காய்கறி போண்டா

தேதி: January 22, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

உருளைக்கிழங்கு - 4
காரட் - 3
பீன்ஸ் - 50 கிராம்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
பட்டாணி - கால் கப்
கடலை மாவு - ஒன்றரை கப்
அரிசி மாவு - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி + முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி


 

வெங்காயம், காரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து மசித்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் நறுக்கின காரட்டை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அடுத்து பீன்ஸ் போட்டு 3 நிமிடம் வதக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 4 நிமிடம் வதக்கவும்.
காரட் வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு பீன்ஸ், வெங்காய கலவையுடன் போட்டு கிளறி விடவும்.
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பட்டாணி, உப்பு ஆகியவற்றை வெங்காய கலவையுடன் போட்டு ஒன்றாக கிளறி விடவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், 3/4 தேக்கரண்டி உப்பு போட்டு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
காய்கறி கலவையை சிறு எலுமிச்சை பழ அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டில் வைத்திருக்கும் உருண்டையை எடுத்து ஒவ்வொன்றாக கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போடவும்.
போண்டா நன்கு வெந்து சிவந்த நிறம் ஆனதும் எண்ணெயை வடித்து எடுத்து விடவும்.
சுவையான காய்கறி போண்டா ரெடி. மாலை நேர சிற்றுண்டியாக தேங்காய் சட்னி அல்லது சாஸுடன் பரிமாறலாம்.
இந்த காய்கறி போண்டா குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. சாந்தா </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வெஜ் போண்டாவும் அருமை,காய்கறிகளை படிப்படியாக வேக வைத்து சேர்த்த விதம் அருமை.சூப்பர் குறிப்பு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.