இளநீர் கோழி

தேதி: January 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கோழி - அரைக்கிலோ
இளநீர் - 3 கப்
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1"துண்டு
உப்பு - தேவையான அளவு
டிப்பிங் சாஸ் செய்ய:
பச்சை தக்காளி(தக்காளி காய்) - 2
பச்சை மிளகாய் - 15 முதல் 20
சின்னவெங்காயம் - 3
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை(சீனி) - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

கோழியை சுத்தம் செய்து நடுத்தர அளவு துண்டுகளாக்கவும். பாத்திரத்தில் இளநீர் விட்டு இஞ்சி பூண்டை நசுக்கி சேர்க்கவும்.
கோழித்துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும். கோழி வெந்ததும் இறக்கி வைக்கவும்.
டிப்பிங் சாஸ் செய்ய:
எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். (இடிகல்லில் அல்லது அம்மியில் அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்)
வாணலியில் எண்ணெய் சூடாக்கி அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
இறக்கியதும் தேங்காய் எண்ணெய் கலந்து இளநீரில் வேகவைத்த சூடான கோழியுடன் பரிமாறவும்.


இந்தோனேசியாவில் ஒரு உணவகத்தில் சாப்பிட பிடித்துப்போய் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். கோழியை இளநீரில் வேக வைப்பதால் பஞ்சு போன்று மிக மென்மையாக இருக்கும். காரமான டிப்பிங் சாஸில் முக்கி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேங்காய் எண்ணெயிலேயே அரைத்த விழுதை வதக்கினால் இன்னும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கவி, எல்லா பொருட்களும் எளிதில் கிடைக்கும் பொருட்கள். அடுத்தவாரம் செய்துப் பார்த்து பின்னூட்டம் அனுப்புகிறேன்Save the Energy for the future generation

Save the Energy for the future generation

இந்திரா அக்கா கண்டிப்பாக செய்து பாருங்கள். ஆனால் கோழி சூடாகவே சாப்பிட்டு விடுங்கள். ஆறி விட்டால் மீண்டும் சூடாக்கிக் கொள்ளலாம்.

இந்தோனெஷியர்கள் சாப்பிடும் முறையையும் சொல்லி விடுகிறேன். சூடான சாதம்(தாய் பச்சரிசி சாதம்) ஒரு உருண்டையோடு சிறிது டிப்பிங் சாஸ் சிறு துண்டு கோழி சேர்த்து சாப்பிடுவார்கள். நம் சாதத்தோடும் நன்றாகவே இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி, நீ சொன்னது போல் செய்துப் பார்த்துப் பதில் தருகிறேன். இந்த வாரம் நான்வெஜ் கிடையாது.Save the Energy for the future generation

Save the Energy for the future generation