தயிர் ரசம்

வழங்கியவர் : திருமதி. நிர்மலா சத்தியமூர்த்தி

தேதி : திங்கள், 15/02/2010 - 11:58

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

4.666665
3 votes
Your rating: None
 

 

  • தயிர் - அரை கப்
  • தேங்காய் துருவல் - கால் கப்
  • மிளகாய் வற்றல் - 4
  • சின்ன வெங்காயம் - 7
  • பொட்டுக்கடலை - ஒரு மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • மிளகு - 15
  • பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
  • பூண்டு - 3 பல்
  • உப்பு - அரை தேக்கரண்டி

 

 

சின்ன வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றல் இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். மற்றப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

மிக்ஸியில் மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், மிளகு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு பொடிச் செய்துக் கொள்ளவும்.

பொடித்தவற்றுடன் பொட்டுக்கடலையை போட்டு அரைக்கவும். பிறகு அதில் வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஒரு மேசைக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் மிக்ஸியில் அரைத்த தேங்காய், பொட்டுக்கடலை கலவையை ஊற்றி கலக்கவும்.

அடுப்பில் வைத்து கொதிக்கவிடாமல் மிகவும் எளிமையாகவும், உடனடியாகவும் தயாரிக்ககூடியது இந்த தயிர் ரசம்.

இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. நிர்மலா சத்தியமூர்த்தி அவர்கள். சமையல் கலையில் பெரிதும் ஆர்வம் கொண்டவர். சமையலில் பல வருட அனுபவம் கொண்ட இவர், தான் கற்றுக் கொண்டவற்றை அறுசுவை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளார்.