காராகருணை வடை

தேதி: January 25, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

காராகருணை - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 10
பொட்டுக்கடலை - அரை கப்
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லி - 2 கொத்து
கறிவேப்பிலை - 2 கொத்து
சோம்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்

காராகருணையை தோல் சீவி விட்டு காரட் துருவலில் வைத்து துருவிக் கொள்ளவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பை நுணுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் துருவிய காராகருணையை போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் பொட்டுக்கடலை மாவை போட்டு கலந்துக் கொள்ளவும்.
அதனுடன் நறுக்கின சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, பொடி செய்த சோம்பு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும். நறுக்கின வெங்காயத்தை கைகளால் பிசைந்து விட்டு போடவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். தண்ணீர் தெளித்து பிசைய தேவையில்லை.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து கையில் வைத்து வட்டமாக வடை போல் தட்டி எண்ணெய்யில் போடவும்.
பின்னர் 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு எண்ணெய் அடங்கி வடை வெந்து சிவக்க வந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து விடவும்.
சூடான மாலை நேர சிற்றுண்டி காராகருணை வடை ரெடி. இதை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம். இந்த வடை குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. குணசுந்தரி </b> அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஹாய் குணசுந்தரி.....நலமாக இருக்கின்றீர்களா...?
இந்த கருணை கிழங்கு வடையினை நானும் மாற்று முறையில் செய்வதுண்டு.
வேக வைத்து தான் செய்வேன்.அதற்க்கு இன்னும் இரண்டு மாவு வகைகளை சேர்ப்பேன்.ஆனால் நீங்கள் வேக வைக்காமல் துருவி அரைத்து செய்திருப்பது நன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன்.சுவையும் நன்றாக இருப்பது போல் தெரிகின்றது.தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.