கிரில்டு ஹமூர் ஃபிஷ் ஃபில்லட்

image

வழங்கியவர் : asiya omar

தேதி : செவ்வாய், 02/02/2010 - 20:19

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் : 40 நிமிடம்

பரிமாறும் அளவு : 2-4 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • ஹமூர் ஃபிஷ் ஃபில்லட் - 600 கிராம்
  • எலுமிச்சை - ஒன்று
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • சிக்கன் டிக்கா பவுடர் - ஒரு தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • ரெட் கலர் - பின்ச்
  • உப்பு - தேவைக்கு

 

  • ஃபிஷ் ஃபில்லட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • சிக்கன் டிக்கா பவுடர், மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, ரெட் கலர், உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து மசாலா தயார் செய்துக் கொள்ளவும்.
  • தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவை ஃபிஷ் ஃபில்லட்டில் தடவி குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்பு மைக்ரோவேவில் க்ரில் செட் செய்து டைம் செட் செய்யவும், 5 நிமிடம் முற்சூடு செய்து க்ரில் ப்ளேட்டில் மீனை வைத்து சுமார் 40 நிமிடம் கழித்து எடுக்கவும்.
  • 20 நிமிடத்தில் மீனின் ஒரு பக்கம் வெந்து விடும், திருப்பி போட்டு மறுபடி 20 நிமிடம் வைத்து எடுத்தால் ஃபில்லட் முழுமையாக தயாராகி விடும். கவனமாக வெளியே எடுக்கவும்.
  • சுவையான சத்தான க்ரில்டு ஃபிஷ் ஃபில்லட் ரெடி. இதனை வெஜ் சாலட்டுடன் பரிமாறவும்