ரஸ்க் சாக்லெட்

தேதி: February 11, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

மேரி பிஸ்கெட் - 6
ரஸ்க் - 6
கோக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
ப்ரூ தூள் - ஒரு மேசைக்கரண்டி
முந்திரி - 10
கன்டன்ஸ்ட் மில்க் - அரை கப்


 

மேரி பிஸ்கெட், ரஸ்க் இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ரஸ்க் பொடி, மேரி பிஸ்கெட் பொடி, கோக்கோ பவுடர், ப்ரூ தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அதனுடன் நறுக்கின முந்திரி, கன்டன்ஸ்ட் மில்க் சேர்த்து ஒன்றாக பிசையவும்.
பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி ஒரு தட்டில் வைத்து ப்ரீசரில் 2 மணி நேரம் வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து எடுத்து வட்டமாக வெட்டி பரிமாறவும்.
சுவையான எளிதில் செய்யக்கூடிய ரஸ்க் சாக்லெட் ரெடி.
பிராமண சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள <b> திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன் </b> வழங்கிய குறிப்பு இது. மாதர் சங்கத் தலைவி, சமூக சேவகி, நல்ல குடும்பத்தலைவி என்று பல முகங்களை உடைய இவர், அறுசுவை நேயர்களுக்கு ஏராளமான பிராமண உணவுகள் தயாரிப்பை செய்து காட்டவுள்ளார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்