பட்டிமன்றம் 15 : இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா?'

இவ்வார தலைப்பு நமது தோழி திருமதி தாஹிரா பானு அவர்களின் தலைப்பை ஒட்டி, 'இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா?'

என்னைக் கேட்டால் என்னால் ஒரு முடிவிற்கும் வரமுடியவில்லை. ஆகவே தோழிகளே உங்கள் முன் இத் தலைப்பை வைத்துள்ளேன் வழக்கம்போல் வந்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வின்னி... ஏன் ஏன் ஏன் இப்படி??? நம்ம மக்கள் ஆமை மாதிரி.... நிதானமா வந்தாலும் வந்துடுவாங்க. ;) கவலை வேண்டாம். தலைப்பு உண்மையில் நல்ல தேவையான தலைப்பு... ஆனா அதை பற்றி வாதிக்க தான் எல்லாராலையும் முடியுமான்னு தெரியல.... அதனால் கூட வராம இருக்கலாம். பார்ப்போம்.... வேண்டுமானால் தலைப்பை மாற்ற வேண்டுமா'னு கேட்டு பார்க்கலாம்.... ஆம் என்று பலரும் சொன்னால் மாற்றி குடுத்துடுவோம், இல்லைன்னா தொடருவோம். இதில் சாரி சொல்ல ஏதும் இல்லை... ஒவ்வொருவருக்கு ஒரு ரசனை... அதுக்கு ஏற்றார் மாதிரி தான் அவங்க தலைப்பு. உங்களுடையது சமுதாயத்தின் மேலும் நாட்டின் மேலும் அக்கரை கொண்ட தலைப்பு. காத்திருப்போம். பாருங்க இப்பவே தேன்மொழி எங்க கட்சி கூட சண்டை பிடிக்க வந்துட்டாங்க. :)

வாங்க தேன்மொழி வாங்க.... அது எப்படிங்க... எதுவுமே மாறாம நாடு முன்னுக்கு வரும்?? சில விஷயங்களை சரி செய்ய, சில சாதனைகள் செய்ய சின்ன இழப்புகள் இருக்க தான் செய்யும். நீங்க எங்க பிடிச்சு வெச்சாலும் நானும் கவிசிவா'வும் ஆராய்ச்சி வேணும்'னு தான் சொல்வோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறிவியல் சார்ந்த நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்த வின்னிக்கும்,தலைப்பை கொடுத்த தோழி தஹிரா பானுவுக்கும் வாழ்த்துக்கள்.

விண்வெளி ஆராய்ச்சி அவசியமே என்பதுதான் என் கருத்தும்……

புராணகாலம்தொட்டு சமீப இலக்கியங்கள்வரை நமக்கு

ஊட்டப்பட்ட பாரதியின்”சந்திர மண்டலத்தியல்

கண்டுதெளிவோம்”
கனவுகள் நனவாகத்தொடங்கியிருப்பது ..!!!!!!!

தொடர்ந்து நடந்துவரும்

இந்த விண்வெளி ஆராய்ச்சிகளால்தான்…

//நாம் (மனிதர்கள்) கண்ணில் படும் இயற்கையான யாவற்றையும் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நாசமாக்கி கொண்டே போகிறோம்.. கடலை நிரப்பி நிலமாக்குகிறதும், நிலத்தை தோண்டி பெட்ரோல் எடுப்பதும் ....
இயற்கையை நாம் நோண்ட அது எங்கோ வெடிக்கிறது...//

.தோழி…நம்

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி .....

"எப்படி விண்வெளி

தொழில்நுட்பத்தை மண் சார்ந்த பிரச்சனைகளை

தீர்க்க

பயன்படுத்தலாம்"

எனும் பார்வையிலேயே திட்டமிடப்பட்டுள்ளதே

தவிர மண்ணில் பிரச்சனைகளை உருவாக்க அல்ல :-)

உதாரணமாக ஒரு நாட்டின் முன்னேற்றத்தை முக்கியமாக தீர்மானிப்பது அந்நாட்டில் கிடைக்கும் எரிசக்தி வளமே ஆகும்.

பாரதத்தின் தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானியும்

முன்னாள் ஜனாதிபதியுமான

அப்துல்கலாம் “பாரதத்தின் ஒரு வருடக் கால ஆற்றல்

தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய நிலவிலிருந்து

கிடைக்கும் 25 கிலோ ஹீலியம்-3 போதுமானது” என

கூறுகிறார்.

நிலவில் ஹீலியம்-3 கிடைக்கும் இடங்களை

நுண்ணறிய உதவுவது விண்வெளி ஆராய்ச்சியில்

கண்டுபிடிக்கப்பட்ட சந்திரயான்தான்.
.
இந்த ஹீலியம் மூலமாக கிடைக்கும் சக்தியானது

சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது. நிலவு மீது

சந்திரயான் மேற்கொள்ளப்போகும் ஆராய்ச்சி மூலமாக

நமக்கு இந்த எரிபொருள் சந்திரனில் எங்கெங்கு

கிடைக்கும் என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.

தொடக்க கால ஆராய்ச்சிகளின் போது நிலவில் நீர்

இல்லை என கருதப்பட்டது.

அதற்குமேல் ஆராய்ச்சிகள்

மேற்கொள்ளாமலிருந்திருந்தால் அதுவே

உண்மையென நம்பியிருப்போம்.:-)

அதன்பிறகு முயற்சி எடுத்து 1998-இல் நாசா

அனுப்பிய லூனா

ப்ராஸ்பெக்டர் எனும் சந்திரனை ஆராயும்

ஆய்வுக்கலம் நியூட்ரான்

ஸ்பெக்ட்ரோ மீட்டர் கருவி மூலம் நிலவின்

துருவப்பிரதேசங்களில்
நீர் இருக்கக் கூடும் என தெரிவித்தது.
.
இந்நிலையில் சந்திரயான் அனுப்பும் தொலைக்கட்டுப்பாட்டு நுண்ணோக்கு ரோபோ கருவியான “இம்பாக்டர்” மூலம் நிலவின் நிலத்தடி நீர் மற்றும் துருவ நீர் குறித்த ஆராய்ச்சிகளையும் சந்திரயான் மேற்கொள்ளும்.

விஞ்ஞான ஆராய்சி ஒருபுறமிருக்க, மற்றுமொரு முக்கியமான நன்மையும் நமக்கு கிடைக்கிறது

அது விண்வெளித்துறையில் கிடைக்கும் வணிக வாய்ப்புகள். !!!

ஒரே வாகனத்தைக்கொண்டு ஒன்றுக்கும் அதிகமான

செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்

பாரத நாட்டின் தொழில்நுட்பங்களால், ..!!!!

ஐரோப்பிய/தெனமெரிக்க நாடுகளின்

செயற்கைக்கோள்களை

விண்ணில் செலுத்த வியாபாரரீதியான வாய்ப்புகள்

நமக்கு
கிடைத்திருக்கின்றது.

ஆகவே…விண்வெளி ஆராய்ச்சி அவசியமே ...!என்பதுதான் என் வாதம்
.
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்கள் இருவர் தவிற வேறு யாரும் வராததால் எனக்கு தலைப்பின் மேல் சந்தேகமாக போய்விட்டது. பட்டியை தொடர்ந்து நடத்த முடியுமா என்று கவலையாகி விட்டது.

ஒகே இப்ப பாருங்க நான் அழுததில்:) தேனும், இளவரசியும் வந்து இருக்காங்க. இதை தொடர்ந்து நடத்துவோம்.

தேன், இளவரசி

தேன், ஒத்த நாளா எதிரணியில் வந்து இருக்கீங்க. முதலில் நீங்கள் இங்கு வந்ததற்கு மிக்க நன்றி.உங்களின் கவலையையும் கருத்தில் கொண்டே ஆகவேண்டும். உங்களிடமிருந்து மேலும் வாதங்களை எதிர்பார்க்கிறேன்.

இளவரசி, உங்கள் வருகைக்கு நன்றி. வின்வெளி ஆராய்ச்சிகளால் வியாபர ரீதியாகவும் பலன் உண்டு என்ற கருத்தை முன் வைத்து இருக்கீங்க. உங்களின் வாதத்திற்கு எதிரணியினர் (தேன்...தேன்.. நீங்கதான்:-)) என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.

என் வாதங்கள்
1 . Falling Radioactive Satellites
Spy satellites are usually powered by radioactive decay. When they fall, they can cause dire consequences.
2. Loss of Privacy
Satellites and satellite telecommunications are a technology which comes of space exploration, and their advent has resulted in a loss of privacy. All of our messages now can be intercepted.
3. Spectacular Failures are Huge Money Wasters
Mars Observer fails in 1993 at a cost of 1 billion dollars. For nothing.
4. Death
Manned space exploration has resulted in the deaths of a number of highly skilled and talented individuals.
5. Proliferation of mechanisms for killing lots of people
Exotic means for killing people are now possible, from directed energy beams to "thunder rods" which when "tossed down from orbit, these long and slender kinetic-energy devices use their own mass and very high velocity to create a destructive effect. "
6. Terrorism is Facilitated by the Global Positioning System (GPS), a product of space exploration
Terrorists can disrupt the GPS, as well as use it for targeting (e.g.,crashing airplanes in to skyscrapers).
7. Small possibility that we are advertising our existence to warlike aliens who may attack us.
8.Space Exploration Can Cause Corporate Corruption
Since it takes a large government bureacracy to successfully engage in space exploration, corruption is inevitable.
ஆங்கிலத்தில் எதிரணியினரும் பதித்திருப்பதால் நானும் மொழிமாற்ற முயற்சிக்கவில்லை....
பி.கு:
நடுவரைப் பின்பற்றி அநேகமாக நானும் :(.
அழுதால் இரண்டு பேர் வந்துடுவாங்கல்ல............

//1 . Falling Radioactive Satellites
Spy satellites are usually powered by radioactive decay. When they fall, they can cause dire consequences//

அப்போ அணு உலைகள் எல்லாவற்றையும் இழுத்து மூடிவிடலாமா? ஒரு செர்னோஃபில் அணுக்கசிவால் பாதிப்பு ஏற்பட்டது என்பதற்காக உலகில் உள்ள அல்லா அணு உலைகளையும் மூடியா விட்டார்கள். பாதுகாப்பு விஷயங்களை அதிகமாக்கினார்கள்.

//2. Loss of Privacy
Satellites and satellite telecommunications are a technology which comes of space exploration, and their advent has resulted in a loss of privacy. All of our messages now can be intercepted.

அப்புறம் எப்படீங்க இந்த தீவிரவாதிகளின் தகவல் பரிமாற்றத்தை அறிந்து கொள்வது? இவ்வளவு வசதிகள் இருக்கும் போதே இவனுங்க கொட்டம் தாங்கலை. இன்னும் இதெல்லாமும் இல்லேன்னா தெருவில் இரங்கி நடக்கக் கூட முடியாது. அப்புறம் ப்ரைவசி பத்தி பேசி பிரயோஜனமே இல்லை.

//3. Spectacular Failures are Huge Money Wasters
Mars Observer fails in 1993 at a cost of 1 billion dollars. For nothing.//

இப்படி சிலதவறுகல் நடந்து அதனால் பொருள்நஷ்டம் எற்படுகிரது என்பதற்காக ஆராய்ச்சியே வேண்டாமென்பது நியாமாகப் படவில்லை. அனுப்பிய விண்கலங்கள் எல்லாம் வெடித்துச் சிதறி விட்டதா அல்லது எல்லா முயற்சிகளுமே தோல்வியடைந்தனவா? ரைட் ப்ரதர்ஸ் அய்யோ செலவாகுதே முயற்சியெல்லாம் தோல்வியடையுதேன்னு எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிருந்தாங்கன்னா இன்னிக்கு நீங்களும் நானும் குண்டுச்சட்டிக்குள்தான் குதிரை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும். சிங்கையிலிருந்து நான்கு மணிநேரத்தில் இந்தியாவுக்கு பறக்க முடியாது. இப்படித்தான் விண்வெளி ஆராய்ச்சியிலும் சில
தோல்விகள் ஏற்பட்டாலும் அதன் பின் கிடைக்கும் வெற்றிகளால் கிடைக்கும் பயன் மிக அதிகம். செவ்வாய் கிரக ஆராய்ச்சி நன்றாகவே முன்னேறிக் கொண்டிருக்கிறது.

//4. Death
Manned space exploration has resulted in the deaths of a number of highly skilled and talented individuals.

அவங்க எந்த துறையில் திறமையானவர்கள்? விண்வெளி ஆராய்ச்சித்துறையில்தானே?! அவர்களுக்கே தெரியும் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்று. ஸ்மால் பாக்ஸ் கிருமிகளை தன் உடலில் செலுத்தி ஆராய்ச்சி செய்துதான் அதற்கான தடுப்ப்பூசியை எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். ஸ்மால் பாக்ஸ் கிருமி தன் உடலில் புகுந்தால் மரனம் நிச்சயம் என்று தெரிந்துதான் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதனால்தான் இன்று ஸ்மால் பாக்ஸ் கிருமிகளையே உலகிலிருந்து ஒழிக்க முடிந்தது. அன்று அவர் தன் உயிரைப்பற்றி யோசித்திருந்தால்....

ஏங்க காரில் போகும் போது விபத்து ஏற்பட்டு மரணம் நடக்கிறது. விமானம் விபத்துக்குள்ளாகி பலர் மடிகின்றனர். இவ்வளவு ஏங்க ரோட்டில் நடந்து போகும் போது கூட விபத்துக்குள்ளாகி இறப்பவர்களும் உண்டு. அதனால் எல்லாரும் வீட்டிற்குள்ளேயேவா முடங்கி விட்டோம். ஆனா கார் விமான விபத்துகளில் மடிபவர்களைப்பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால் விண்கலம் வெடித்துச் சிதறியதில் இறந்தவர்களை உலகமே அறியும். கல்பனா சாவ்லா உதாரணம் போதுமே!

//6. Terrorism is Facilitated by the Global Positioning System (GPS), a product of space exploration//

செல்போனைக் கூடத்தான் தீவிரவாதிகள் உபயோகிக்கின்றனர். இணையத்தை உபயோகிக்கின்றனர். அப்போ இவற்றையும் தடை செய்து விடலாமா? தீவிர வாதிகள் GPS இல்லேன்னா வேறு உத்தியை பயன் படுத்துவார்கள். ட்வின் டவர் தாக்குதலுக்கு எந்த GPS டெக்னிக்கை பயன் படுத்தினார்கள்? பயணிகள் விமானத்தைத்தான் பயன் படுத்தினர். அப்போ விமானங்களை தடை செய்து விடுவோமா?!

//7. Small possibility that we are advertising our existence to warlike aliens who may attack us.

அந்த ஏலியன்ஸ் தாக்குத்லை முறியடிக்கவும் நமக்கு இந்த ராக்கெட்டுகள் பயன்படலாம் அல்லவா?!

//8.Space Exploration Can Cause Corporate Corruption
Since it takes a large government bureacracy to successfully engage in space exploration, corruption is inevitable.

ஹி ஹி தேனு corruption இதை நம் நாட்டிலே விண்வெளியில் நடப்பதை விட அதிகம் நடக்கிறது. அப்போ எல்லா துறைகளையும் இழுத்து மூடிட்டு கல் காலத்துக்கு போயிடலாமா?!

எப்பூடி?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்திய விண்வெளி ஆராய்ட்சி முக்கியமா சில துறைகளில் பயன்படுது:

1. இயற்கை சீற்றங்களை கண்டு பிடிக்க....

- முன்பெல்லாம் கடல் கொந்தலிப்பை கூட மனிதனால் கண்டுகொள்ள முடியாமல் போய் கூட்டம் கூட்டமாக உயிரை விட்டாங்க. இப்போ இந்த நாளில் கடலில் மீன் பிடிக்க போறது ஆபத்துன்னு கூட முனாடியே அரிவிச்சுடறாங்க. எப்படி இது முடிஞ்சிது???

- பேய் மழை கொட்டபோது, வெள்ள அபாயம் இருக்கு'னு முன்னாடியே சொல்லி, ஆபத்தான பகுதியில் இருக்கும் மக்கள் யாருன்னும் கண்டு பிடிச்சு முன்னாடியே தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கறாங்க. எப்படி இது முடிஞ்சிது?

2. பூமிக்கு அடியில் கிடைக்கும் மூல பொருள்கள் பற்றிய ஆராய்ச்சி.

- எண்ணெய் கிடைக்குமா'னு தேடுறது தப்பா தெரியல... காரணம்... அது நம்ம நாட்டோட பொருளாதார வளர்ச்சிக்கு ரொம்பவே முக்கியம்.

- மனிதன் வாழ முக்கிய தேவையான தண்ணீர்... அது பூமிக்கு அடியில் எங்க வளமா இருக்குன்னு கூட தான் கண்டு பிடிக்கறாங்க.

3. இராணுவம்.

- தீவிரவாதிகளின் தங்களுக்குள் பரிமாரும் தகவல்களும் அம்பலமாகிறதே. தீவிறவாதிகளுக்கு மட்டுமா அறிவியல் முன்னேற்றம் பயன்படுது???

- வேறு நாட்டு விமானம் அனுமதி இன்றி உள் நுழைதல், அத்துமீரல், அல்லது ராணுவ தாக்குதலை கண்டுபிடிக்க கூட இந்த முன்னேற்றம் நமக்கு உதவுதே.

- நம்ம நாட்டை சுத்தி மற்ற எதிரிகள் என்ன என்ன குழி தோண்டுறாங்க, எங்க என்ன ஆராய்ச்சி பண்றாங்க, அதால என்ன ஆபத்து நம்ம நாட்டுக்கு ஏற்படலாம்'னு கூட கண்டு பிடிக்கறோமே.

- இந்த துறையில் நான் சொல்லி இருக்கிற விஷயங்கள் ரொம்ப ரொம்ப குறைவு.... அத்தனை advantages, space research'ஆல் இந்த துறைக்கு இருக்கு.

4. தொலை தொடர்பு.

- பட்டி தொட்டியெல்லாம் கைப்பேசி.... தொலைத்தொடர்பு வளர்ந்திருக்கே.... இன்று அமெரிகா'ல இருக்க பையன் கால் விரலில் அடிபட்டாகூட அடுத்த நிமிஷம் உங்க காதுக்கு விஷயம் வருதே.... சந்தோஷமா இல்லையா???

5. மருத்துவம்.

- அதிக வெப்பத்திலும் உயிர் வாழும் பேக்டீரியாக்கல் இருப்பதை எல்லாம்கண்டு பிடிச்சிருக்காங்க.

6.கல்வி

- தொலை தொடர்பு மூலம் கல்வி கற்றுகொள்ள உதவுது.

7. விவசாயம்

- மண்ணில் இவ்வளவு இடம் விவசாயத்துக்கு பயன்படுது... இதனால் வருஷத்துக்கு எவ்வளவு லாபம்.... இப்படி பல விஷயங்களை உட்கார்ந்த இடத்தில் கண்டு பிடித்து நாட்டின் நிலையை கண்டரிய உதவுது.

இதெல்லாம் ரொம்பவே குறைவுங்க.... யோசிச்சு பாருங்க, இன்னைக்கு ஒருத்தன் போன் பண்ணி உங்களை மிரட்டிட்டு ஒலிஞ்சுக்க முடியாது.... யார், எங்க இருந்து பண்ணாங்க, இப்பொ எங்க இருக்காங்கன்னு கூட உடனே கண்டு பிடிச்சுடலாம். இது உங்களுக்கு ஒரு பாதுகாப்பை தரலயா??

விண்வெளி ஆரச்சியால் மனிதனின் வாழ்வு மேம்படுகிறது.... அவனை சுற்றி உள்ள ஆபத்துகளை கண்டரிந்து காப்பாற்றிகொள்ள உதவுது.

இப்படி சாப்பாடு முதல்,பாதுகாப்பு வரை உதவுவதுங்க.

அவ்வளவு ஏன்... இதோ உட்கார்ந்த இடத்தில் பல நாட்டில் உள்ள தமிழர்கள் ஒன்னா பேசிகிட்டு இருக்கோமே.... அதுவும் நம்ம பேசிக்க காரணமா இருக்கிறதை பற்றியே வேணுமா வேணாமா'னு வாதாடுறோமே..... இப்ப சொல்ல முடியுமா வேணாம்'னு????? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேன் பாயின்ட்ஸ்ஸோட வந்து கலக்கிட்டீங்க. உங்களுடன் சேர்ந்து வாதாட யாராவது வந்தால் நன்றாக இருக்கும். உங்கள் அணியில் சேர்பவர்களுக்கு விண்வெளியை சுற்றி காட்டுவோம் என்று அறிவிப்பு விடலாமா:-)

கவி, வனி உங்களின் எதிர் வாதமும் நன்றாகவே இருக்கு. கமான் தேன்... உங்களிடமிருந்து பதில் வரும் தானே. ( என்னை இப்படி தனி ஆளா மாட்டிவிட்ட நடுவர் ஒழிகன்னு சொல்ல மாட்டீங்கதானே;-)

வணக்கம்.
நாம் இயற்கையை மாற்றியமைக்க முயற்சிப்பதால்தானே இயற்கையே சீறுகிறது....
கடல் கொந்தளிப்பை நமது முன்னோர்கள் கணிக்கவில்லையா.... கடலை நிலமாக்கினால் அந்த கடல் நீர் எங்காவது வரத்தான் செய்யும்...
வானிலை அறிக்கையில் மழை வரும் என்று சொன்னால் தைரியமாக வடாம் காயப் போடலாம் ஜோக்ஸ் அதிகம்.... அதுவும் இந்தியாவில்... ஒவ்வொரு தடவையும் ஆந்த்ரா வெள்ளத்துல பாதிக்கப்பட்டவர்களை போய்க் கேளுங்கள்...
எண்ணெய் என்ன வெண்ணையே எடுங்க... ஆனால் பூமியைக் குடைந்து ஏற்படும் அந்த வெற்றிடத்தை என்ன செய்வது..... அதை நிரப்ப பாறைகள் அசைவதும்..... நிலநடுக்கங்கள் வரவே செய்யும்...
தீவிரவாதிகள் அரசாங்க ரகசியங்களை தெரிந்து கொள்ளவும் இது பயன்படுகிறதே....
அண்டை நாட்டார் நம் நாட்டை கண்காணிக்கவும் இதே தான் பயன்படுகிறது...
தொலைத் தொடர்பு வளர்ந்திருக்கலாம். ஆனால் நமது எழுத்து திறமை பாதிக்கப் பட்டிருப்பது உண்மை....
மருத்துவத் துறை முன்னேற்றங்கள் .... நோய்களும் பெருகியிருக்கிறதே....
கல்வி.... அப்புறம் ஏன் இத்தனை பள்ளிகளும் கல்லூரிகளும் .....புதிது புதிதாக...
விவசாயம்...அதுதான் நம் நாட்டில் எத்தனை பேர் செய்கிறார்கள்...
அழகப்பபுரத்தில்(நான் பிறந்த ஊர்) விவசாய நிலங்கள் எல்லாம் அநேகமாக மாட மாளிகைகள் ஆகிவிட்டன...
அறுசுவையில் எத்தனை விவசாயியின் மனைவிகள் இருக்கிறார்கள்....
எத்தனை பேர் பிள்ளையை விவசாயி ஆக்குவேன் என்று முடிவெடுப்பார்கள்....
ராக்கெட் அனுப்புனா மட்டும் சோறு கிடைக்காதுங்க.... முதலில் விவசாயத்தை பாப்போம் ...அப்புறமாக டெக்னாலாஜி போட்டு அதை முன்னேற்ற பார்க்கலாம்....
விபத்துக்கு பயந்தால் கார் ஓட்ட முடியாது ..உண்மை... ஆனால் இரண்டு மாட்டு வணிகள் மோதிக் கொண்டதாக கேள்விப்பட்டதில்லை ... நடந்திருப்போமானால் "இப்பவே உருளைக்கிழங்கு மாதிரி உப்பிப் போயிருப்பதால்" என்ற நிலை வராது....
நடுவரே அதெப்படி அப்படி சொல்வேன்.... தீர்ப்பு ரெடிதானே... அதில் கடைசியாக இதை காப்பி பேஸ்ட் பண்ணுங்க போதும்... "இதனால் யாவருக்கும் (வாசிக்கிறவர்கள்) தெரிவிப்பது என்னவென்றால், தேன்மொழி அணி வென்றது ".
பி. கு:
இதில் கூறப்பட்டவை யாரையும் குறிப்பாக குறிப்பிடுவன அல்ல....

//நாம் இயற்கையை மாற்றியமைக்க முயற்சிப்பதால்தானே இயற்கையே சீறுகிறது....
கடல் கொந்தளிப்பை நமது முன்னோர்கள் கணிக்கவில்லையா.... கடலை நிலமாக்கினால் அந்த கடல் நீர் எங்காவது வரத்தான் செய்யும்...//

விண்வெளி ஆராய்ச்சிக்காக கடலை நிர்ப்பினாங்களா? அது எங்க நடந்தது? செந்தோசா பக்கத்தில் கடலை நிரப்பினதைப் பார்த்து குழம்பிட்டீங்களோ?

//வானிலை அறிக்கையில் மழை வரும் என்று சொன்னால் தைரியமாக வடாம் காயப் போடலாம் ஜோக்ஸ் அதிகம்.... //

என்னங்க டாக்டர் நர்ஸ் பற்றியெல்லம்தான் ஜோக்ஸ் எழுதறாங்க. அதுக்காக நாமெல்லாம் மருத்துவ மனைக்கே போகாமலா இருக்கோம்? ஜோக்ஸ் வெறும் ஜோக்ஸ் மட்டும்தான்.

//அதுவும் இந்தியாவில்... ஒவ்வொரு தடவையும் ஆந்த்ரா வெள்ளத்துல பாதிக்கப்பட்டவர்களை போய்க் கேளுங்கள்...//

விண்வெளி ஆராய்ச்சியாலர்கள் சேட்டிலைட் அனுப்பி மழை புயல் வரும் என்ரு எச்சரிக்கத்தான் முடியும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும்தான் உள்ளது. அவற்றை செய்யாமல் விட்டு விட்டு மழை வரும்னு எச்சரிக்கை செய்தவனை குற்றம் சொன்னால் அது நியாயமா?

//தொலைத் தொடர்பு வளர்ந்திருக்கலாம். ஆனால் நமது எழுத்து திறமை பாதிக்கப் பட்டிருப்பது உண்மை....//

எழுத்துத்திறமை பாதிக்கப்பட்டிருக்கா? முன்னாடி பத்திரிக்ககளுக்கு அனுப்பி அவர்கள் நம் படைப்பை பிரசுரிக்க வேண்டும். அல்லது புத்தக வெளியீட்டாளர்கள் பிரசுரிக்க வேண்டும். ஆனால் இன்று இணையத்தில் ப்ளாக் மூலம் எத்தனை எத்தனை படைப்புகள் தினம்தோறும் குவிகின்றன. நல்லவற்றை தேடிப்படிப்பது நம் பொறுப்பு.

//மருத்துவத் துறை முன்னேற்றங்கள் .... நோய்களும் பெருகியிருக்கிறதே....//

சே புதுசு புதுசா நோய் வருதுப்பா. இதுக்கெல்லாம் மருந்து கண்டுபிடிப்பத நிறுத்தி விட்டு எல்லாரும் சாகட்டும் என்று இருந்து விட முடியுமா?

//கல்வி.... அப்புறம் ஏன் இத்தனை பள்ளிகளும் கல்லூரிகளும் .....புதிது புதிதாக...//

மக்கள் தொகை பெருக்கத்திற்கெற்ப கல்விக்கூடங்களும் பெருக வேண்டும் தோழி. ஆனால் அங்கே நடக்கும் தில்லு முல்லுகளுக்கு விண்வெளி ஆராய்ச்சி பொறுப்பல்ல.

//விவசாயம்...அதுதான் நம் நாட்டில் எத்தனை பேர் செய்கிறார்கள்...
அழகப்பபுரத்தில்(நான் பிறந்த ஊர்) விவசாய நிலங்கள் எல்லாம் அநேகமாக மாட மாளிகைகள் ஆகிவிட்டன...//

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விளை நிலங்களில் மாட மாளிகைகள் கட்ட சொல்லவில்லையே! செய்வதையெல்லாம் நாம் செய்து விட்டு எலாவற்றிற்கும் காரனம் வின்வெளி ஆராய்ச்சிதான் என்பது நியாயமா?

//அறுசுவையில் எத்தனை விவசாயியின் மனைவிகள் இருக்கிறார்கள்....//

விவசாயியின் மனைவி இல்லை விவசாயியே இருக்கிரேன். ஊரில் உள்ள எங்கள் நிலங்களில் இன்னமும் பயிர் செய்து கொண்டுதான் இருக்கிரோம். அங்கேயே இருந்து செய முடியாத நிலையில் இருப்பதால் ஆட்கலை வேலைக்கு அமர்த்தி விவசாயம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இன்று என் நிலத்தில் என்ன வேலை நடக்கிரது என்பதைகூட என்னல் நேரடியாக பார்க்க முடியும் என்றால் அதற்கு காரணம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அனுப்பிய சேட்டிலைட்டுகளே!

//ஆனால் இரண்டு மாட்டு வணிகள் மோதிக் கொண்டதாக கேள்விப்பட்டதில்லை ... நடந்திருப்போமானால் "இப்பவே உருளைக்கிழங்கு மாதிரி உப்பிப் போயிருப்பதால்" என்ற நிலை வராது....//

நீங்களும் நானும் மாட்டு வண்டி கட்டிக்கிட்டு குமரியில் இருந்து புறப்பட்டு பங்களாதேஷ் வழியாக மியான்மர் வந்து அங்கிருந்து தாய்லாந்து வழியாக மலேசியா வந்து ஜோஹோர் பாலத்தைக் கடந்து சிங்கை வந்து சேர எத்தனை ஆண்டுகள் ஆகும்? இன்னிக்கு 4 மணி நேரத்தில் சொகுசா வந்து இறங்கிடறோம்.

உருளைக்கிழங்கு மாதிரி உப்பினா என்ன ட்ரெட்மில்லில் ஓடுவோம்ல. எனக்கு ஒரு சந்தேகம் அந்த காலத்தில் எல்லாருமே 50கேஜி தாஜ்மகால்களா?!

பின்குறிப்பு: யாரையுகுறிப்பிடுவன இல்லைன்னு சொன்னாலும் எங்கலுகுபுரியும். இதுக்கெல்லாம் நாங்க கோபப்பட்டுடுவோமா என்ன?! சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்ல :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்