பொன்னாங்கண்ணி சாம்பார்

தேதி: February 4, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

கீரை - ஒரு கட்டு
வடகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - கால் கப்
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்


 

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கீரை அலசி விட்டு போட்டு தண்ணீர் சேர்த்து அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு வேக விடவும்.
தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து 1 1/2 கப் அளவு புளிக்கரைச்சல் எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் போட்டு வதக்கிய பிறகு கீரையை சேர்க்கவும்.அதன் பின்னர் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுது சேர்க்கவும்.
கடைசியாக புளிக்கரைசல், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.
சுவையான ஆரோக்கியமான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் ரெடி. இந்த கீரை சாம்பார் குறிப்பினை நமக்காக செய்து காட்டியர் <b> செல்வி. ஸ்ரீதுர்கா </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Ponnangani keerai sambar super . i dint know how to cook it . first time i cooked . thanks for your recipe