பட்டிமன்றம் 15 : இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா?'

இவ்வார தலைப்பு நமது தோழி திருமதி தாஹிரா பானு அவர்களின் தலைப்பை ஒட்டி, 'இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா?'

என்னைக் கேட்டால் என்னால் ஒரு முடிவிற்கும் வரமுடியவில்லை. ஆகவே தோழிகளே உங்கள் முன் இத் தலைப்பை வைத்துள்ளேன் வழக்கம்போல் வந்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஹஹஹா.... தேன்'கு பதில் சொல்ல வந்தேன், அதுகுள்ள கவிசிவா மேட்டரை முடிச்சுட்டாங்க. ;) இனி எதிர் அணி பாவம். மொதல்லயே ஒத்தை ஆளா பாவமா தான் இருக்கு.... :((....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப வாதாட நேரமில்லை.
தேன்மொழி,
நீங்க சொல்லறதை பார்த்தா ஒண்ணுமே செய்யாம மனுஷன் கையைக்கட்டிண்டு உட்கார்ந்துண்டு இருக்கணும் போல இருக்கே.

ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாத காலத்திலேயே கடல்கோள் வந்திருக்கிறதே. லெமூரியாக் கண்டம் காணாமல்போன காலத்தில் யாரும் விண்வெளி ஆராய்ச்சி செய்யவில்லையே.
தொலை தொடர்பால் எழுத்துத்திறமை பாதிக்கப்படுமா? நல்ல தமாஷ். அம்மணி. அதிகம் படிக்காத பெண்கள் கூட இன்று ப்ளாக் களில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆராய்ச்சிகளால் எல்லாம் விவசாய நிலங்கள் மாட மாளிகைகள் ஆகவில்லை.

அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெ.மாமி முதலில் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நல்ல கருத்துக்கள் சொல்லி இருக்கிறீர்கள்.

தேன், "மழை இன்றோ நாளையோ வந்தாலும் வரலாம்" என்ற வானிலை அறிக்கையையா சொல்றீங்க;)

கவி போட்டீங்களே ஒரு போடு நானே ஒரு விவசாயிதான்னு. தேன்மொழி அணி என்ன சொல்லப் போறாங்கன்னு பார்ப்போம்.

நான் தேன் கூடத்துணைக்கு வாதாட வந்துட்டேன், தேவையில்லை அணிக்குத்தான்.

தலைப்பை சரியாப்பாருங்க. இந்தியாவில் நிறைய கோடிகள் செலவழித்து விண் ஆராய்ச்சி தேவையா? ஆராய்ச்சி தேவையே இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. இந்தியாவிற்கு தேவையில்லை என்றுதான் சொல்கிறோம். வானிலை ஆராய்ச்சி முன்பே தெரிந்து என்ன பயன்? தகுந்த முன்னேற்பாடுகளைத்தான் நம் அரசாங்கம் செய்வதில்லையே.

நீங்கள் சொல்லும் எல்லா நல்ல விஷயங்களையும் ஒத்துக்கொள்கிறோம், அதை மற்ற நாடுகள் பார்த்துக்கொள்ளட்டுமே. இந்தியா போன்று ஏழை நாட்டில் இவ்வளவு காசைப்போட்டு ஆராய்ச்சி செய்வதை விட்டு அதில் வேறு நல்ல திட்டங்கள் கொண்டு வரலாமே!

அப்பாடி நிஜமாகவே அணியாகிவிட்டோம்... மாலினி நன்றி.
இயற்கையை டிஸ்டர்ப் பண்ணுகிறோம் என்ற நோக்கில் தான் கடலை நிலமாக்குகிறோம் என்றேன்....
//விண்வெளி ஆராய்ச்சியாலர்கள் சேட்டிலைட் அனுப்பி மழை புயல் வரும் என்ரு எச்சரிக்கத்தான் முடியும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும்தான் உள்ளது. அவற்றை செய்யாமல் விட்டு விட்டு மழை வரும்னு எச்சரிக்கை செய்தவனை குற்றம் சொன்னால் அது நியாயமா?//
அதனால்தான் முதலில் இந்திய அரசாங்கம் இதற்கு செலவழிக்கட்டும் என்கிறோம்....
இன்னும் நம் நாட்டில் நல்ல குடிநீர் கிடைக்காத ஊர்கள் எத்தனை.... அவர்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க முதலில் முயற்சிக்காமல் சந்திரனில் தண்ணீர் இருக்குமோ என்பதில் அதிக ஆர்வம் காட்டுவது தவறாக தோன்றுகிறது...
Technological developments are irreversible... but my point of view is that if we have not done all those things mankind would have lead a peaceful life....
அதாவது இன்று கட்டடங்களால் நிறைந்திருக்கும் ஊர்களைப் பார்க்கும்போது- முந்தி காலத்தில் ரொம்ப பசுமையாக இருக்கும் இப்போன்னு ...ஒரு பெருமூச்சு விடுவோமே - அதுமாதிரி...
கவி ரொம்ப நன்றி.... இதுவும் புரியும்.

//நீங்கள் சொல்லும் எல்லா நல்ல விஷயங்களையும் ஒத்துக்கொள்கிறோம், அதை மற்ற நாடுகள் பார்த்துக்கொள்ளட்டுமே.
இந்தியாவிற்கு தேவையில்லை என்றுதான் சொல்கிறோம்//

இந்தியா ஏழைநாடாக இருக்கலாம்.ஆனால்..

டாக்டர் அப்துல்கலாம் போல விண்வெளி

ஆராய்ச்சியில் அறிவும் ஆர்வமும் கொண்ட

புத்திசாலிகள் நம் இந்தியாவில் இருக்கிறார்களே..:-)

அவர்களை என்ன செய்ய வேண்டும்

எதிரணித்தோழிகளே……!!!

இந்தியாபோன்ற ஏழை நாட்டில் பிறந்து கொண்டு

விண்வெளி ஆராய்ச்சிக்கெல்லாம் ஆசைபடக்கூடாது ….

.”ஏழைக்கேத்த எள்ளுருண்டைப்போல”..நம்ம

நாட்டின் நிதிநிலைமைக்கு பொருந்தும்படி எந்த

துறைக்கு குறைந்த செலவாகிறதோ அந்த

ஆராய்ச்சியை மட்டும் செய்யுங்கள்…..என்று

அவர்களை முடக்கி போட்டு விட சொல்கிறீர்களா?

ஆராய்ச்சியில் வரும் கண்டுபிடிப்புகள் ,வசதிகள்

எல்லாவற்றையும் செலவு செய்து அனுபவிக்கும்

சாதாரண மனிதர்கள்தான் நாம்…..

அப்படியிருக்க ஆராய்ச்சி மட்டும் வேண்டாமென்றால் எப்படி?

//இந்தியாவில் நிறைய கோடிகள் செலவழித்து விண் ஆராய்ச்சி தேவையா? ஆராய்ச்சி தேவையே இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. //

அதிகம் செலவில்லாமல் விண்வெளியில் ஆராய்ச்சி

செய்வது எப்படி என்றுகூட ஆராய்ச்சி செய்தால்தான்

கண்டுபிடிக்க முடியும்…:-

நம் விண்வெளி ஆராய்ச்சி உலக நாடுகளுக்கிடையே

நம் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதற்காக

மட்டுமில்லை……அவர்களிடமிருந்து தற்காத்து

கொள்வதற்கும்தான்…!!

என்பதால் விண்வெளி ஆராய்ச்சி நம் நாட்டிற்கு

அவசியமே என்று சொல்கிறோம்….

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மாலி வருகைக்கு நன்றி.
//இந்தியா போன்று ஏழை நாட்டில் இவ்வளவு காசைப்போட்டு ஆராய்ச்சி செய்வதை விட்டு அதில் வேறு நல்ல திட்டங்கள் கொண்டு வரலாமே!//

யோசனையும் நன்றாகத்தான் இருக்கிறது.

//இன்னும் நம் நாட்டில் நல்ல குடிநீர் கிடைக்காத ஊர்கள் எத்தனை.... அவர்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க முதலில் முயற்சிக்காமல் சந்திரனில் தண்ணீர் இருக்குமோ என்பதில் அதிக ஆர்வம் காட்டுவது தவறாக தோன்றுகிறது...

தேன், உங்க உண்மையான வருத்தம் புரிகிறது.

//இந்தியா ஏழைநாடாக இருக்கலாம்.ஆனால்..

டாக்டர் அப்துல்கலாம் போல விண்வெளி

ஆராய்ச்சியில் அறிவும் ஆர்வமும் கொண்ட

புத்திசாலிகள் நம் இந்தியாவில் இருக்கிறார்களே..:-)

அவர்களை என்ன செய்ய வேண்டும்

எதிரணித்தோழிகளே……!!!//

இளவரசி, நீங்க கேட்பதும் நல்ல கேள்விதான்.

நடுவருக்கு இப்ப புதனும், சுக்கிரனும் ஆட்டம் காண ஆரம்பிக்குது :-) திங்களன்று கொஞ்சம் லேட்டாக தீர்ப்போடு வருகிறேன். அதுவரை யாராவது பதிவு போடவேண்டுமென்றால் போடலாம்.

தீர்ப்பு சொல்லும் நேரம் வந்து விட்டது. நம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விவாதிக்க வேண்டிய தலைப்பு. இத் தலைப்பை குடுத்த திருமதி. தாஹிரா பானுவிற்கு முதலில் என் நன்றிகள்.

விண்வெளி ஆராய்ச்சிகள் மூலம் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று அந்த அணியில் வாதாடிய தோழிகள் மிகவும் நன்றாக எடுத்து காட்டினர். உதாரணமாக வானிலை ஆராய்ச்சி, நீர் வளங்களை கண்டறிதல், தொலை தொடர்பு கல்வி போன்று.

ஆனால் அவற்றின் பயன்கள் எந்த அளவில் சாதாரண மக்களை சென்று அடைகிறது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
விவசாய துறையில் முன்னேற்றம் அடைந்திருந்தால் விளை நிலங்கள் அதிகரித்து இருக்க வேண்டுமே. ஆனால் விளை நிலங்களில் எல்லாம் இன்று கட்டடங்கள் அல்லவா எழுப்பப் படுகிறது. ஸாட்டிலைட் மூலம் நீர் ஆதாரங்களை கண்டுபிடிக்கலாம். கண்டு பிடித்து அதையும் ப்ளாட் போட்டு விற்பதற்கா!!

தொலை தொடர்பு கல்வி இருக்கட்டும். முதலில் எத்தனை கிராமங்களில் நல்ல பள்ளிகள் இருக்கிறது? சில கிராமங்களில் தொலை தூரம் சென்றுதான் பிள்ளைகள் கல்வி கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். என் புகுந்த வீடு இருக்கும் ஊரில் இன்னும் ஒரு ஆற்றின் தரைப் பாலத்தை கடந்துதான் நல்ல பள்ளிக்கு போக முடியும். மழை பெய்து வெள்ளம் வந்தால் எல்லாம் போச்சு. இது போல் எத்தனயோ ஊர்கள் நம் நாட்டில் உண்டு.

மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து (இதெல்லாம் நம் நாட்டில் எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை) இதிலெல்லாம் தன்னிறைவு அடையாமல் செய்யப்படும் Exploration ப்ரொஜக்ட்களை செய்வது சரியே என்பதை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

நிலவில் நீர் இருக்கிறது என்று கண்டு பிடித்ததும் NASA உடன் சேர்ந்து செய்த ஆராய்ச்சி போல. ஏனென்றால் அவ்வாறு கண்டு பிடித்ததை நாஸா அறிவித்ததபோது இங்கு அமெரிக்காவில் இந்தியாவைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை:-( இதை ஏன் சொல்கிறேன் என்றால் என்று நம் நாட்டில் மக்களின் அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு பெறுகிறதோ அப்போத்துதான் நம் நாட்டிற்கு பெருமை வந்து சேரும். அதுவரை நாம் என்னதான் செய்தாலும் வெளி உலகிற்கு இந்தியா என்றால் ‘ஏழை நாடு' தான்.

இவ்வளவு இருந்தும் நம் நாட்டில் இன்னும் விவசாயத்தை சில பேர் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களுக்காவது 'மழை வந்தாலும் வரும்' என்று கூறுவதை விட்டு விட்டு வெளி நாடுகளுக்கு நிகராக துல்லியமாக வானிலை அறிக்கைகளை தரலாமே. தொலை தொடர்பு கல்வியும், தொலைதூர மருத்துவமும் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும்.

மழை வந்தால், ' ஃபோன் வேலை செய்யலை', 'இன்டர்நெட் கனெக்ஷன் இல்லை' என்ற அளவிற்குத்தான் இன்னும் நம் நாட்டில் தொலை தொடர்பு வசதி இருக்கிறது. அதிலும் இன்னும் மேம்பட வேண்டும்.

இப்படி மக்களிற்கு தேவையான எத்தனையோ விஷயங்களில் இன்னும் ஆராய்ச்சியும் மேம்பாடும் தேவைப் படுவதால் விண்வெளி ஆராய்ச்சிக்கு செலவு செய்வது சரியே என்று தீர்ப்பு கூறுகிறேன்.

கவி, வனி,தேன், ஜெ.மாமி,இளவரசி, மாலி தீர்ப்பிற்கு வெயிட் செய்தீர்கள் தானே:) உங்களின் அனைவரின் பங்களிப்பிற்கும் என் நன்றிகள். அனைவரின் கருத்துக்களும் மிகவும் அருமை.

தேன் மொழி , நீங்கள் எதிரணிக்கு வராவிட்டால் இப் பட்டிமன்றம் சிறப்பு அடைந்திருக்காது. ஒரு ஆளாக வாதாடினாலும், கூறியது அனைத்தும் சிறந்த கருத்துக்கள். மிகுந்த யோசனைக்குப் பிறகே இத் தீர்ப்பிற்கு வந்தேன். நீங்க என்ன டோஸ் கொடுத்தாலும் வாங்க ரெடியாக இருக்கிறேன்:-)

வின்னி... ஏன் ஏன் ஏன் இப்படி??? உங்க தீர்ப்பு வந்திருக்குமேன்னு நடு ராத்திரியில் படிக்க வந்தேன்.... எப்படி தோத்துட்டோம்'னு நினைக்கிற மாதிரியே பிள்டப் குடுத்துட்டு கடைசியில ஜெயிச்சுட்டொம்'னு சொல்லிபுட்டீங்க!!! மிக்க மகிழ்ச்சி. :) இருந்தாலும் இப்படி டென்ஷன் பண்ணிருக்கப்புடாது. நல்ல தலைப்பு.... நம்ம தோழிகள் பலர் வராத காரணமே தெளிவா சொல்ல தெரியாம தான். ஆனா இப்போ பலருக்கும் இது பற்றி சின்ன தகவலாது தெரிந்திருக்கும். அதுக்கு உங்களுக்கு முதல் நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்