கனவு காணும் வாழ்க்கை யாவும்... கலைந்து போகும் கோலங்கள்!!!

என்னடா வனிதா மீண்டும் பாட்டோட வந்திருக்கான்னு பார்க்கறீங்களா??? எல்லாம் மேட்டரோட தான் வந்திருக்கேன். ;)

வாழ்க்கை'ல சின்ன வயசுல இருந்து எல்லாருக்கும் தான் என்னவா ஆகனும், எப்படி இருக்கனும்'னு கனவுகள் இருந்திருக்கும். அப்படி இருக்கும் கனவுகள் நிஜம் ஆவதும் உண்டு, கனவாகவே போவதும் உண்டு!!!

இப்படி நீங்க கண்ட கனவு என்ன???
இப்போ உங்க நிஜம் என்ன???

கனவு நிஜமாகி இருந்தா.... அது எப்படி???
கனவாவே போயிருந்தா.... அது ஏன்???

இதை தான் பேச போறோம். :)

ஹாய் ஹாய் ஹாய்.... எல்லாரும் நலம் தானே??? இப்படி இழை துவங்கி அறுசுவை தோழிகள் எல்லாம் கருத்து சொல்லி ரொம்ப நாள் ஆயிடுச்சு. மீண்டும் எல்லாரும் வருவீங்கன்னு நம்பிக்கையில் துவங்கி இருக்கேன்.... ஓடி வாங்க... உங்க அனுபவத்தை சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் ஏற்கனவே ஒரு த்ரெட்ல முழுக் கதையும் சொல்லிட்டேன் வனி. சிஸ்டராகணும் என்று ஆசைப் பட்டேன். கலியாணம் ஆச்சு, ரெண்டு பசங்களும் வந்தாச்சு, இனி எங்க என்று நினைச்சிட்டிருக்கிறப்ப... எதிர்பாராம அறுசுவைக்கு வந்து...... எதிர்பாராத மாதிரி அந்த ஆசையும் நிறைவெய்தியது. ;D

‍- இமா க்றிஸ்

நல்ல கைனக்காலஜிஸ்ட் ஆக ஆசைப் பட்டேன். ஆனால் மருத்துவம் கிடைக்காததால் படித்தது பொறியியல் :-(

சரி பொறியியல் சேர்ந்தாகி விட்டது. இதை ஒழுங்காகப்படித்து வேலைக்குப் போகணும்னு நினைத்து பலவித கணக்குகள் போட்டேன். அதாவது நான் படித்து முடித்து வெளியில் வரும்போது எதற்கு நல்ல வேலைவாய்ப்பு இருக்கும் என்று துவைத்து அலசி காயப்போட்டதிலிருந்து TNEB யில் நிறைய வேக்கன்சிகள் வருகிறது என்ற தகவல் கிடைத்தது. அப்போது எல்லோரும் கம்ப்யூட்டர் பின்னால் சென்றதால் நாம் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் எடுத்தால் நமக்கு வாய்ப்பு என்று அதில் சேர்ந்தேன்.
படித்து முடித்தது கம்ப்யூட்டர் கோர்ஸ் சென்று கொண்டிருந்தேன். எதிர்பார்த்தது போலவே படித்து முடித்த 10வது மாதம் இன்டர்வியூ கார்டும் வந்தது. ஆனால் இன்டர்வியூ தேதியில் பிரச்சினை. எங்கள் திருமணத்திற்கு அடுத்த நாள் :-(. மாப்பிள்ளையோ வெளிநாட்டில் வேலைபார்ப்பவர். என்ன செய்ய என்று வந்த வாய்ப்பையும் தவற விட்டேன் :-(

திருமணத்திற்கு பின் வேலைபார்க்கும் எண்ணமே போய்விட்டது :-). ஆனால் இப்போது இந்த வாழ்க்கையும் பிடித்து விட்டது.

இப்படி நான் திட்டமிடுவது ஒன்று நடப்பது ஒன்று என்பது வாடிக்கையாகி விட்டதால் இப்போதெல்லாம் வாழ்க்கையை அதன்போக்கில் எடுக்கக் கற்றுக் கொண்டேன்.

ஆனால் என் தூக்கத்தில் வந்த ஒரு கனவு நனவாகியதுதான் விசித்திரம். எங்கள் திருமணம் நிச்சயிக்கப் படுவதற்கு சுமார் 20நாட்களுக்கு முன் ஒரு கனவு. அதில் நான் சிங்கப்பூர் வருவது போலவும் அங்கே ஒரு வீட்டில் தங்கியிருப்பது போலவும் சுற்றிப்பார்ப்பது போலவும் ஒரு கனவு. பொதுவாக கனவு அதிக நேரம் நினைவில் இருக்காது என்பார்கள் ஆனால் எனக்கு எல்லாமே ஞாபகத்தில் இருந்தது. நானும் ஏதோ கனவு என்று விட்டு விட்டேன். அதன் பின் 3வது நாள் என் கணவரின் ஜாதகம் குடும்பநண்பர் ஒருவர் மூலமாக கிடைத்தது. அடுத்தநாள் ஜாதகம் பொருந்தியதாக தெரியவும் என்னைப்பார்க்க அவர்கள் வீட்டு பெரியவர்கள் வந்தார்கள். அதன் பின் ஒருவாரத்தில் சிங்கப்பூரில் இருந்து இவர் வந்து பார்த்து பேசி, திருமணம் 6மாதம் கழித்து என்று நிச்சயமானது. எல்லாமே 20நாட்களுக்குள் முடிந்து விட்டது. அப்போதும் இந்த கனவைப் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. திருமணம் முடிந்து சிங்கையில் இறங்கி என் நாத்தனார் வீட்டுக்கு சென்று அவர்கள் பிளாக்கின் கீழ் இறங்கியதும் எனக்கு பயங்கர ஆச்சரியம். அந்த பிளாக் அப்படியே என் கனவில் வந்த நான் தங்கியிருந்த கட்டிடம் போலவே இருந்தது. வீட்டிற்குள் சென்றால் அந்த வீட்டின் அமைப்பும் என் கனவில் வந்தது போலவே இருந்தது. அதன் பின் அங்கு அண்ணியின் வீட்டிற்கு அடுத்துள்ள கோவிலுக்கு சென்றோம். அங்கு செல்லும் வழியில் என் ஆச்சரியம் அதிகமானது. கனவில் சிங்கையில் நான் சுற்றிப்பார்த்த காட்சிகள் போலவே இருந்தது. இது எப்படி என்பது இன்னும் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இமா.... சிஸ்டர் ஆகணும்'னு நினைசிங்களா???!! என் தங்கையும் இதே தான் சொல்லுவா... :D எங்க வீட்டுல எல்லாரும் அப்ப்டி எங்க போயிடுவாளோ'னு பயந்தாங்க.... காலக்கொடுமை... அவளுக்கு கல்யானம் ஆகி ஒரு பையன் மாட்டிகிட்டான். :)) ஹஹஹஹா. உங்க ஆத்துக்காரரும் இதை தான் சொல்லிகிட்டு இருப்பார் இப்போ. இங்க வந்து சிஸ்டர் மட்டுமா ஆனீங்க??? மதரா கூட ஆக்கிட்டாங்க நம்ம தோழிகள். ;) வந்து முதல் பதிவு போட்டு உங்க கனவையும் நிஜத்தையும் சொன்னதுக்கு மிக்க நன்றி இமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா.... முதலில் கண்ட கனவு பலிக்காம போனாலும், பின்னாடி வந்த கனவாது பலிச்சுதே'னு சந்தோஷபடுங்க. ;) சில விஷயங்கள் இப்படி தான் நம்ம அறிவுக்கு எட்டாம இருக்கும். என் அம்மா'வும் நிறைய கனவுகள் பலிக்குதுன்னு பல நாட்கள் தூக்கம் இல்லாம தவிப்பாங்க. எனக்கு கனவு நிறைய வரும்... ஆனா எதுவும் பலிக்கல. மிக்க நன்றி கவிசிவா.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா
ஹ..ஹ...ஹா..ஹா...ஆனா அந்த கதையை நான் படிக்கலீங்க...ஒன்ஸ் மோர்....அட்லீஸ்ட் லிங்க் ப்ளீஸ்....
கவிசிவா
ஆச்சரியம்தான்...இந்த மாதிரி சம்பவங்களால்தான் கடவுள் நம்பிக்கை அதிகமாகிறது....
வனிதா உங்கள் கனவு.....
எனக்கு கனவு வந்து எதுவும் நினைவில்லை...
வாழ்நாள் கனவு எனக்கு அருமையான பெண் குழந்தை வேண்டும்(நிறைவேறிற்று).....அந்த குழந்தைக்கு நல்ல மாரல் சப்போட் கொடுத்து தன்னம்பிக்கையுடன் வளர்க்கவேண்டும்....நிறைவேற்ற முயற்சிக்கிறேன்....அவளுக்கு குழந்தைகள் பிறக்கும் வரை நான் உயிரோடு இருக்க வேண்டும்....நிறைவேற கடவுளை பிரார்த்திக்கிறேன்....

எல்லாரையும் கேட்டுட்டு நான் சொல்லாம இருந்தா 4 பேர் வந்து கேள்வி கேப்பீங்க... அதனால் நானும் சொல்லிடறேன்.

நான் பள்ளி முடிக்கும்வரை என் கனவு முழுக்க இன்னவா ஆகணும்'னு இல்லை.... பொதுவா பெரிய ஆள் ஆகனும், நிறைய சம்பாதிக்கனும், எல்லாத்துக்கும் வேலைக்கு ஆள் இருக்கனும் இப்படி தான் இருந்தது. பள்ளி முடிக்கும்போது நான் வாங்கின மார்க் பார்த்து எங்க அப்பா நான் தேர மாட்டேன்னு தெரிஞ்சுகிட்டார். ;) என்ன படிக்க விரும்பரன்னு கேட்டார். அப்படி குறிப்பா எந்த ஆசையும் இல்லைன்னு சொன்னதும் போய் B.Sc (comp. sci.)அட்மிஷன் போட்டார். 12th மார்க் வாங்கின அடி, அப்பா பட்ட கஷ்டம் புத்தி குடுத்துச்சு. ஒழுங்கா படிச்சேன். M.C.A. மெரிட்'ல கிடைச்சுது. வெளிய வந்ததும் நான் கனவா நினைச்ச கம்பனி'யிலேயே வேலை கிடைச்சுது. 3 வருடம்.... கல்யாணம்!!! வேலை பார்க்கும் கனவு கலைந்தது!!! இன்னும் ஒரு வேலைக்காக ஏங்கிகிட்டே இருக்கேன். பிள்ளைகள் ஒரு வயசுக்கு வரும் வரை காத்திருக்க தான் வேணும்.

ஆனால் நான் ஆசை பட்ட மாதிரி இப்பவும் வேலைக்கு மட்டும் நிறைய ஆள் இருக்காங்க. என்ன அது என் சம்பாத்தியத்தில் இல்லை ;). என்னைக்காது நான் கனவு கண்ட மாதிரி பெரிய ஆளா வருவேன்னு இன்னும் கனவு கண்டுகிட்டே இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேன் பாருங்க நீங்க கேட்கும் முன் சொல்ல நினைத்தேன்... ;) எனக்கு முன்னாடி பதிவு போட்டுட்டீங்க!!! இது நல்லா இருக்கு.... உங்க கனவை தான் சொல்றேன். நினைச்சது எல்லாம் சின்ன ஆசைகள், அதனால் நடக்கும் போது பெரிய சந்தோஷம் இருந்திருக்கும். உங்க பொண்னோட பேர பசங்களையும் பார்ப்பீங்க. :) அதுக்கு நானும் இறைவனை பிராத்திக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்கே... எங்கே... எங்கே தோழிகள்?? வாங்கப்பா... வந்து சொல்லுங்கப்பா உங்க கனவுகளை எல்லாம்.... படிக்கலாம்'னு வந்து ஆசையா பார்த்தா ஒன்னுமே காணோம். :(( அழுதுடுவேன்.... வந்துடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு பெருசா ஆசைனு ஒன்னுமில்லை ஏதாவது ஒரு சின்ன வேலையா பாத்துக்குட்டு இல்லைனா tution மட்டும் எடுத்துக்கிட்டு பெரிய கூட்டு குடும்பத்தில மாமியார் நாத்தனார்னு அப்பப்ப சண்டை அரட்டை எல்லாம் செஞ்ஞுக்கிட்டு சந்தோசமா life ஓட்ட ஆசைஎன்ன செய்ரது இப்ப 4 சுவத்துக்குல்ல அவரும் குட்டிமாவுந்தான் என்னோடனு life ஆயிருச்சு இந்த குலிர்க்குல்ல இப்ப நல்லா dress பன்னக்கூட பிடிக்கலை இந்த life-m நல்லாத்தான் இருக்கு நம்மலபத்தியும் புள்ளையப்பத்தியும் மட்டுமேthink பன்ரோம்

மேலும் சில பதிவுகள்