வழங்கியவர் : jayalakshmi_sri
தேதி : செவ்வாய், 16/02/2010 - 13:08
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- முள்ளங்கி - 3
- பெருங்காயத் துண்டு - குண்டு மணி அளவு
- மிளகாய் வற்றல் - 2
- பொட்டுக்கடலை - 1 1/2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- புளி - சிறு நெல்லிக்காய் அளவு
- உப்பு - 3/4 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - கால் கப்
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- கொத்தமல்லி - 2 கொத்து
![]() |
முள்ளங்கியை தோல் சீவி விட்டு காரட் துருவலில் வைத்து துருவிக் கொள்ளவும். மேற்சொன்ன மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். |
![]() |
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், அரை தேக்கரண்டி உப்பு, மிளகாய் வற்றல், புளி, பொரித்த பெருங்காயத்துண்டு, பொட்டுக்கடலை, அரை தேக்கரண்டி கடுகு, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். |
![]() |
ஒரு பாத்திரத்தில் துருவிய முள்ளங்கியை போட்டு அதனுடன் அரைத்த விழுதை போடவும். |
![]() |
கறிவேப்பிலையை கையில் எடுத்துக் கொண்டு அதனுடன் கால் தேக்கரண்டி உப்பு வைத்து கசக்கி அதை முள்ளங்கியுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும். மேலே கொத்தமல்லியை தூவவும். கறிவேப்பிலையுடன் உப்பு சேர்த்து கசக்கி விட்டு போட்டால் வாசனையாக இருக்கும். |
![]() |
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரை தேக்கரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளித்து அதை முள்ளங்கியுடன் போடவும். |
![]() |
எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகும்படி நன்கு கலந்து வைக்கவும். சுவையான முள்ளங்கி ஆவலு பச்சடி ரெடி. |
![]() |
அறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார். |
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்







5 நிமிடங்கள் 9 sec முன்பு
7 நிமிடங்கள் 54 sec முன்பு
14 நிமிடங்கள் 26 sec முன்பு
48 நிமிடங்கள் 17 sec முன்பு
ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 38 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு