அவல் வடை

தேதி: January 29, 2010

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

அவல் -- 1 கப்
கடலை மாவு -- 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 4 என்னம்
சீரகம் -- 1 டீஸ்பூன்
இஞ்சி -- 1/2 அங்குலம் அளவு
சோடா மாவு -- 1 சிட்டிகை அளவு
கறிவேப்பிலை -- 1 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
உப்பு , எண்ணைய் -- தே.அ


 

அவலை வெறும் வாணலியில் 1 நிமிடம் வறுத்து பின் மிக்ஸியில் ஒரு சுத்து மட்டும் சுத்தி எடுக்கவும்.
தண்ணீர் விட்டு தூசியை நீக்கி 2 மணிநேரம் ஊறவிடவும்.
பின் தண்ணீரை வடிக்கவும்.
பச்சைமிளகாய்,சீரகம்,இஞ்சியை கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும்.
அதை அவலுடன் சேர்க்கவும்.
மீதியுள்ள அனைத்து பொருட்களுடன் உப்பு சேர்த்து வடை மாவிற்கு பிசையவும்.
பின் வாணலியில் எண்ணையை காயவைத்து வடையை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
வித்தியாச சுவையுடன் அவல் வடை ரெடி.


மேலும் சில குறிப்புகள்