மட்டர் பன்னீர்

தேதி: January 23, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பனீர் - 250 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
முந்திரி - 100 கிராம்
கொத்தமல்லி - தேவையான அளவு
எண்ணெய் - 5 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பசும்பால் - 1/2 கப்


 

முந்திரியை ஊற வைத்து அரைக்கவும். வெங்காயம், தக்காளி நறுக்கவும்.
பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து குழைய வதங்கியதும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் விட்டு மசாலா வாசம் போக கொதிக்க விடவும்.
அரைத்த முந்திரி விழுது, பனீர், பால் சேர்த்து கொதித்ததும் கொத்தமல்லி தூவி எடுக்கவும்.


இது சப்பாத்தி, தோசை, புலாவ், பூரி அனைத்துக்கும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Very nice

all is well