ரவை பூ பணியாரம்

தேதி: February 10, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

பொடி ரவை - ஒரு கிலோ
முட்டை - ஒரு கப்
சீனி - ஒரு கப்
எண்ணெய் - ஒரு கப்
ஜாம் - 500 கிராம்
தேங்காய் பூ - 250 கிராம்(உலர்ந்தது)
சோடா உப்பு - ஒரு தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, சீனி, எண்ணெய் மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும். அதில் சோடா உப்பையும் சேர்க்கவும். அதனுடன் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். கையில் உருண்டை பிடிக்கும் பதம் வந்ததும் ரவை சேர்ப்பதை நிறுத்தவும்.
இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து 250° சூட்டில் அவனில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து பார்த்தால் மேலே லேசாக வெடித்து வந்திருக்கும். அப்போது எடுத்து விடவும்.
ஜாமுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும்.
பணியாரத்தை அவனிலிருந்து எடுத்து செய்து வைத்திருக்கும் ஜாமில் போட்டு தோய்த்து எடுக்கவும்.
தேய்த்து எடுத்த பணியாரத்தை தேங்காய் பூவில் போட்டு பிரட்டி எடுத்து வைக்கவும்.
சுவையான ரவை பூ பணியாரம் ரெடி. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சுவையான பணியாரத்தை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. ரஸியா நிஸ்ரினா </b> அவர்கள்.

தேங்காய் பூ உலர்ந்தது பாக்கெட்டில் இருக்கும். மாவை உருண்டை பிடித்து வைக்கும் போது கொஞ்சம் தள்ளி தள்ளி இடைவெளி விட்டு வைக்கவும். பணியாரம் வெள்ளை நிறமாக இருக்கும் போதே அவனிலிருந்து எடுத்து விடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சலாம் ரஸியா(நிஸ்ரினா)! நலமா? குழந்தைகளுக்கு சுலபமாக செய்துக்கொடுக்கும் ஒரு அருமையான ரெசிபி! இதைப்பார்க்கும்போது இன்று கொட்டிய Neige (ஸ்நோ) ல் வைத்திருந்து எடுத்த மாதிரி அழகா இருக்கு :-) Evry ல் Neige எல்லாம் எப்படி உள்ளது ?

ஹாய் ரஸியா...நலமாக இருக்கின்றீர்களா...?
ஆஹா...அழகான சுவையான குறிப்பினை கொடுத்துள்ளீர்கள்.பார்க்கவே சாப்பிட தூண்டுகின்றது.
மிக அருமை ரஸியா...
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ரிகா அவர்கள் தயாரித்த ரவை பூ பணியாரத்தின் படம்

<img src="files/pictures/aa378.jpg" alt="picture" />

தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்,பாராட்டியமைக்கு நன்றி!இந்த வருடம் நல்லா நேஜ் கொட்டிவிட்டது.நானும் என் மகளும் நல்லா விளையாடிவிட்டு தான் வந்தோம்.நீங்கள் எந்த இடத்தில் இருக்கீங்க?

Eat healthy

பார்த்தால் மட்டும் போதாது,முடிந்தால் செய்து பாருங்கள்.மிகவும் சுலபம் & ரொம்ப நல்லா இருக்கும்,பலரின் பாராட்டை வாங்கி தந்த ரெசிபி இது.

Eat healthy

நீங்கள் அனுப்பிய படம் பழைய அருசுவையில் தெரிந்தது.ஆனால் இப்போது பார்க்க முடியவில்லை.இந்த ரெசிபி எப்படி இருந்தது?உங்களுக்கு பிடித்திருந்ததா?நன்றி!!!

Eat healthy