்தனியாக வைக்கவும். அரை மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து கட்லெட்டை போட்டு சிவந்த நிறம் வந்ததும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கவும். கரண்டியை போட்டு கிண்டினால் விண்டு போய் விடும். ஒரு போர்க்கால் மெதுவாக திருப்பி விடவும்.
சுவையான மட்டன் கொத்து கறி கட்லெட் ரெடி. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இந்த குறிப்பினை அவர் நான்கு ஐந்து முறை செய்து பார்த்து அனைவருக்கும் பிடித்திருந்ததால் இதை நம்முடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கட்லெட் செய்து முடித்ததும் சிறிது நேரம் பீரிஜரில் வைத்தால் நல்ல கிரிப்பாகும், பொரிப்ப‌தற்கு அரை மணி நேரம் முன் எடுத்து பொரிக்கவும். அதிக தீயில் வைத்து பொரித்தால் உள்ளே கொழ கொழ என இருக்கும். கிரம்ஸ் பொடி இல்லை என்றால் கார்ன்பிளேக்ஸை பொடித்து கோட் பண்ணலாம் (அ) ஓட்ஸை ஒன்றும் பாதியுமாய் பொடித்தும் கோட்டிங் கொடுக்கலாம். இதை சிக்கன் கீமா, பிஷ் கீமாவிலும் செய்யலாம். வெஜ்டேரியர்கள் உருளை, கேரட், பட்டாணி, சேனை கிழங்கு சேர்த்தும் இதே போல் கட்லெட் செய்யலாம். முட்டைக்கு பதில் மைதா சிறிது கார்ன்பிளார் கரைத்து தோய்த்து கிரம்ஸில் கோட் பண்ணவும். நிறைய செய்து வைத்து கொண்டால் தேவையான போது உடனே எடுத்து பொரித்து கொள்ளலாம்.பார்டியில் வைக்கும் சூப்பிற்கு ஏற்றது கட்லட் தான்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அக்கா சூப்பர் கட்லெட் ரொம்ப ஈசியான செய்முறை விளக்கம் பார்க்க நல்லா இருக்கு செய்தாலும் சூப்பரா இருக்கும் உங்க கைருசியே தனிதான் கண்டிப்பா ட்ரை பண்ணுவேன்

ஜலீலா இந்த மட்டன் கட்லட் நிச்சயம் டேஸ்டாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Dear Jaleela,
You are a excellent cook. I have tried some of your receipes like capsicum with egg, aathur milagu curry came very good. This cutlet also looks very nice and with the same ingredients I used to add chicken keema, fish or tuna (canned). I used to prepare the dough and keep it in the fridge for a week also.
My kids love these cutlets. Good job.

Regards,

Maggi

ஜலீலாக்கா கட்லெட் பார்க்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு :-). உங்கள் கைருசியை சொல்ல வேண்டுமா?! கண்டிப்பாக விருந்தினர் வரும் போது செய்ய வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ஜலீலா...மேடம்,எப்படி இருக்கீங்க...?
ஆஹா...பார்க்கவே சாப்பிட தூண்டும் குறிப்பை கொடுத்து இருக்கீங்க.நல்லா ருசியாக இருக்கும் என பார்க்கும் போதே தெரியுது...
விரைவில் செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பர்வீன், ஆசியா,மஹி, கவி சிவா,அப்சாரா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

மகி என் குறிப்புகள் செய்து பார்த்து நல்ல வந்தது குறித்து ரொம்ப சந்தோஷம்.

இதை மீன்,சிக்கன், வெஜ் எல்லாவற்றிலும் இதே முறையில் செய்யலாம்.

Jaleelakamal

hi every one.. Greetings !
seems will be very tasty..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி ரம்யா

என்று உங்கள்
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா

நிறைய இடத்தில் நான் உங்களை பார்த்திருக்கிறேன்.. ரொம்ப நாளைக்கு அப்றம் வருகிறீர்களா.. உங்களின் பதிவை பார்த்து மகிழ்ச்சி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Assalamu Alikum,

We r in abudhabi as beaclors and thanks for ur valuable information in preparing mutton cutlet