சுலபமான அரபிக் மெகந்தி டிசைன்

தேதி: January 22, 2010

5
Average: 4.2 (25 votes)

 

மெகந்தி கோன்

 

முன் கையின் மணிக்கட்டுக்கு கீழே படத்தில் உள்ளது போல் இரண்டு கோடுகள் போட்டு அதன் நடுவே புள்ளிகள் வைத்து கொள்ளவும்.
இடது பக்கத்தில் சிறு வளைவுகள் வரைந்து அதன் உள்ளே கட்டங்கள் கொண்டு நிரப்பவும்.
வரைந்த வளைவுகள் மேல் படத்தில் உள்ள டிசைனை போன்று பூ இதழ்களும், கொடிகளும் வரையவும்.
இந்த டிசைனுக்கு நடுப்பகுதியில் மீண்டும் ஒரு வளைவு வரும்படி வரைந்து அதன் நடுவே கட்டங்கள் வரைந்துக் கொள்ளவும்.
வளைவுகள் மேலே சின்ன சின்ன மொட்டுகளை வரைந்து விட்டு அதன் மேல் மாங்காய் வடிவத்தை வரையவும்.
இப்போது ஆள்காட்டி விரலுக்கு மட்டும் படத்தில் காட்டியுள்ள டிசைனை வரைந்து முடிக்கவும்.
இந்த டிசைன் வரைவதற்கு மிக சுலபமாக இருக்கும். பார்ட்டி போன்ற நேரங்களில் இதுப்போல் வரைந்து நெற்றியில் வைக்கக்கூடிய கல் போன்ற பொட்டுகளை ஒட்டி அலங்கரிக்கலாம். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள், இந்த எளிமையான அரபிக் மெகந்தி டிசைனை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

குறிப்பை சரியா மாற்றி தெளிவா வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா இருக்கு வனி. எப்படித்தான் பொறுமையாக இதெல்லாம் பண்ணுகிறீர்களோ!
குட்டீஸ் இரண்டு பேரும் எப்படி இருக்கிறார்கள்?

‍- இமா க்றிஸ்

எப்படி வனி இப்படீல்லாம்?! இப்போதே கையில் போட்டுக்கணும்னு இருக்கு. ஆனால் கைவசம் மெஹந்தி கோன் இல்லை :-(. கண்டிப்பாக போட்டுக்கொண்டு ஃபோட்டோ அனுப்புகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப அழகா இருக்கு வனி டிசைனும் சூப்பரா இருக்கு நல்ல அழகா போட்டு இருகீங்க கோன் வாங்கி கண்டிப்பா போடுவேன் ரொம்ப பிடிச்சி இருக்கு

வனிதா,
மெஹந்தி டிசைன் ரொம்ப அழகா இருக்கு. சகலகலா வள்ளியா இருப்பீங்க போல. நீங்க நெகத்த அழகா வச்சி இருக்கீங்க. எனக்கும் அழகா வளர்த்து நைல் போலிஷ் போடணும்னு ஆசை தான். ஆனா சரியாய் வரமாட்டேன்குது. எப்படி maintain பண்றீங்க?

இமா.... நேரம் இல்லாத போதும் குறிப்பை கண்டதும் பதிவு போடுறீங்க. உங்க அன்புக்கு ஈடில்லை. மிக்க நன்றி இமா. :) செபா ஆன்ட்டி நலமா? இங்கு குட்டீஸ் இருவரும் நலம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா... நலமா இருக்கீங்களா?? அவசியம் போட்டு பார்த்து சொல்லுங்க. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி பர்வீன். அவசியம் போட்டு எங்களுக்கு படம் அனுப்புங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி ரத்னா. நகம் அழகா இருக்கா???!!! எனக்கு என்னவோ என் தங்கை கை தான் பார்க்க அழகா இருக்குன்னு தோன்றும். நகத்தை ஒட்ட வெட்டாம கொஞ்சம் வளர விட்டு வெட்டும்போதே வடிவா வெட்டுங்க. தரமான நெயில் பாலிஷ் மட்டும் பயன்படுத்துங்க. நான் இதை தவிற வேறு எதுவும் செய்யிறதில்லை. இதுக்கு மேல மெயின்டைன் பண்ண பாப்ஸ், தேவா மேடம் தான் உதவ முடியும். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றாக இருக்கு. நல்ல பொறுமையா அழகா படங்களோட விளக்கத்தோடவும் குறிப்பு அருமை.
குட்டிஸ் எல்லாம் நலமா?

கலை நுணுக்கத்துடன் மெகந்தி டிசைன் நன்றாக உள்ளது.ஒவியம்,கோலம் அசத்தலா போடூவீங்க போல தெரியுது.

radharani

மிக்க நன்றி விஜி. ரொம்ப நாளைக்கு பின் உங்க பதிவு பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. :) நலமா இருக்கீங்களா??? குழந்தைகள் நலம். வாங்க அரட்டை பக்கம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி ராதா ராணி. நீங்க சொன்னதுல ஓவியம் மட்டுமே வரும்... பள்ளி படிக்கும்போது போட்டிகளில் கலந்து பரிசுகள் வாங்கியதும் உண்டு. கோலம் சுட்டு போட்டாலும் ஒரு கோடு ஒழுங்கா போட கூட வராது. :((

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா எப்பிடி இப்பிடி[வடிவேல் ஸ்டையில்ல படிங்க] கன்டிப்பா ஒரு பாராட்டு விழா வைத்தே ஆகனும் பா .பாராட்ட வார்த்தையே இல்லை

do fast mathi

வழக்கம் போல் பார்த்து பாராட்டிவிட்டு போகலாம் என்று வந்தேன்,முன்பு தாங்கள் வேறு மெகந்தி போட்டு என் கைகளை போட்டோ அனுப்ப சொல்லியிருந்ததால் ட்ரை பண்ணலாம் என்றால் மூச்,வனிதாவை பீட் பண்ணமுடியலை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக்க நன்றி மதி :). ஆமா முதல் வரி மட்டும் தான் வடிவேலு ஸ்டையிலா? அல்லது மற்றதுமா??! :((

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி ஆசியா.... நலமா இருக்கீங்களா?? உங்க பதிவு இல்லாத என் குறிப்புகள், இழைகளை நான் தேட வேணும். ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க அன்புக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி ஆசியா. எப்படி போட்டிருந்தாலும் அனுப்புங்க. நிச்சயம் என்னை விட நல்லாவே போட்டிருப்பீங்க. :) ஆமா ஏன் வனிதா'வ அடிக்கனும்??? (பீட் பண்ணனும்???) குழந்தை பாவம்பா (என்னை தான் சொல்றேன்). ஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி.....நலமா........உடல் நிலை எப்படி உள்ளது.குட்டீஸ் நல்லபடியாக இருக்கின்றார்களா....?
அருமையா மெகந்தி அசத்துறீங்க வனி.இதில் உங்களை அடிச்சிக்க ஆளே இல்லை தான்னு சொல்வேன்.ரொம்ப நல்லா இருக்கு வனி.
மெகந்தி போட்ட உங்க கைய்யும் அழகா இருக்கு.என் வாழ்த்துக்கள்.
இரண்டு நாட்களாக இங்கே பதிவு முயன்று இன்றுதான் முடிந்தது.தாமதமாக சொல்ரேன்னு கொஞ்சம் வருத்தமாக இருக்கு.பாராட்டிட்டேன்னு திருப்தியாவும் இருக்கு.மீண்டும் சந்திப்போம் வனி.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

drew it well dear..............

அப்சரா... மிக்க நன்றி. ரொம்ப ரொம்ப தாமதமா உங்க பதிவை பார்த்து பதில் போடுறேன்.... மன்னிச்சுடுங்க. படிச்சு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. :)

வித்யா ரூபினி... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai your arabi henna design is realy marvallous.i like this design.you should give more design. thank u

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai vanitha, unga desing romba super.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta