மிருதுவான சுவையான அப்பம்......

2 பேருக்கு
***********

பச்சரிசி - 2கப்(gulfல் உள்ளவர்கள் LuLu பச்சரிசி வாங்குங்கள்)

2 மணிநேரம் ஊறவைத்து பிறகு அதனுடன் சாதம் 1/2 கை தேங்காய் துறுவியது 1 கை சேர்த்து நிறைய தண்ணீர் விட்டு தண்ணியாக அரைத்து கொள்ளவும்(தோசை மாவைவிடதண்ணீராக அரைக்க வேண்டும்) அரைக்கும்போதே தண்ணீராக அரைக்க வேண்டும் அரைத்த பிறகு சேர்க்க கூடாது.அரைத்த பின்பு சிறிது(அதிகமாக சேர்க்க கூடாது) ஈஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கி பின்னர் தேவையான உப்பு சேர்த்து,கடைசியில் சிறிது சீனி சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடி விட வேண்டும்

தேவையெனில் புளிக்க வைப்பதற்கு ஓவனுக்குள் வைத்து 8 மணி நேரம் வைத்து விடுங்கள்(ஓவன் ஆன் பண்ண கூடாது)8 மணி நேரத்திற்கு பிறகு எடுத்து பாருங்கள் நன்றாக கிண்டி விடுங்கள்,இன்னும் எவ்வளவு நேரம் புளிக்க வேண்டுமோ அதற்கு ஏற்றார் போல் வைத்து கொள்ளுங்கள்

நன்கு புளித்திருந்தால் பார்ப்பதற்கு முட்டை முட்டைபோல்(Bubbles)நுரைகட்டியது போல் இருக்கும்.சுடுவதற்கு 5நிமி முன்னர் சோடா உப்பை சிறிது நீரில் கலந்து நன்றாக கலக்கி சுடுங்கள்

சுடுவதற்கு முன்
முதலில் அடுப்பில் சட்டியை வைத்து சிறிது சூடானவுடன் அணைத்துவிட்டு மாவை ஊற்றி சுத்திவிட்டு மூடி பிறகு அடுப்பை பற்ற வைக்க வேண்டும்

மேலே உள்ள அப்பத்தில் சோறு 1 கை என்று கூறிவிட்டேன், 1 கை மிக அதிகம் 5 டேபிள் ஸ்பூன் அளவு சோறு போட்டால் போதும்,தேங்காயையும் சிறிது குறைத்து கொள்ளவும்

மேலும் சில பதிவுகள்