திருமணத்தின் போது கால்களுக்கு போடக்கூடிய மெகந்தி டிசைன்

தேதி: January 29, 2010

4
Average: 3.2 (9 votes)

 

மெகந்தி கோன்

 

கால் மணிக்கட்டில் ஒரு பூவை வரைந்து கொள்ளவும்.
வரைந்த பூவின் நடுவிலிருந்து தொடங்கி பாதம் வரை வலதுப்பக்கத்தில் இரட்டைகோடுகளாக மூன்று வளைவுகள் வரையவும். அதன் முதல் வளைவுகளின் மட்டும் சின்ன சின்ன வளைவுகள் வரையவும்.
உள்ளே வரைந்த வளைவுகளின் மேலேயே இன்னொரு வளைவு வரைந்து அதன் நடுவே மருதாணி கொண்டு நிரப்பவும்.
இரண்டாவது வளைவின் நடுவில் படத்தில் உள்ள டிசைன் வரைந்து அதன் கீழ் முத்துக்கள் போன்று வரைந்துக் கொள்ளவும்.
இதே போல் இடதுப்பக்கமும் பூவில் நடுவிலிருந்து தொடங்கி பாதம் வரை மூன்று வளைவுகள் வரைந்து கொள்ளவும்.
வலதுப்பக்கம் வரைந்த அதே டிசைனை இடதுப்பக்கம் வளைவுகளிலும் வரையவும்.
இதன் நடுப்பகுதியில் படத்தில் உள்ளவாறு பெரிய பூ வரைந்துக் கொள்ளவும்.
வரைந்த பூவின் நடுவிலிருந்து சற்று தள்ளி மீண்டும் ஒரு சிறிய பூவை கட்டைவிரல் பக்கம் வருவது போல் வரையவும்.
அந்த சிறிய பூவின் மையத்திலிருந்து கட்டைவிரலை நோக்கி கொடி போல் வரைந்துக் கொள்ளவும்.
மேலும் கட்டைவிரலில் படத்தில் உள்ள டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
இதே போல் முழங்காலில் வரும்படி முதலில் வரைந்த பூவுக்கு மேலே பூக்கள் வரைந்து, வளைவுகள் வரைந்து பெரிய அளவிலும் ஹென்னா போடலாம். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் திருமதி. வனிதாவில்வாரணிமுருகன் அவர்கள், திருமணத்தின் போது கால்களுக்கு போடக்கூடிய இந்த மெகந்தி டிசைனை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

காலுக்குப்பொருத்தமான அழகான டிசைன். வாழ்த்துக்கள்
அன்புடன்,
செபா.

காலுக்குப்பொருத்தமான அழகான டிசைன். வாழ்த்துக்கள்
அன்புடன்,
செபா.

வனிதா உஙக மாதிரி நான் ஸ்மார்ட் இல்ல பா ,முதல்ல இருக்கிரது டிரை பன்னுதற்குள்ள அடுத்ததுவா[கலக்குரீங்கபா]

do fast mathi

ஹாய் வனிதா காலில் போட்ட டிசைன் ரொம்ப அழ்கா இருக்கு காலும் அழகா இருக்கு யாரு காலு வனிதா

வனி மருதாணி கோன் ரெடிமேடா உள்ளதை உபயோகிப்பிங்களா, இல்லை நிங்களா கோன் செய்து வைப்பிங்களா, முடிந்தால் அடுத்த முறை கோன் எத்தனை எந்த அளவு ஹோல் போடனும் என்பதும், மருதாணியில் என்னவெல்லாம் கலக்கனும் என்பதும் சொல்லி தந்தால் என்னை மாதிரி கத்துகுட்டிக்கு பயனுள்ளதாக இருக்கும் வனி. நன்றி.

வனி இப்படி அழகழகான டிசைன் எல்லாம் கொடுக்கறீங்களே! என் கை துறு துறுன்னு வருது போட்டுக்கணும்னு. ஆனால் மருதாணி கோன்தான் இல்லை :-(. இதுக்காகவே இந்தவாரம் சிங்கை போய் கோன் வாங்கணும்.

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு வனிதா டிசைனும் உங்க காலும் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

குறிப்பை அழகாக வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு என் நன்றிகள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி செபா ஆன்ட்டி. :) நலமா இருக்கீங்களா?? எங்கே ரொம்ப நாளா காணோம்?!

மிக்க நன்றி மதி. :) மெதுவா ஒவ்வொன்னா போட்டு பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி பர்வின். போட்டு பாருங்க அவசியம் படம் அனுப்புங்க.... :)

மிக்க நன்றி கவிசிவா.... போட்டு கலக்குங்க.. படமும் அனுப்புங்க. இம்முறை போனால் நிறைய வாங்கி பிரிஜ்ஜில் போட்டு வைங்க. எக்ஸ்பைரி டேட் பார்த்து வாங்குங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

விஜி... முதல்ல நன்றி சொல்லிடறேன்... ;) இப்போ உங்க சந்தேகத்துக்கு பதில்....

1. நான் பயன்படுத்தி இருக்கிறது ரெடிமேட் கோன் தான். ஆனால் நானே செய்து பயன்படுத்தும் பழக்கமும் உண்டு.

2. மருதாணி பொடிய வாங்கி ஒரு துணியில் சலிச்சுக்குங்க. எலுமிச்சை சாறு பிழிந்து வடிகட்டி அதை சேர்த்து பேஸ்ட் ரெடி பண்ணுங்க. கடையில் பொட்டலம் மடிப்பது போல் கோன் தயார் செய்து மருதாணி பேஸ்ட் போட்டு மேலே பின் அடிங்க. கோன் வாய் பகுதி எவ்வளவு பெருசா வெட்டணும்'றது முழுக்க முழுக்க நீங்க போட போற டிசைன் வைத்து முடிவு பண்ணனும். எப்பவும் முதல்ல மெல்லிசா வரும்படி வெட்டிகிட்டு அப்பறம் போட்டு பார்த்து பெருசா தேவை பட்டா வெட்டிக்கங்க. எடுத்ததும் பெரிசா வெட்டிட்டா மெல்லிய கோடுகள் போட வராது.

இன்னும் ஏதும் சந்தேகம் இருந்தா சொல்லுங்க. கண்டிப்பா சொல்லி தரேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கால் வண்ணம் வனியில் கண்டேன். கலக்கல் வனி. ;)

எல்லாவற்றையும் விட்டு விட்டு உங்கள் முன்னால் வந்து காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்து விட வேண்டும் போல் இருக்கிறது. ;)

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி இமா... நானும் ஒவ்வொருமுறை நீங்க சொன்ன பிறகும் ஒவ்வொரு ப்ளைட்டா இமா வந்திருக்காங்களா'னு தேடிகிட்டு இருக்கேன்... நீங்க தான் வந்தபாடில்லை. வாங்க சென்னை'கு. கை கால் எல்லாம் மருதாணி போட்டு புது கல்யாண பெண் போல் அனுப்பறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா டிசைன் ரொம்ப நல்லா இருக்கு அத விட உங்க கால் ரொம்ப அழகா இருக்கு:-))..சூப்பர் டிசைன்
உங்களை அங்குள்ள மக்கள் சேலையில் பார்த்து அழகாக இருப்பதாக எங்கோ படித்ததாக நியாபகம் சொன்னது ரொன்ம்ப சரியாக தான் இருக்கும் போல..காலை பார்த்தால் பேரழகியாக இருப்பீர்கள் போலிருக்கு

ஆஹா தளிகா... எனக்கு இப்பவே சளி.... நீங்க வேற பெரிய ஐஸ் வெச்சுட்டீங்களே!!! சிரியா மக்கள் யாரை புடவையில் பார்த்தாலும் அப்படி தான் சொல்லுவாங்க. :( அதை எல்லாம் நாம நம்பப்டாதாக்கும். .... அழகே இல்லை... அப்பரம் எப்படி பேரழகி??!! ;) உண்மைய ஒத்துக்க தானே வேணும். மருதாணி போட்டு உங்க படத்தையும் அனுப்புங்க.... நாங்க பார்க்க ஆசையா இருக்கோம். :) மிக்க நன்றி தளிகா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆ ன்னு வாயை பிளக்க வைத்து விட்டீர்களே.சூப்பர்.காலுக்கு மெட்டி அழகா?மருதாணி அழகான்னு பட்டிமன்றமே வைக்கலாம் போல் தெரிகிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக்க நன்றி ஆசியா. நீங்க சொன்ன தலைப்பு நல்லா இருக்கே.... அடுத்த பட்டிமன்றத்தில் போட்டுடுவோம். ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

mehandi design nandra irukiradhu inum niraya design podalame

சித்ரா... மிக்க நன்றி. நிறைய வந்துட்டே தான் இருக்கு அறுசுவையில். தொடர்ந்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

i like very much . its real super design . nice . thanks vanitha .

dont angry

சங்கீதா... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta