முடக்கத்தான் தோசை

தேதி: February 13, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆய்ந்த முடக்கத்தான் கீரை - 2 கை பிடி அளவு
புழுங்கல் அரிசி - 2 கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி


 

புழுங்கல் அரிசியை நான்கு மணிநேரம் ஊற வைக்கவும். மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாக பொடி செய்துக் கொள்ளவும். கீரையை ஆய்ந்து சுத்தமாக இரண்டு முறை கழுவிக் கொள்ளவும்.
ஊற வைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு அதனுடன் கீரையை போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து கரைத்து 5 மணிநேரம் வைக்கவும்.
தோசை ஊற்றும் போது அரைத்த மாவுடன் மிளகு, சீரகப் பொடியை போட்டு கலந்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்த மாவை ஒரு கரண்டி ஊற்றி தேய்த்து மேலே எண்ணெய் ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான ஆரோக்கியம் நிறைந்த முடக்கத்தான் தோசை ரெடி. கார சட்னியுடன் பரிமாறலாம்.
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் <b> திருமதி. சுமதி திருநாவுக்கரசு </b> . சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் usaயில் இருக்கிறான் இந்த கீரை தவறை எந்த கீரை உபயாக்கிலாம்.

சுமதி... நல்ல ஆரோக்கியமான குறிப்பு. வீட்டில் அப்பா'கு செய்து தந்தோம், நல்லா இருக்குன்னு சொன்னார். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுமதி மேடம் முடக்கத்தான் தோசை மிளகு, சீரகம் சேர்க்காமல்தான் செய்வோம். உங்கள் முறைப்படி நேற்று செய்து சாப்பிட்டோம் ரொம்ப நல்லா இருந்தது. நன்றி.