சிக்கன் குழம்பு ஈஸி முறை

image

வழங்கியவர் : santho

தேதி : வியாழன், 11/02/2010 - 06:06

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

3.666665
6 votes
Your rating: None
 

 

  • சிக்கன் - 1/2கிலோ
  • பெரிய வெங்காயம் - 1
  • சின்ன வெங்காயம் - 5
  • தக்காளி - 1சிறியது (தேவைப்பட்டால்)
  • இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
  • தேங்காய் பால் - 3 ஸ்பூன்
  • சீரகம், மிளகு,சோம்பு - தலா 1 ஸ்பூன்
  • குழம்பு பொடி - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • கொத்தமல்லி இலை - சிறிது
  • நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

 

  • சிக்கனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும், சின்ன, மற்றும் பெரிய வெங்காயம்,தக்காளி நறுக்கி கொள்ளவும்
  • கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, சோம்பு சேர்த்து வதக்கி விழுதுபோல் அரைத்து கொள்ளவும்
  • ஒரு பெரிய கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயத்தை வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  • இதனுடன் சிக்கனை சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு பின் அரைத்தவிழுது, குழம்பு பொடி, தேங்காய்பால்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்
  • சிக்கன் வெந்தபின் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

Note:

இதை இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் பயன்படுத்தலாம், குழம்பு பொடி என்பது சாதாரண குழம்பு வைக்க பயன்படுத்தும் பொடியே போதும், சிக்கன் குழம்பு பொடி தேவையில்லை.