வழங்கியவர் : kamar_nisha
தேதி : Sat, 30/01/2010 - 13:21
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- அரிசி மாவு - ஒரு கப்
- முழு உளுந்து - அரை கப்
- கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
- மிளகாய் வற்றல் - ஒன்று
- பச்சை மிளகாய் - ஒன்று
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
- இஞ்சி - அரை அங்குலத் துண்டு
- உப்பு - அரை தேக்கரண்டி+ஒரு சிட்டிகை
![]() |
இஞ்சியை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதே போல கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். |
![]() |
அரிசி மாவு மற்றும் கடலைப்பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தனித்தனியாக அரை மணி நேரம் ஊற வைக்கவும். முழு உளுந்தில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். |
![]() |
ஊற வைத்த உளுந்தை தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். |
![]() |
அரிசி மாவில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு அரைத்த உளுந்து மாவை போட்டு கலந்துக் கொள்ளவும். |
![]() |
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு ஒரு நிமிடம் வதக்கி மாவில் போட்டு கிளறி விடவும். |
![]() |
அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும். |
![]() |
தோசைக்கல்லில் அல்லது தவாவில் எண்ணெய் தடவி கரைத்து வைத்திருக்கும் மாவை ஒன்றரை கரண்டி அளவு ஊற்றி நடுவில் லேசாக அழுத்தி வட்டமாக தேய்க்கவும். |
![]() |
மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து விடவும். |
![]() |
சுவையான அரிசிமாவு அடை ரெடி. இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. கமர் நிஷா அவர்கள். |
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்









uora vaitha kadala paruppai enna seiya?