காய் மண்டி

வழங்கியவர் : Meenal
தேதி : வெள்ளி, 22/01/2010 - 21:46
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- வாழைக்காய் - 1
- உருளைக்கிழங்கு - 1 அல்லது 2
- கத்திரிக்காய் - 3 அல்லது 4
- முருங்கைக்காய் - 1
- மாங்காய் வற்றல் - 6 அல்லது 7
- புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
- வெங்காயம் - சிறிது
- தக்காளி - 1
- பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப
- உப்பு - தேவைக்கேற்ப
- தாளிக்க:
- கடுகு - 1 டீ ஸ்பூன்
- உளுந்து - 1 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 2 அல்லது 3 டேபில் ஸ்பூன்
- முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பிறகு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- பின் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி புளி கரைசலையும் சேர்க்கவும். காய்கறிகள் வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். கெட்டியாக வருவதற்கு தேவைப்பட்டால் அரிசி மாவு கொஞ்சம் கரைத்துவிடலாம், அல்லது அரிசி களைந்த தண்ணீர் ஊற்றலாம்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து காய்கறிகள் வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
Note:
மாங்காய் வற்றலை மட்டும் சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து பிறகு காய்கறிகளுடன் சேர்த்து வேகவைக்கவும். மாங்காய் வற்றல் இல்லையென்றால் அதற்கு பதிலாக மாங்காயையும் உபயோகிக்கலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
vegetable mandi was supb.thank u very much.