வழங்கியவர் : ayeesripugazhenthi
தேதி : Sat, 06/02/2010 - 16:39
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- பாதாம் - 6
- முந்திரி - 10
- பச்சரிசி - ஒரு மேசைக்கரண்டி
- பசும்பால் - ஒரு டம்ளர்
- சீனி - 6 தேக்கரண்டி
- முட்டை - ஒன்று
- ஏலக்காய் - 2
- நெய் - 2 தேக்கரண்டி
- பட்டை - அரை இன்ச்
![]() |
மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். |
![]() |
பாதாமை சுடுத்தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். அதைப்போல அரிசியையும் ஊற வைக்கவும். |
![]() |
அதன் பின்னர் மிக்ஸியில் பாதாம், 6 முந்திரி, அரிசி, ஏலக்காய் இவைகளை போட்டு சிறிது பால் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும். |
![]() |
அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி ஒன்றாக சேரும்படி ஒரு முறை அரைத்து எடுக்கவும். |
![]() |
அரைத்தவற்றை மீதம் உள்ள பாலுடன் கரைத்து வைத்துக் கொள்ளவும். |
![]() |
அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை போட்டு மீதி உள்ள முந்திரியை சிறியதாக நறுக்கி அதில் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதில் கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி மிதமான தீயிலேயே வைத்திருக்கவும். |
![]() |
கொதி வரும் போது ஒரு கிளறு கிளறி விட்டு நன்கு திரண்டார் போல் வரும் வரை மூன்று நிமிடம் கொதிக்க விடவும். |
![]() |
இப்போது சீனி, 2 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். சீனி கரைந்ததும் நன்கு வெந்து உதிரியாக இருக்கும். |
![]() |
கலவை வெந்து உதிர் உதிராக வந்ததும் இறக்கி வைத்து விடவும். இறக்கியதும் வறுத்த முந்திரியை சேர்த்து பரிமாறவும். |
![]() |
சுவையான வட்டிலாப்பம் கஞ்சி ரெடி. இந்த குறிப்பினை திருமதி. ஆயூஸ்ரீ புகழேந்தி அவர்கள் திருமதி. அப்சரா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்து பார்த்ததை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். |
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்










ஆயிஸ்ரீ .....தங்கள் செய்முறை விளக்கத்தோடு மிகவும் அழகாக வந்துள்ளது.இதை வெளியிட்ட அட்மினுக்கும்,செய்து பார்த்து வெளியிட்ட தாங்களுக்கும் எனது நன்றிகள்.மென்மேலும் குறிப்புகள் வெளியிட வாழ்த்துக்கள்....
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.