முட்டை பழம்

வழங்கியவர் : thalika
தேதி : ஞாயிறு, 31/01/2010 - 17:09
ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 3 குழந்தைகளுக்கு
- நேந்திரம் பழம் - ஒன்று
- முட்டை - 2
- ஏலக்காய் பொடி - ஒரு பின்ச்
- சர்க்கரை - 3 ஸ்பூன்
- முந்திரிப்பருப்பு - 10
- நெய் - 2 ஸ்பூன்
- முதலில் நேந்திரம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- வேறொரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதில் நறுக்கின பழத்தை சேர்த்து வதக்கவும். லேசான இளம் பொன்னிறத்துக்கு வந்தபின் தீயை அணைத்து விட்டு முட்டை, முந்திரி கலவையுடன் கலக்கவும்.
- பின்பு வாணலியில் பழம் பொரித்த மீதமுள்ள அதே நெய்யில் இந்த கலவையை ஊற்றி தீயை நன்கு குறைத்து மூடி இட்டு வேக விடவும்.
- மேற்புறம் திருப்பாமலேயே வேகும் வரை மூடி சுமார் 8 நிமிடங்கள் விடவும். பின்பு அதனை தட்டில் கவிழ்த்து வெட்டி பரிமாறவும்.
Note:
குழந்தைகளுக்கு ஒரு போஷாக்கான மாலை நேர சிற்றுண்டி.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
just wanted to say hi to everybody