காரமெல் புட்டிங்

image

வழங்கியவர் : Vanitha Vilvaar...

தேதி : ஞாயிறு, 24/01/2010 - 21:47

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • பால் - 2 கப்
  • முட்டை - 3
  • சர்க்கரை - 4 1/2 மேசைக்கரண்டி
  • வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
  • பட்டர் - 1/2 தேக்கரண்டி

 

  • முட்டை, வெனிலா எசன்ஸ் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடிக்கவும்.
  • பாலுடன் 3 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து முட்டை கலவையுடன் கலந்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் மீதம் இருக்கும் சர்க்கரை சிறிது தண்ணீர் சேர்த்து சிறுந்தீயில் வைக்கவும்.
  • அது பாகு போல் நிறம் மாறி வரும்போது எடுத்து பட்டர் தடவிய பாத்திரத்தில் ஊற்றவும்.
  • இதன் மேல் முட்டை பால் கலவை ஊற்றவும். குக்கரில் தண்ணீர் விட்டு கலவை உள்ள பாத்திரத்தை வைக்கவும். 4 விசில் விட்டு எடுத்து குளிர்ந்ததும் பாத்திரத்தில் இருந்து எடுக்கவும்.
  • அல்லது ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதனுள் கலவை உள்ள பாத்திரம் வைத்து 15 - 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.