குலாய் அயாம் (இந்தோனேஷியன் சிக்கன் கிரேவி)

image

வழங்கியவர் : kavisiva

தேதி : வியாழன், 21/01/2010 - 12:34

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

1
1 vote
Your rating: None
 

 

  • கோழி - 1/2 கிலோ
  • உருளைக்கிழங்கு - 1
  • மிளகாய் வற்றல் - 8 (காரத்திற்கேற்ப)
  • மல்லி விதை - 3/4 மேசைக்கரண்டி
  • கேண்டில் நட்(candle nut) - 3 அல்லது முந்திரி பருப்பு - 3
  • பூண்டு - 3 பல்
  • சின்ன வெங்காயம் - 5
  • ஃப்ரெஷ் மஞ்சள் - 1" துண்டு( கிடைக்கவில்லையென்றால் 1/2தேக்கரண்டி மஞ்சள் தூள்)
  • இஞ்சி - 1" துண்டு
  • காலங்கல்(galangal root) - 2" துண்டு
  • லெமன் கிராஸ் - ஒன்று
  • சலாம் இலை - 4(கிடைக்காதவர்கள் தவிர்த்து விடலாம்)
  • கெட்டி தேங்காய் பால் - ஒரு கப்
  • இரண்டாம் தேங்காய் பால் - ஒன்றரை கப்
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • சர்க்கரை(சீனி) - 1/2 தேக்கரண்டி

 

  • கோழியை சுத்தம் செய்து நடுத்தர அளவு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • மிளகாய் வற்றலை சிறிது சுடுத்தண்ணீரில் ஊற வைத்து அதனோடு மல்லி விதை, கேண்டில் நட் அல்லது முந்திரிப்பருப்பு, மஞ்சள், பூண்டு, இஞ்சி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • கேலங்கலை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து லேசாக இடித்து(நசுக்கி) வைத்துக் கொள்ளவும்.
  • லெமன் கிராசின் அடிப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து அதையும் லேசாக இடித்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை அதிக தீயில் சுமார் 3 நிமிடங்கள் விடாமல் வதக்கவும்.
  • காலங்கால், லெமன் கிராஸ் மற்றும் சலாம் இலைகள் சேர்த்து வதக்கவும்.
  • இப்போது வெட்டிய கோழித்துண்டுகள், உப்பு, சர்க்கரை சேர்த்து 4 நிமிடங்கள் வதக்கவும்.
  • இரண்டாம் தேங்கய்ப்பால், கெட்டி தேங்காய்ப்பால் மற்றும் துண்டுகளாக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து முதலில் அதிக தீயில் வைத்து நன்றாக கொதி வந்ததும் 5 நிமிடங்கள் கழித்து தீயைக் குறைத்து மூடி போட்டு வேகவிடவும்.
  • கோழி நன்றாக வெந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.

Note:

இந்தோனேஷியாவின் மிகப் பிரபலமான கோழிக்குழம்பு இது. சாதம், வேகவைத்த நூடுல்ஸ் எல்லாவற்றோடும் இதை சேர்த்து சாப்பிடலாம். சைவப்பிரியர்கள் இதே முறையில் பீன்ஸ்(1" நீளத்தில் வெட்டியது), உருளைக்கிழங்கு(1" துண்டுகளாக்கியது), முட்டை கோஸ்(1" சதுரங்களாக வெட்டியது) சேர்த்து செய்யலாம்.