வழங்கியவர் : sumathi_thiru
தேதி : வெள்ளி, 05/02/2010 - 15:26
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- இறால் - கால் கிலோ
- சின்ன வெங்காயம் - 15
- முருங்கைகாய் - 2
- தக்காளி - ஒன்று
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- புளி - சிறிய எலுமிச்சை அளவு
- தேங்காய் - அரை மூடி
- பெரிய வெங்காயம் - ஒன்று
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- கலந்த மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி
- சோம்பு - அரை தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
- ரீஃபைண்டு ஆயில் - 3 தேக்கரண்டி
- கருவடகம் - ஒரு தேக்கரண்டி
- கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
![]() |
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இறாலை தோலுரித்து கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். புளியுடன் தண்ணீர் ஊற்றி கரைத்து 1 1/2 கப் அளவு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். |
![]() |
மிக்ஸியில் தேங்காய் துருவல், சோம்பு, துண்டுகளாக நறுக்கின தக்காளி, நறுக்கின பெரிய வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். |
![]() |
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த வெங்காய தக்காளி விழுதை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சலை ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றாக கரைத்துக் கொள்ளவும். |
![]() |
வாணலியில் தேங்காய் எண்ணெய் மற்றும் ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி காய்ந்ததும் வடகத்தை போட்டு தாளித்து அதில் இரண்டாக நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும். |
![]() |
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் முருங்கைகாயை போடவும். |
![]() |
இறால் மற்றும் முருங்கைக்காய் போட்ட பிறகு, புளிக்கரைசலுடன் கரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி அரை கப் தண்ணீர் ஊற்றவும். |
![]() |
பிறகு ஒரு முறை நன்கு கிளறி விட்டு தட்டை வைத்து மூடி 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். |
![]() |
குழம்பு நன்கு கொதித்து பொங்கி வரும் போது இறக்கி வைத்து விடவும். இறக்குவதற்கு சற்று முன்பு 4 பூண்டு பல்லை தட்டி அதில் போட்டு இறக்கி விடவும். |
![]() |
இப்போது சுவையும் மனமும் நிறைந்த இறால் குழம்பு தயார். இதனை செய்த அன்றே சாப்பிடுவதை விட மறுநாள் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். |
![]() |
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு . சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார் |
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்










ஹாய் சுமதி உங்கள் றால் குழம்பு பார்க்க நன்றாக இருக்கின்றது.செய் முறையும் அவ்வளவு கஷ்டமாக தெரியவில்லை.பார்க்கும் போதே செய்தது சாப்பிடவேண்டும் போல் உள்ளது. நிச்சயம் நாளை அல்லது நாளைய மறுதினம் செய்யலாம் என எண்ணுகின்றேன். செய்து பார்த்து விட்டு கருத்து தருகின்றேன்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
hai
Yesterday i tried ur shrimp kolambu, it came out really well thanks a lot.
There is some more leftover of kolambu and it very tasty than yesterday.
My husband really enjoyed and grand me for such super dish.
Its all go for u.
Once again thank u for this wonderful dish
Next time i try to type in tamil.
இறால் குழம்பு மிக நன்றாக இருந்தது.
வாழ்த்துகள்
அன்புடன்
ஜெயா
ஹாய் சுமதி இன்று றால்குழம்பு செய்தேன். நன்றாக வந்தது மிகவும் ருசியாகவும் இருந்தது
முருங்கைகாய் றால் கொபிநேசன் மிகவும் நன்று. நல்ல ரேசப்பி தந்த உங்களை பாராட்டுகின்றேன்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
Hi sumathy madam,i tried ur prawn kuzhambu very tasty.thanks for ur receipe.
Kala
Thanks Mrs. Sumathi for இறால் குழம்பு recipe,
samayal kathukanum.. thts main reason.. hw to clean the eeraal...??